Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமையலறையில் இதை மட்டும் வைக்காதீங்க..கிச்சனில் இந்த பொருள் இருந்தாலே வீட்டில் பணக்கஷ்டம் வந்துருமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய வீட்டிலுள்ள சமையலறையை சரியாக வைத்திருந்தாலே, வீட்டிற்குள் வறுமை அண்டாது என்பார்கள்.. அந்தவகையில், சில குறிப்பிட்ட வாஸ்து டிப்ஸ்களை பார்ப்போம்.

எக்காரணம் கொண்டும், ஈசான்யம் என்று சொல்லும் வடகிழக்கில் சமையலறை அமைந்துவிட கூடாது. இதனால், வீட்டின் அமைதி குலைவதுடன், குடும்பத்தில் உடல்நலம் பாதிப்படையும். தென்மேற்கு என்று சொல்லும் கன்னி மூலையில் சமையலறை இருந்தாலும், பணவரவு தடைபட்டு, குடும்பத்தில் இன்னல் சூழ்ந்துவிடும்.

kitchen vastu tips spirituality

தென்கிழக்கு பகுதி: எனவே, எப்போதுமே, அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கு பகுதியிலேயே சமையலறை அமைக்கப்பட வேண்டும். தெற்கு பார்த்த வாசல் அமைந்திருக்கும் வீடுகளில் வட மேற்கில் இருக்கும்.. ஆனால், அடுப்பு மேடை, தெற்கு சுவரையும், கிழக்கு சுவரையும் இணைக்கும் வகையில் வைத்திருந்தால் சிறப்பு..

முக்கியமாக, சூரிய வெளிச்சம் சமையலறைக்குள் விழும்படியாக இருக்க வேண்டும். அதாவது, சமையலறை ஜன்னல் கிழக்கு திசையில் இருக்க வேண்டும்.

சமையலறை: உடைந்த பொருட்கள், நசுங்கிய பாத்திரங்களை சமையலறையில் பயன்படுத்தவும்கூடாது, அதை அங்கு வைத்திருக்கவும் கூடாது.. இதனால் பண வரவு தட்டுப்பட்டுவிடும். தம்பதிக்குள் பிணக்குகளும், தகராறுகளும் ஏற்படலாம். எனவே, உடைந்த பொருள், பயன்படுத்தாத பொருள், உடைந்த கண்ணாடி, எதையுமே வைக்கக்கூடாது. குறிப்பாக, நெருப்பின் பிரதிபலிப்பு கண்ணாடியில் பட்டுவிடக்கூடாது.

தண்ணீர்: மருந்துகளையும் சமையலறையில் வைக்கக்கூடாது.. காரணம், சில திசைகளில் மருந்துகளை வைத்தால், வீட்டில் எதிர்மறையான விளைவுகளும் ஏற்படலாம்.. சமையலறை பைப்பில் தண்ணீர் சிந்தக்கூடாது. குழாய் ரிப்பேராகிவிட்டாலும், அதனை உடனடியாக சரிசெய்துவிட வேண்டும். எப்போதுமே சமையலறையில் குப்பைகள் இல்லாமல், அடைப்புகள் இல்லாமல் வைத்திருக்க வேண்டும்...

உப்பு, அரிசி, பருப்பு, புளி போன்ற பொருட்கள் வைத்திருக்கும் பாத்திரங்கள், காலியாக இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த பாத்திரங்களை சுத்தம் செய்வதானாலும், வியாழக்கிழமையே கழுவி சுத்தப்படுத்திவிட வேண்டும். பிறகு உடனே மளிகையையும் நிரப்பி வைத்துவிட வேண்டும். எக்காரணம் கொண்டும், வெள்ளிக்கிழமைகளில் இந்த பாத்திரங்கள் காலியாக இருக்கக்கூடாது.

மகாலட்சுமி: அஞ்சறைப்பெட்டியில் மகாலட்சுமியும், ஊறுகாய் ஜாடியில் குபேரனும், கல் உப்பில் அன்னை லட்சுமியும், அரிசியில் சிவனும் பெருமாளும், துவரம்பருப்பில் செவ்வாய் பகவானும் வசிப்பதாக நம்பப்படுகிறது. அதனால், எந்த உணவு பொருளையும் உபயோகப்படுத்துவதில் சுத்தம் இருக்க வேண்டும்.

அடுப்பு உட்பட, உப்பு ஜாடி, அஞ்சறைப் பெட்டி, அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரம், அரிவாள்மனை, கத்தி போன்ற பொருட்கள் எப்போதும் சுத்தமாகவே இருக்க வேண்டும். இவைகளுக்கு மஞ்சள், குங்கும பொட்டு வைப்பது நல்லது.

மஞ்சள் கோலம்: சாப்பிட்டதும் எச்சில் பாத்திரங்களை உடனே கழுவி வைத்துவிட வேண்டும்.. நாளைக்கு கழுவி கொள்ளலாம் என்று, எச்சில் தட்டுகளை போட்டு வைக்கக்கூடாது.. இரவு சமையல் முடிந்ததும், அடுப்பு மேடையையும் கழுவி விட வேண்டும். அத்துடன், அடுப்பு மேடையில் பச்சரிசி மாவில் மஞ்சள் பொடியையும் சேர்த்து, சிறிய கோலம் போடலாம். ஆனால், இதையும் வியாழக்கிழமை இரவே செய்துவிட வேண்டும்.

அதேபோல, சமையலறையில் கருப்பு நிறத்தைப் பயன்படுத்துவது அசுபமானது என்று வாஸ்து விதிகள் சொல்கின்றன.. அதற்கு பதிலாக, பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு போன்ற பிரகாசமான வண்ணங்களை பயன்படுத்தலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+