விளக்கின் திரியை இப்படி யூஸ் பண்ணுங்க..பூஜையறையில் இந்த போட்டோவை மட்டும் வைக்காதீங்க.. ஏன் தெரியுமா?
சென்னை: பூஜையறை பொருட்களை எப்போது சுத்தம் செய்ய வேண்டும்? பூஜையறை எப்படி இருக்க வேண்டும்?
நம்முடைய வீடுகளிலுள்ள பூஜையறைகளை வாஸ்து சாஸ்திரப்படி அமைத்தால்தான், குடும்பத்தில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் தழைக்கும். அந்தவகையில், பூஜையறையை ஈசான்ய மூலை என்று சொல்லப்படும் வடகிழக்கு திசையில் அமைந்திருக்க வேண்டும். காரணம், இந்த திசையில்தான் பிராணவாயு அதிகமாகக் கிடைக்கும் என்கிறது அறிவியல்.
ஒருவேளை ஈசான்ய மூலையில் பூஜையறை அமையாமல் போனால், வடமேற்கே பூஜை அறையை அமைக்கலாம்.. ஆனால் பூஜையறைக்கு பக்கத்திலேயே குளியலறை, கழிவறை மட்டும் இருக்கக்கூடாது.

திசைகள்: பூஜையறையிலும், பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்களிலும்கூட, சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள்.. குறிப்பாக, பூஜையறையில் உள்ள சுவாமி படங்கள், வடக்கு திசை அல்லது கிழக்கு திசை நோக்கியே இருக்க வேண்டும்.. ஈசான்ய மூலையில் பூஜையறை இருக்கும்போது, வீசும் காற்றில் சாம்பிராணி, ஊதுவத்தியின் மணம் வீடு முழுவதும் பரவி, தெய்வகடாட்சம் பிரகாசிக்கும்.
இந்த பூஜை பொருட்கள் அனைத்தையுமே பூஜை அறையிலேயே வைத்துவிட வேண்டும். பூஜை நடைபெறாத நேரத்தில், பூஜையறையை ஸ்கிரீன் துணியால் மறைத்துவிட வேண்டும். பூஜையறையில் தேவையற்ற பொருட்களை போட்டு வைக்கக்கூடாது. பூஜை அறையை மாலை நேரங்களில் இருட்டாக வைக்கக்கூடாது.. காலையில் சூரியன் உதயமாகும் நேரத்திலும், மாலையில் அஸ்தமிக்கும் வேளையிலும் நல்லெண்ணெய் விளக்கேற்ற வேண்டும்.
முழு அரிசி: பூஜை அறையில் கிழிந்த புத்தகங்கள், உபயோகமில்லாத, பழைய பொருட்கள் போட்டு வைத்திருக்கக்கூடாது. அரிசியை பூஜையறையில் வைக்கும்போது, உடைந்த அரிசியாக வைக்கக்கூடாது.. முழு அரிசியை வைக்க வேண்டும்.
உக்கிரமாக கருதப்படும், கடவுள் சிலைகளை வீட்டின் பூஜையறையில் வைக்கக்கூடாது.. இதனால் குடும்பத்தில் கஷ்டமும், துரதிர்ஷ்டமும் வந்துவிடுமாம். அதேபோல, இறந்த முன்னோர்களின் போட்டோக்களையும் பூஜையறையில் வைக்கக்கூடாது.. உடைந்த சிலைகள் இருந்தாலும், அதை வீட்டு பூஜை அறையில் சிலைகள் வைக்கக்கூடாது.
கிழமைகள்: அதேபோல, பூஜையறை பொருட்களை எப்போது சுத்தம் செய்ய வேண்டும்? எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.. பூஜை செய்கிற நாள் அன்று கட்டாயம் எந்த காரணத்தை கொண்டும் பூஜை பொருட்களை சுத்தம் செய்யக் கூடாது. வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமையில் சுத்தம் செய்தால், வீட்டிலுள்ள அதிர்ஷ்டம் வெளியேறிவிடும் என்பார்கள்..
அதனால், பூஜை செய்ய வேண்டிய தேவை இருக்கும்போது, அதற்கு ஒரு முதல் முன்பே, சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். சூரியன் மறைவதற்கு முன்பே சுத்தம் செய்து விட வேண்டும். ஆனால், பூஜைப்பொருட்களில் பச்சை நிறத்தை எந்த காரணம் கொண்டும் படிய விடக்கூடாது. இது குடும்பத்திற்கு கஷ்டத்தையும் தரித்திரத்தையும் அதிகரித்துவிடும்.
விளக்குகள்: பூஜைப் பொருட்களை கை தவறி கீழே போட்டுவிடக்கூடாது.. ஜாக்கிரதையாக கவனமாக கையாள வேண்டும். பூஜை பொருட்களை சுத்தம் செய்ததுமே, மஞ்சள், குங்குமம் இட்டு வைக்கக்கூடாது. அதேபோல, விளக்கில் எண்ணெய் ஊற்றி வெகு நேரம் காத்திருக்கவும் கூடாது.
முதலில் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு முன்பு, அவைகளிலுள்ள எண்ணெய் பிசுக்குகளை ஒரு துணி வைத்து துடைத்துவிட வேண்டும்.. பிறகு, ஒரு அகலமான பாத்திரத்தில் பூஜை பொருட்களை போட்டு, அதில் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, சிறிது புளியையும் அதில் கரைத்துவிட வேண்டும். அதற்கு பிறகு பாத்திரங்களை தேய்ப்பது எளிதாகும.
விளக்குகள்: இதில், பித்தளை விளக்குகளை மட்டும் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். வெள்ளி விளக்காக இருந்தாலும், தங்க விளக்காக இருந்தாலும் சுத்தமாக துடைத்துவிட வேண்டும். முதல்நாள் எரிந்த திரியை பயன்படுத்தக்கூடாது.. புது திரியை பயன்படுத்தியே விளக்கேற்ற வேண்டும். எண்ணெய் ஊற்றிய பிறகு தான் திரியை போட வேண்டும். திரியை போட்டு வைத்துவிட்டு பின்னர் எண்ணெய் ஊற்றக் கூடாது.












Click it and Unblock the Notifications