Panguni Uththiram: நாளை பங்குனி உத்திரம்! திருமண தடை நீங்க! வாழை இலை + அரிசியில் விளக்கேற்றுங்கள்
சென்னை: பங்குனி உத்திர நாளில் உங்கள் வேண்டுதல் நிறைவேற இந்த முறையில் விளக்கேற்றி 8 எழுத்து மந்திரத்தை சொல்லுங்கள். பிறகு முருகனிடம் வேண்டுதலை சொன்னால் அது நிச்சயம் நிறைவேறும் என்கிறார்கள்.
இதுகுறித்து ஸ்ரீ தமிழ் ஸ்டோரீஸ் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவ: பங்குனி உத்திரத்தில் நீங்கள் விளக்கேற்றினால், உங்கள் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது நிறைவேறும். முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரதநாட்களில் ஒன்றுதான் பங்குனி உத்திரம்.

சிவன் - பார்வதி, முருகன்- தெய்வானை, ராமர்- சீதை போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற நாளாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது. திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் மட்டுமின்றி திருமணமானவர்களும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய இந்த நாளில் விரதமிருக்க வேண்டும்.
பங்குனி உத்திரம் என்பது திருமண வரம் மட்டுமின்றி, அனைத்து வரங்களையும் தரும் மிக அற்புதமான விரதமாகும். அதனால் இந்த நாளில் யார் வேண்டுமானாலும் முருகபெருமானை வேண்டிக் கொள்ளலாம்.
விரதமிருக்க முடியாதவர்கள் மனதார முருகனை துதித்து பூஜை செய்து வேண்டிக் கொள்ளலாம். குறிப்பிட்ட முறையில் விளக்கேற்றி வழிபட்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும்.
பங்குனி உத்திர நாளன்று பூஜை அறையில் வாழை இலை வைத்து அதில் ஒரு பக்கம் பச்சரிசியும், மற்றொரு புறம் துவரம் பருப்பும் பரப்பி வைக்க வேண்டும். அதன் மீது 6 அகல்விளக்குகளை வைத்து தீபமேற்ற வேண்டும்.
நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். பின்னர் முருகனை மனதார நினைத்து ஓம் சரவணபவ என்ற 8 எழுத்து மந்திரத்தை 11 முறை அல்லது 21 முறை மனதார உச்சரித்து சொல்ல வேண்டும். அதன் பிறகு முருகனிடம் உங்கள் கோரிக்கையை அல்லது வேண்டுதலை முறையிடுங்கள். இப்படி வேண்டிக் கொண்டால் அந்த வேண்டுதல் அப்படியே நடக்கும் என்பது நம்பிக்கை. இவ்வாறு அந்த வீடியோ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்குனி உத்திரம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோயில்களிலும் விஷேசமாக கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது! இன்று பிற்பகல் 12.24 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் தொடங்கி நாளை பிற்பகல் 3.10 மணியுடன் முடிவடைகிறது.
பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரும் சிறப்பான நாள்தான் இது! இந்த நாளில் தானம் தர்மம் கொடுப்பது நல்லது. பங்குனி உத்திரத்தையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கோயில்களில் திருக்கல்யாணம், அபிஷேகம், ஆராதனை உள்ளிட்டவை நடைபெறும்.












Click it and Unblock the Notifications