சிவனுக்கு ஒரு சகோதரி இருந்தாராமே! பார்வதிதான் அவரை விரட்டினாரா? கைலாயத்திலும் நாத்தனார் பிரச்சினையா?
சென்னை: சிவனுக்கு ஒரு சகோதரி இருந்தாரா, அவரை பார்வதி தேவி விரட்டி விட்டாராமே, அது ஏன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சிவபுராணத்தில் சிவபெருமானுக்கு ஒரு சகோதரி இருந்ததாகவே கூறப்படுகிறது.
இதுகுறித்து av tamil story எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்னதான் சிவபெருமான், தனது மனைவி பார்வதி தேவியை நல்லபடியாக பார்த்துக் கொண்டிருந்தாலும், தேவிக்கு மனதில் ஒரு குறை இருந்துக் கொண்டே இருந்தது.

இதை உணர்ந்த சிவபெருமான், உனக்கு என்ன வேண்டும் என கேட்கிறார். அதற்கு பார்வதி தேவி, என் தனிமையை போக்கிக் கொள்ள மன உணர்வை சொல்ல, எனக்கு துணையாக இருக்க ஒரு சகோதரி வேண்டும் என்கிறார்.
அதற்கு சிவபெருமான் நான் உனக்காக சகோதரியை போன்ற ஒரு பெண்ணை உருவாக்குகிறேன், அவரை நீ பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். பார்வதி தேவியும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறார். ஆனால் ஒரு பெண்ணை எப்படி உருவாக்குவது என தெரியாததால் சிவபெருமான் தன்னை மனதில் நிறுத்தி தன்னை போன்றே ஒரு பெண்ணை உருவாக்கியிருக்கிறார்.
நீண்ட படர்ந்த முடி, அகன்ற தோள், என பார்க்க சிவனை போன்று ஒரு பெண்ணை உருவாக்கினார். அவருக்கு அசாவரி என பெயரிட்டார். ஈசனால் உருவாக்கப்பட்ட அசாவரியை பார்வதி தேவி நன்றாக கவனித்துக் கொண்டார்.
ஆனால் சில காலங்களில் பிரச்சினை தொடங்கியது. எவ்வளவு சாப்பிட்டாலும் அசாவரியின் பசி அடங்கியபாடில்லை. இதனால் கைலாயத்தில் இருந்த உணவுகள் அனைத்தும் தீர்ந்தன. இதை சிவனிடம் தெரிவிக்கச் சென்ற பார்வதி தேவி , ஓடி வரும் போது தடுக்கி விழுந்தார்.
அங்கு வந்த சிவபெருமான், பார்வதி தேவி எங்கே என கேட்ட போது தனது அகன்ற பாதத்தால் மறைத்துக் கொண்டு தனக்கு தெரியாது என அசாவரி தெரிவித்தார். உண்மையை அறிந்த ஈசன், அசாவரியை எச்சரித்தார்.
அசாவரியின் மோசமான நடவடிக்கையை கண்டு பார்வதி தேவி, கைலாயத்தை விட்டு
செல்லுமாறு அசாவரியை துரத்தினார். இவ்வாறு அந்த கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அசாவரியை துரத்திய போது சிவபெருமான், பார்வதியிடம், தான் கூறிய வாக்கை ஞாபகப்படுத்தியதை அடுத்து, பார்வதி தேவியும் மன்னிப்பு கேட்டுக் கொண்டாராம்.
மேலும் நல்ல பண்புகளுடன் கூடிய அசாவரியை மீண்டும் படைக்குமாறு பார்வதி கேட்டுக் கொண்டாராம். அதற்கு சிவபெருமான், மோசமான நிலையில் இருக்கும் போது அவரை நல்வழிப்படுத்தாமல் துரத்திவிட்டு, நல்ல பண்புகளுடன் கூடிய ஒருவரை படையுங்கள் என கேட்பதில் நியாயம் இல்லை என கூறினாராம்.
முதலில் பார்வதி தேவி ஒரு சகோதரி வேண்டும் என கேட்ட போது சிவனோ, சரஸ்வதி தேவி இருக்கிறாரே, அவர் எனது தங்கையை போன்றவர் என்றாராம். ஆனால் பார்வதியோ, அவர் பிரம்மனின் மனைவி, நான் நினைக்கும் நேரத்தில் எல்லாம் பிரம்ம லோகத்தை விட்டு அவரால் வர முடியாது என்றாராம்.
-
வைகாசி விசாகம் 2026: எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications