பங்குனி உத்திர திருக்கல்யாணம்! போடி சுப்பிரமணிய சுவாமி கோயில் தேங்காய் இத்தனை ரூபாய்க்கு ஏலமா?
தேனி: தேனி மாவட்டம் போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்த நிலையில் திருமாங்கல்யம் சுற்றி வைக்கப்பட்ட தேங்காய் ஏலமிடப்பட்டது. இதை பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர்.
தேனி மாவட்டம் போடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் மாலையில் சுவாமி வீதி உலாவும் நடந்தது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடந்தது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து திருக்கல்யாண நிகழ்ச்சியில் மாங்கல்யம் சுற்றி வைக்கப்பட்டிருந்த தேங்காய் ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் அந்த தேங்காய் ஏலமிடப்பட்டது.
இதை பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏலமிட்டனர். இதில் போடி உருமிக்காரன் தெருவை சேர்ந்த ஆறுமுகம், போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த பழனியாண்டவர் இடையே ஏலமிடுவதில் போட்டி நிலவியது.
ஆறுமுரகம் ரூ 51,500 வரை ஏலம் கேட்டார். பழனியாண்டவர் என்பவர் ரூ 52 ஆயிரத்திற்கு தேங்காயை ஏலமெடுத்தார். ஏலத்தொகையை அறிந்த பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டனர். ஒரே ஒரு தேங்காய் 1000 ரூபாய்க்கு ஏலம் தொடங்கிய நிலையில் ரூ 52 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ரூ 5 ஆயிரத்தில் தொடங்கிய ஏலம், ரூ 62 ஆயிரம் வரை கேட்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகில் உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் - கவிதா வள்ளியம்மை தம்பதி, இந்த ஒற்றைத் தேங்காயை ரூபாய் 62 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.
கடந்த ஆண்டு தைப்பூசத்திற்கு மறுநாள் நடைபெற்ற தெய்வானை முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவத்தில் ஏலம் விடப்பட்ட தேங்காய் ரூபாய் 32,000க்கு விலை போனது. இது தவிர, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல் ஏலம் எடுக்கப்பட்ட தேங்காய் கடந்த ஆண்டு தைப்பூசத்திற்கு மறுநாள் சுவாமி முன்பு உடைக்கப்பட்டதில், தேங்காய் முற்றிலும் அழுகாமல் காய்ந்த நிலையில் ஓடுடன் ஒட்டிக்கொண்டு இருந்தது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications