Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துளசி மாலை அணிய போகிறீர்களா? என்னவெல்லாம் செய்யக் கூடாது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: துளசி மாலை அணிய போகிறீர்களா? என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இதுகுறித்து கவசி 1406 என்ற சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: துளசி மாலை என்பது மிகவும் புனிதமான ஒன்று. பெருமாளுக்கு உகந்தது இந்த துளசி. துளசிக்கு இணையானது துளசி மாலை என்கிறார்கள். இப்படிப்பட்ட தெய்வ கடாட்சம் பொருந்திய துளசி மாலையை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

spirtuality thulasi malai

துளசி மாலை என்பது துளசி இலைகளால் செய்யப்படுகிறது. இது இந்து பாரம்பரியத்தில் ஆன்மீக அணிகலனாக பயன்படுத்தப்படுகிறது. இந்த துளசி மாலை ஆன்மீக ரீதியிலும் உடல்நல ரீதியிலும் நல்லதொரு மாற்றங்களை தரும்.

இந்த துளசி மாலையை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அத்தகைய மரியாதையுடன் பயன்படுத்தினால் நல்ல ஆற்றலை கொடுக்கும். இந்த மாலையை அணியும் போது நம் மனம் தூய்மையான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும்.

இந்த துளசி மாலை ஏராளமான பிரார்த்தனைகள் மந்திரங்களை சொல்லி செய்யப்படுகிறது. அதனால் இதை அணியும் போது உள்ளமும் மனதும் சுத்தமாக இருக்க வேண்டும். துளசி மாலை அணிந்தவர்களை பெருமாள் காப்பாற்றுவார் என்பது ஐதீகம். இந்த மாலையால் ஒருவர் இறந்தால் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நம்பிக்கையாகும்.

சிலர் துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளாமல் ஜபம் செய்வதற்காக மட்டும் பயன்படுத்துவார்கள். கழுத்தில் அணிந்தாலும் சரி, ஜபம் செய்ய பயன்படுத்துவதானாலும் சரி அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை பார்க்கலாம். துளசி மாலையை வாங்கி வந்ததும் அதை மஞ்சள் நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.

பின்னர் கங்கை ஜலம் இருந்தாலோ அல்லது சுத்தமான நீர், கோமியம் ஆகியவற்றால் ஒரு முறை கழுவ வேண்டும். பிறகு அதை சுத்தமான துணியால் துடைத்து பூஜை அறையில் மகாவிஷ்ணுவின் படத்திற்கு அருகே வைத்து வழிபட வேண்டும். தான் அணிய போகும் துளசி மாலையால் தனக்கு நன்மைகளும் இறைவன் அருளும் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு அதை அணிந்து கொள்ள வேண்டும்.

துளசி மாலை அணிபவர்கள் அசைவம், வெங்காயம், பூண்டு போன்ற உணவுகளை சாப்பிடக் கூடாது. அது போல் மது, புகை, புகையிலை போன்ற போதை வஸ்துக்களையும் பயன்படுத்தவே கூடாது. துளசி மாலை, மிகவும் புனிதமானது, தெய்வீக சக்தி படைத்த மாலை என்பதால் அதை அணிபவர்கள் மனதாலும் உடலாலும் தூய்மையாக இருத்தல் வேண்டும்.

ஒருவர் அணியும் துளசி மாலையை மற்றவர்கள் அணியவே கூடாது. துளசி மாலை அணிபவர்கள் உடலுறவு கொள்ள கூடாது. இந்த மாலை உங்களை தீய சக்திகளில் இருந்து காக்கும். இந்த துளசி மாலையை தியானம் செய்யும் போதும் பிரார்த்தனை செய்யும் போதும் மந்திரங்களை உச்சரிக்கும் போதும் அணியலாம்.

கழுத்தில் அணியும் போது அதன் மீது மரியாதை இருக்க வேண்டும். ஏதோ அழகு அணிகலனாக அதை கருதவே கூடாது. இந்த மாலையை நீங்கள் பயன்படுத்தக் கூடாது என்ற சம்பவங்களில் அணிய முடியாத நிலை இருந்தால் அதை உடனே சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளவும். குளிக்கும் போது, நீச்சல் பழகும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அணியவே கூடாது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+