வடக்கு திசையில் "தலை" வைத்து படுக்காதீங்க.. வடக்கில் தலை வைத்தால் இப்படியொரு பிரச்சனை? இதை கவனியுங்க
சென்னை: நம்முடைய வீடுகளில் வடக்கு திசையில் தலைவைத்து படுக்க கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்களே, ஏன் தெரியுமா? இதற்கு ஆன்மீக காரணமும் உண்டு.. அறிவியல் காரணமும் உண்டு.
ஆன்மீகத்தை பொறுத்தவரை எப்போதுமே வடக்கு திசையானது, இறை வழிபாட்டுக்குரிய திசையாகவே கருதப்படுகிறது.. இந்த வடக்கு திசையில்தான், குரு உபதேசம் பெற முடியும் என்பார்கள்.. ஈசனின் திருக்கயிலாயமும் வடக்கு புறத்தில்தான் அமைந்துள்ளது.. அதனால்தான், வழிபாட்டுக்குரிய திசையாக புனிதமாக கருதப்படும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்க கூடாது என்கிறார்கள்..

அதேபோல, வடக்கில் தலை வைத்து படுத்தால், கால்கள் தெற்கு நோக்கி இருக்கும்.. இந்த தெற்கு திசை, யமனுக்குரிய திசையாக கருதப்படுகிறது.. அதுமட்டுமல்ல, இந்த வடக்கு திசை குபேரனுக்கு உரிய திசையாகவும் கருதப்படுகிறது..
குபேரன்: குபேரனின் திசையிலேயே நாமும் தலைவைத்து படுத்தால், குபேரனின் அருள் கிடைக்காமல், செல்வமிழந்து வறுமைக்குள் தள்ளப்படலாம்.. செல்வம், வேலை, குடும்ப நிம்மதி போன்றவை பாழாகும் என்ற நம்பிக்கை உள்ளது.. ஆதேபோல, பிணங்களின் தலையை வடக்கு திசையை நோக்கிதான் வைப்பார்களாம். இதைவைத்துதான், தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது என்று பழமொழியே எழுதப்பட்டதாம்.
ஆன்மீகத்தில் இவ்வாறான காரணங்கள் சொல்லப்படுகிறது என்றாலும், அறிவியல் காரணத்தையும் நம் முன்னோர்கள் நிறையவே அறிந்து வைத்திருந்தார்கள்.
எதிரெதிர் துருவம்: பூமியின் வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் உள்ளது. அதுபோலவே, மனித உடலின் தலையில் நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டது. எப்போதுமே எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்கப்படும்.. ஒரே துருவங்களில் தலைவைத்து படுத்தால், மின்னோட்டங்களுக்கு இடையே இடையூறு ஏற்பட்டு, உடலின் ஆற்றல் பாதிக்கப்படும். இது ஆரோக்கிய தொந்தரவுகளை தந்துவிடும்.
குறிப்பாக, வடக்கு திசையில்தான் மின்னணு காந்த கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்.. எனவேதான், திசை காட்டும் கருவியின் முள் முனையும், வடக்கு நோக்கியே காட்டும்..
மின்னணு காந்த கதிர்கள்: அதாவது, வடக்கே காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாகவே உண்டு என்பதால், தலை வைத்து படுக்கும்போது ரத்தம், மூளைக்கு அதிகமாக இழுக்கப்பட்டு மூளை பாதிக்கப்படும்.. இதனால், மூளையும் மந்தமாகிவிடக்கூடிய அபாயம் உள்ளதாக ஆய்வுகளும் கூறுகின்றன. மன ரீதியான குழப்பம் ஏற்படுவதுடன், கோபமும் அதிகமாகி, ஒருவித எரிச்சலும், விரக்தி நிலைமைக்கே கொண்டுபோய் விட்டுவிடலாம். உடல் ரீதியான பாதிப்புகளும் உண்டாகலாம்.
அப்படியானால் எந்த திசையில் தலை வைத்து படுக்கலாம்? தெற்கு திசை, கிழக்கு திசை சிறந்த திசையாக கருதப்படுகிறது.. தெற்கு திசையில் தலை வைத்து, வடக்கு திசையை நோக்கி கால்களை நீட்டிப்படுத்தால், வறுமை நீங்கி செல்வம் செழிக்குமாம்.. மனமும் தெளிவுபெற்று அமைதி பெறுமாம். அதுபோலவே, கிழக்கு திசையிலும் தலை வைத்து தூங்குவது, நேர்மறை ஆற்றல்களை அள்ளி தந்து, உடலையும், உள்ளத்தையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்கிறார்கள்.
எப்படி படுக்க வேண்டும்: அதுமட்டுமல்ல, எந்த திசையில் தூங்குகிறோம் என்பதை போலவே, எப்படி தூங்குகிறோம் என்பதும் முக்கியம்.. எப்போதுமே மல்லாந்து கால்களையும் கைகளையும் அகற்றி வைத்து கொண்டு தூங்க கூடாதாம்.. அப்படி தூங்கினால், தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகலாம்.. இது குறட்டையை உண்டுபண்ணிவிடும்.
அதேபோல குப்புற படுக்கக்கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் வைத்து, இடதுபுறமாக ஒரு கழுத்து வைத்து தூங்கினால், சுவாசம் சீராக இருக்குமாம்..
அட்வைஸ்: ஒருவர் தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டுமாம்.. மாமனார் வீட்டில் என்றால், தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டுமாம்.. வெளியில் தங்குவதாக இருந்தால் மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டுமாம். ஆனால் எக்காரணம் கொண்டும் வடக்கு மட்டும் தலை வைக்கவே கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications