இந்த 3 பொருளை மட்டும் ஆரத்தி தட்டில் சேர்க்க என்ன காரணம் தெரியுமா? ஆண்டிபயாடிக் ஆரத்தி.. சூப்பர்
சென்னை: ஆரத்தி எடுப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கமாகும்.. இந்த ஆரத்தி எடுப்பதன் காரணங்கள் என்ன? எப்படி ஆரத்தி எடுக்க வேண்டும்? ஆரத்தி எடுப்பதற்கான அறிவியல் காரணங்கள் என்னென்ன தெரியுமா?
ஆரத்தி எடுப்பது என்பது நம்முடைய கலாச்சாரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.. புதுமண தம்பதிகள் வீட்டுக்குள் நுழையும்போதும், தொலைதூரம் பயணம் முடிந்து வீடு திரும்பும்போதும், நோயுற்றவர்கள் குணமாகி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போதும், பிரசவத்துக்கு சென்றுவிட்டு குழந்தையுடன் வீடு திரும்பும்போதும், இப்படி ஆரத்தி எடுக்கப்பட்டு வருவது பழக்கமாக உள்ளது. இதனால், திருஷ்டிகள் கழியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

சுண்ணாம்பு: ஆரத்தி எடுக்க, மஞ்சள் தூள், தண்ணீர், சுண்ணாம்பு இந்த மூன்றும் பயன்படுகிறது. இந்த மூன்றையும் ஒன்றாக கலக்கும்போது காசி நிறம் அல்லது சிவப்பு நிறம் கிடைக்கும்.. இதனை ஒரு தட்டில் கொட்டி கலக்கி, வெற்றிலை வைத்து அதன்மேல் கற்பூரமும் வைத்து கொளுத்தி, ஆரத்தி எடுக்கலாம். இடது, மற்றும் வலது என தலா 3 முறை சுற்றவேண்டும்.
பிறகு அவர்களை முன்னால் செல்லவிட்டு, பின்னால் அவர்கள் நடந்து வந்த பாதையில் இந்த ஆரத்தியை ஊற்றினால், அவர்கள் மீதும், அவர்களை பின்தொடர்ந்தும், எந்த தீய சக்தியும் வீட்டுக்குள் நுழையாமல் இருக்கும். அவர்கள் மீது தொற்றுக்கள் இருந்தாலும் நீங்கிவிடும்.
இதுதான் காரணம்: மஞ்சள் + கற்பூரம் + சுண்ணாம்பு + வெற்றிலை இந்த பொருட்களை ஆரத்தியில் பயன்படுத்த ஆன்மீக காரணம் உண்டு.. யாருக்கு ஆரத்தி எடுக்கிறோமோ, அவருக்கு லட்சுமி, சரஸ்வதி இரண்டு தெய்வங்களின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆரத்தி எடுக்கப்படுகிறது. சரஸ்வதியின் நிறம் வெண்மை.. லட்சுமியின் நிறம் மஞ்சள்.. எனவே, சுண்ணாம்பும் மஞ்சள் பொடியும் சேர்ந்து சிவப்பு என்கிற கலவை உண்டாகிறது.
இதற்கு அறிவியல் காரணங்களும் உள்ளன.. மஞ்சள் மிகச்சிறந்த ஆண்டிபயாடிக் ஆகும்.. கிருமிநாசினியும்கூட.. அதுபோலவே, வெற்றிலையும், சுண்ணாம்பும் ஒரு கிருமி நாசினியாகும்.. கற்பூரமும் ஒரு இயற்கையான பாசிட்டிவ் சக்தி தரும் ஒரு பொருளாகும். விஷ அணுக்களை அழிக்கக்கூடிய சக்தி இந்த கற்பூர புகைக்கு நிறைய வேண்டு.
கற்பூரத்தை கொளுத்தும்போது, அதன் புகையானது அந்த பகுதி முழுவதும் பரவும்.. வெற்றிலை, சுண்ணாம்புகளில் இந்த நெருப்பு படிந்து, அவையும் காற்றில் கலந்து, தொற்று கிருமிகளை அழித்துவிடுமாம்.
கிருமிநாசினி: அதனால்தான் கிருமி நாசினிகளான மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த காவிக் கரைசல், வெற்றிலை, கற்பூர தீபம் ஆகியவை அடங்கிய தாம்பாளத்தால் அவர்களை 3 முறை சுற்றும்போது கிருமி நீக்கம் செய்து தூய்மைப்படுத்துகிறது.
ஆனால், ஆரத்தி எடுப்பதில் 2 வகைகள் உள்ளன.. ஒன்று கோவிலில் இறைவனுக்கு எடுக்கும் ஆரத்தி. மற்றொன்று வீடுகளில் மனிதர்களுக்கு எடுக்கும் ஆரத்தி.
சுப நிகழ்சிகளில் பங்குபெற்று பலரின் கண்திருஷ்டிகளுக்கு பரிகாரமாக வீடுகளில் ஆரத்தி எடுப்பார்கள்.. ஆனால், தெய்வங்களுக்கு எடுக்கும் ஆரத்தி, மஞ்சள் குங்குமத்தை சுத்தமான நீரில் கரைத்து இரண்டு நெய்விளக்குகள் ஏற்றி எடுக்க வேண்டுமாம்.. இதில், ஆரத்தி எடுத்து முடித்த பிறகு, இந்த தண்ணீரை மனிதர்கள் காலடி படாத துளசிச்செடியில் ஊற்ற வேண்டும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications