விளக்கு ஏற்றும்போது இந்த தப்பை செய்யாதீங்க.. நெய்யில் விளக்கேற்றலாமா? விளக்குகளையேற்ற பெஸ்ட் திசை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடுகளில் விளக்கேற்றி வைக்கும்போது ஒருசில விஷயங்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள் முன்னோர்கள்.

தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது என்று சாஸ்திரங்கள் வலுவாக வலியுறுத்தியிருக்கின்றன.. வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் விளக்கேற்றியே அதை துவங்கி வைக்கப்படுகிறது.

Spirituality Deepam

மேற்கு திசை: அந்தவகையில், விளக்குகளை கிழக்கு திசையில் ஏற்ற வேண்டும்.. இறந்தவர்களின் படத்திற்கு விளக்கேற்றும்போது மட்டுமே வடக்கு திசையில் ஏற்ற வேண்டும்... மற்ற சமயங்களில் விளக்கின் திசையை மாற்றக்கூடாது. சில விசேஷ நாட்களில் குத்து விளக்கேற்றினால், தரையில் உட்கார்ந்த நிலையிலேயே குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றுவது சிறப்பு.

விளக்கு ஏற்றுவதற்கு நெய், எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகிறது.. நெய்யில் விளக்கேற்றினால் செல்வ வளம் பெருகுமாம்.. நல்லெண்ணெய்யில் விளக்கேற்றும்போது ஆரோக்கியம் கிடைக்கும். விளக்கெண்ணெய்யில் விளக்கேற்றினால் புகழ் உண்டாகும்.. தம்பதிகள் ஒற்றுமை தழைக்க வேப்ப எண்ணெய்யில் விளக்கேற்றலாம். ஆனால், கடலை எண்ணெய் மட்டும் விளக்கேற்ற பயன்படுத்தக் கூடாது.

எண்ணெய்: வெள்ளி, செவ்வாய் தவிர மற்ற நாட்களில் விளக்கை சுத்தம் செய்யலாம். ஆனால், விளக்கை சுத்தம் செய்ய முனையும்போது, அதிலுள்ள எண்ணெய்யை கீழே ஊற்றிவிட வேண்டும். ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய்யை வேறு விளக்கிற்கு பயன்படுத்தக்கூடாது. விளக்கை சுத்தம் செய்துவிட்டு, புதிதாக எண்ணெய் ஊற்றுவதுடன், திரியையும் மாற்றிய பிறகே விளக்கேற்ற வேண்டும்.

விளக்கு ஏற்ற சரியான நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரை. சூரியன் உதிப்பதற்கு முன் நம்முடைய வீட்டில் விளக்கேற்றுவது என்பது, மிக மிக நன்மையை அளிக்கும். இந்த விளக்கு ஏற்றும்போது குளித்து விட்டு விளக்கேற்ற வேண்டும். அதேபோல, மாலை 5 மணி முதல் 7 மணி வரை விளக்கி ஏற்றினால் நல்ல பலனை கொடுக்கும். நாம் ஏற்றும் விளக்கு கிழக்கு நோக்கியும், விளக்கினை ஏற்றுபவர்கள் மேற்கு திசை பார்த்தபடி இருக்க வேண்டும்.

தீபம்: ஆனால், அரை மணி நேரமாவது விளக்கை எரிய விட வேண்டும். வீட்டின் நிலை வாசலில் முதலில் தீபம் ஏற்றிவிட்டு, பிறகுதான் பூஜை அறையில் ஏற்ற வேண்டும். ஆனால், ஒருமுறை அறையில் ஏற்றிய தீபத்தை மறுபடியும் வெளியில் கொண்டு சென்று ஏற்றக் கூடாது.. அதேபோல ஒரு விளக்கு தீபத்திலிருந்து இன்னொரு விளக்கை ஏற்றுதல் கூடாது. ஒவ்வொரு விளக்குகளையும் தனித்தனியாக ஒளியூட்ட வேண்டும்.

தவறுகள்: பூஜைக்காக விளக்கேற்றி வைக்கும்போது, அனைத்து கடவுள்களும் மகிழ்ச்சி அடைவதாக சொல்லப்படுகிறது.. அதனால்தான் ஒருசில தவறுகளையும் விளக்கேற்றும்போது செய்யக்கூடாது என்பார்கள். காரணம் தெரியாமல்கூட சில தவறுகளை செய்துவிடும்போது, விளக்கு ஏற்றுவதின் முழு பலனை பெற முடியாது.

விளக்கு வைத்தபிறகு குளிக்கக்கூடாது.. வீடுகளிலுள்ள குப்பையை வெளியே கொட்ட கூடாது.. தலை சீவக்கூடாது. தலைவாசல் படியில் அமர்ந்து பேன் பார்க்க கூடாது. வீட்டில் விளக்கேற்றியதுமே பால், தயிர், காய்கறிகளை இரவில் கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+