திரும்பின திசையெல்லாம் பணம்.. இந்த 3 பொருள் போதுமே.. தரித்திரம் நீங்கி செல்வம் சேர உதவும் "தேங்காய்"
சென்னை: 1 ரூபாய் நாணயம், கல் உப்பு, மஞ்சள் தூள் இந்த பொருட்கள் நம்கைவசம் இருக்கும்போது, பல்வேறு நன்மைகள் நமக்கு வந்து சேர்கின்றன.. இதுகுறித்து ஒருசில எளிய பரிகாரங்களை முன்னோர்களும் சொல்லி வைத்துள்ளனர். இதுகுறித்து பார்ப்போம்.
முழுமையான, பசுமை மாறாத வெற்றிலை ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.. இதில், வெற்றிலை மீது 1 ரூபாய் நாணயத்தையும், விரலி மஞ்சள், ஏலக்காயை வைத்து முடிச்சு கட்டிக்கொள்ள வேண்டும்.

உங்கள் பிரச்சனை மற்றும் வேண்டுதல் என்னவென்று, மனதிற்குள் பிரார்தித்து கொள்ள வேண்டும். பிறகு உங்கள் வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் கோயிலின் அரசமரத்தடியில், அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி, அந்த 1ரூபாய் முடிச்சையும் மரத்தடியில் வைத்து, மீண்டும் மனமுருகி பிரார்த்தனை செய்ய வேண்டும். அந்த முடிச்சை மரத்துக்கு அடியிலேயே வைத்துவிட்டால் போதும்.
அரசு மரம்: ஆனால், பழமையான அரச மரமாக இருக்க வேண்டும். அந்த மரத்துக்கு அடியில் ஏற்கனவே நிறைய பேர் வேண்டுதல்களை செய்திருக்க வேண்டும்.. சூரியன் மறைவதற்குள் இந்த 1 ரூபாய் முடிச்சை மரத்தடியில் வைத்துவிட வேண்டும். இதற்கு எந்த நாள் கிழமையும் கிடையாது. எந்த நாளிலும் செய்யலாம். விரைவில் உங்கள் விருப்பமும், பிரார்த்தனையும் விரைவில் நடக்கும்.
அதேபோல, ஒரு பாத்திரத்தில் கல் உப்பு, மஞ்சள் இரண்டையும் சம அளவில் சேர்த்து, அதை உச்சந்தலை கால் வரை தேய்த்து ஓடுகின்ற நீரில் குளித்து வந்தால், உடம்பிலுள்ள துர்சக்தி, தரித்திரங்கள் விலகும்.. அல்லது கல் உப்பு, மஞ்சள் இரண்டையும் கொண்டு, உங்களது 2 கைகளையும் நன்றாக தேய்த்து, ஓடும் நீரில் அல்லது கடலில் கழுவினாலும், துர்சக்தி நீங்கிவிடுமாம்.
உப்பு நீர் பரிகாரம்: கஸ்தூரி மஞ்சளும் பயன்படுத்தி கொள்ளலாம். ஓடும் நீர், கடல் நீர் இல்லாவிட்டாலும், கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை வாங்கி வந்து, குளிக்கும் நீரில் தலைக்கு குளிக்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் 3 வாரம் செய்து வரும்போது, குடும்பத்தில் நல்ல மாற்றம் தென்படும். இதை மஞ்சள் பயன்படுத்தினாலும், இந்த பரிகாரத்தை ஆண்களும் செய்யலாம்..
அதேபோல, கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், பிள்ளையார் கோயிலில் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணெயையும், விளக்கெண்ணையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விரைவில் விலகும். நம்முடைய முன்னேற்றம் தடைபடாமல், தேங்காமல் விருத்தியாகும்.
கண் திருஷ்டி: வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மாப்பொடியால் அபிசேகம் செய்தால் செல்வ வளம் பெருகும். கடன் தொல்லைகள் நீங்கும்.. அதேபோல, வெள்ளெருக்கு விநாயகரை, வீட்டின் அறைகளில் உயரத்தில் வைத்து வழிபடுவதால், திருஷ்டிகள் குடும்பத்தில் இருந்தாலும் விலகிவிடுமாம்.
சிவபெருமானுக்கு பாலால் அபிஷேகம் செய்து வந்தாலும், வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் விரைவில் தீரும்.. ஆனால், இந்த பரிகாரத்தை திங்கட்கிழமைகளில் செய்வது மிகவும் விசேஷம் என்பார்கள்.
குங்குமம்: அதேபோல, வியாழக்கிழமைதோறும் குங்குமம் வாங்கி வைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு குங்குமத்தை கொடுத்து விட்டு வந்தால், கடன் பிரச்சினைகள் மெல்ல விடைபெறும். 11 வாரம் இப்படி குங்குமம் வாங்கி வைத்து வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு கொடுத்து வரவேண்டும். அதேபோல, சனி பகவானின் திருத்தலங்களான திருநள்ளாறு, சென்னையிலுள்ள வடதிருநள்ளாறு, ஆகிய தலங்களுக்கு சென்று வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications