வெள்ளெருக்கு செடியை வீட்டில் வளர்க்கலாமா? எருக்கஞ்செடியில் இத்தனை அதிசயமா? எருக்கம் பூக்களின் மகிமை
சென்னை: வீடுகளில் எருக்கஞ்செடியை வளர்க்கலாமா? கூடாதா? என்று நிறைய பேருக்கு சந்தேகம் எழுகிறது.. வெள்ளெருக்கு செடியை வீட்டில் வளர்ப்பது குறித்து ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது என்ன?
எருக்கன் செடியில் 2 வகைகள் உள்ளன... ஒன்று சாலையோரங்களில் தென்படும் எருக்கஞ்செடி. இன்னொரு வெள்ளை எருக்கஞ்செடி. இதுதான் ஆன்மீகத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எருக்கஞ்செடி: மற்ற செடிகளிலிருந்து வேறுபட்ட செடி இதுவாகும்.. இந்த செடி வளர்வதற்கு 12 வருடமானாலும் தண்ணீரே தேவையில்லை.. எருக்கஞ்செடியை வீட்டில் வளர்க்கக்கூடாது என்பார்கள்.. இந்த செடியை லேசாக உடைத்தாலும் பால் வடியும்.. பொதுவாக பால் வடியும் செடிகளை வீட்டில் வளர்க்க வேண்டாம் என்று கூறுவார்கள்.
நவக்கிரகங்களில், எருக்கஞ்செடியானது, சூரிய பகவானின் தன்மையை கொண்டதாக சொல்கிறார்கள். சிவபெருமானின் அம்சம் கொண்டதாகக் கருதப்படுகிறது. சிவனுக்குரிய அஷ்டபுஷ்பங்களில் முதன்மையானது இந்த வெள்ளெருக்க பூக்கள்.. சிவபெருமானின் ஜடாமுடியில் விரும்பி அணியக்கூடியதும் இந்த வெள்ளெருக்கம் பூக்கள்தான்..
விநாயகருக்கும் சிவபெருமானுக்கும் இந்த வெள்ளெருக்கு பூவில்தான்மாலை கட்டி வழிபடுவார்கள்.. விநாயகர் சிலையை வெள்ளெருக்கு வேர்களை கொண்டுதான் பூஜிக்கிறார்கள்.. வெள்ளெருக்கு பட்டைகளில் செய்யப்பட்ட திரியை வைத்துதான் தீபமேற்றுகிறார்கள்
சிவன்கோவில்: ஆகவே, இந்த செடியை வளர்ப்பதாக இருந்தால், சுத்தமாக வைத்து கொள்ள வேண்டுமாம். அப்படி வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள முடியாதவர்கள், இந்தச் செடியை சிவன் கோயிலில் நட்டு வைத்துவிடலாம் என்கிறார்கள். .
எருக்கஞ்செடிகளை வீட்டில் வைத்து வளர்த்தால், வீட்டை சுற்றியிருக்கும் எதிர்மறை தன்மையை தடுத்துவிடும்.. இதனால் தீய சக்திகள் வீட்டுக்குள் நுழையாது என்கிறார்கள்.. ஒருவேளை எருக்கஞ்செடியை வீட்டுக்கு முன்பு வளர்க்க முடியாமல் போனால், வெள்ளெருக்கன் வேர்கட்டை என்று நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கும். இதை வாங்கி வீட்டுக்கு முன்பாக கட்டி தொங்கவிட்டாலும், துர்சக்திகள் வீட்டுக்குள் நுழையாது.
விநாயகர்: வெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட விநாயகரை வீட்டில் வைத்து பூஜிப்பது நல்லது. அதுவும் ரத சப்தமியன்று வெள்ளெருக்கு விநாயகரை பூஜிக்க செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.. அதனால்தான்., விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, எருக்கம் பூமாலையை விநாயகருக்கு அணிவிக்கும் முறை இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது..
எருக்கஞ்செடி இலைகள் முழுக்க முழுக்க மருத்துவ குணம் கொண்டது.. சேற்றுப்புண் தொந்தரவு இருந்தாலும், எருக்கஞ்செடி இலையின் காம்பை கிள்ளிவிட்டு, அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தடவிவந்தால் சேற்றுப்புண்கள் ஆறிவிடும்.
விஷக்கடிகள்: எலி, பாம்பு, தேள் போன்ற விஷக்கடிக்கும், இந்த இலையின் சாறு மருந்தாகிறது. எருக்கம் பூவுடன் வெற்றிலையும் சேர்த்து மென்று சாப்பிட்டால, பாம்பு கடி விஷம் உடலில் ஏறாதாம்.. பாம்பு கடித்தவர்களின் வாயில் இவற்றை மெல்ல தந்துவிட்டு, உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்றால், உயிருக்கு ஆபத்து நேரிடாது.
எருக்கன் இலைகளை நெருப்பில் போட்டு எரிக்கும்போது வெளிவரும் புகையை சுவாசித்தால், மார்புச் சளி, ஆஸ்துமா போன்றவை கட்டுப்படும்... சுவாச பிரச்சனைகளும் நீங்கும்.. உடலில் கட்டிகள் இருந்தாலும், இந்த செடியின் இலைகளை நெருப்பில் வாட்டி, கட்டி உள்ள இடத்தில் வைத்து கட்டினால், அந்த கட்டிகள் பழுத்து உடைந்து விடும்.. வீக்கமும் வலியும் குறையும். சிரங்குகள், புண்கள் மீதும் கட்டலாம்.
மூட்டு வலிகள்: மூட்டு வலி இருந்தாலும், இந்த இலைகளை சிறிது விளக்கெண்ணெய் தடவி சூடு செய்து, ஒத்தடம் போல் தந்தால், வலியும், வீக்கமும் குறையும்.. காலில் முள் குத்தினால், இந்த எருக்கஞ்செடி பாலை 2 சொட்டு விட்டால் வலி குறையும்.. சிறிது நேரத்தில் முள்ளும் வெளியே வந்துவிடும்.. தேனுடன் எருக்கஞ்செடி இலைச்சாற்றை 2 துளி கலந்து குழந்தைகளுக்கு தந்தால், வயிற்றிலுள்ள பூச்சிகள், கிருமிகள் வெளியேறிவிடும்..












Click it and Unblock the Notifications