எந்த ராசிக்காரர்கள் நாய்களை செல்ல பிராணிகளாக வளர்க்கலாம்? ஜோதிடம் சொல்வது என்ன?
சென்னை: எந்த ராசிக்காரர்கள் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த குறிப்பிட்ட ராசிக்காரர்கள் செல்லப் பிராணிகளை வளர்த்தால்தான் அது அவர்களுக்கு நன்மையில் போய் முடியும் என்கிறது சாஸ்திரம்.
பொதுவாக பலருக்கு நாய் வளர்ப்பு, பூனை வளர்ப்பு, குருவிகள் வளர்ப்பு உள்ளிட்டவைகளில் ஆர்வம் அதிகம். சிலர் முயல், வாத்து, கோழி, ஆடு உள்ளிட்டவைகளை கூட வளர்ப்பார்கள். இன்னும் சிலர் கலர் மீன்களை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

இது எல்லாவற்றையும் விட சிலர் ஆமை, பல்லி இனங்கள், எலிகள் உள்ளிட்டவைகளை கூட வளர்க்கிறார்கள். அந்த வகையில் யாரெல்லாம் நாய், பூனைகளை வளர்க்கலாம் என்பதை பார்க்கலாம்.
குரு, சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற ராசிக்காரர்கள் நாய்கள் வளர்ப்பதால் நன்மைகளை பெறலாம். நாய்கள் வளர்ப்பதால் உங்களிடம் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கும். நாய்கள் வளர்ப்பவர்களுக்கு கோபம் அதிகமாக வராது. வீட்டில் பூனை, குதிரை, மீன், நாய், ஆடு, மாடு உள்ளிட்ட பல விலங்குகளை நாம் பார்க்கிறோம்.
செவ்வாய், கேது, செவ்வாய், சனி ஆகியவை எந்த ஜாதகக்காரர்களுக்கு சேர்ந்து இருக்கிறதோ அவர்களுக்கு வளர்ப்பு பிராணியானது பாதியிலேயே இறந்துவிடும் அல்லது பாதியிலேயே ஓடிவிடும். இதில் கடக ராசிக்காரர்கள் அடங்குவார்கள். இவர்கள் நாய் வளர்க்கவே கூடாது. பொதுவாகவே சூரியன் பகை வீடாக இருந்தால் கடகம் மட்டுமின்றி எந்த ராசிக்காரர்களும் நாய் வளர்க்கவே கூடாது என ஜோதிடம் கூறுகிறது.
உங்கள் ஜாதகத்தில் நான்காம் அதிபதியோ நான்காம் பாவ அதிபதியோ கெட்டு போய்விட்டால் வளர்ப்பு பிராணிகளை நீங்கள் வளர்க்க முடியாது. அது உங்களுக்கு தங்காது. மீறி வளர்ப்பதால் உங்களுக்கு மன உளைச்சலும் போராட்டமும் வரும். சுக்கிரன் குருவுடன் சேர்ந்திருந்தாலோ சுக்கிரன் சந்திரன் 4ஆம் அதிபதியை விட பலமாக இருந்து 6,8, 12 -ல் மறையாமல் அஷ்டமாதிபதி பாதகாதிபதி உடன் சேராமல் இருந்தால் உங்களுக்கு வளர்ப்பு பிராணி வளர்ப்பு என்பது சாதகமாக இருக்கும்.
வளர்ப்பு பிராணிகளை கொடுக்கக் கூடிய காரகன் சுக்கிரன். இந்த சுக்கிரன் எந்த ஜாதகத்தில் ஆட்சியோ மூல திருகோணமோ உச்சமோ திரிகோண கேந்திர நிலைகளில் சுக்கிரன் இருந்தாலோ லக்னம் லக்னாதிபதி நம்மை அதிபதியோடு தொடர்பில் இருந்தாலோ வளர்ப்பு பிராணிகளை வளர்க்கலாம் என்று ஆசை இயல்பாகவே வரும்.
மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் சேவல் படத்தை சனி உச்சம் பெற்ற காலத்தில் வீட்டில் வைப்பதால் அதிர்ஷ்டம் ஏற்படும். அது போல் மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ராசிக்காரர்கள் வீட்டில் மீன் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மீன் என்பது மீன ராசிக்குரிய குறியீடாக இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் மீன் வளர்ப்பது அவ்வளவு நல்ல பலன்களை தராது.
இந்த தகவல்கள் எல்லாம் ஆங்காங்கே கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது. இதை முழுவதுமாக ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications