உலகையே திரும்பி பார்க்க வைக்கும் திருமலை திருப்பதியின் ஒற்றைக் கல்! கேட்கவே உடம்பு சிலிர்க்குதே!
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் சிலையில் மெய்சிலிர்க்க வைக்கும் பல்வேறு ரகசியங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். திருப்பதி கோயில் குறித்து ஏராளமான ரகசியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் அவரது திருவுருவ சிலையாகும்.
திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிலாதோரணம் என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகிலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது சுமார் 250 கோடி ஆண்டுகளாக இருக்கலாம்.

ஏழுமலையானின் திருமேனியும் இந்த பாறைகள் ஒரே விதமானவை. எந்த கருங்கல்லில் சிலை செய்தாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளி இருக்கும். அது போல் உலோகச் சிலையாக இருந்தாலும் உருக்கி வார்த்த இடம் தெரியும்.
ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக் கொண்டாலும் சொரசொரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையானின் திருமேனி மெருகு போடப்பட்டது போல் இருக்கும். அவரது விக்ரகத்தில் காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாமே புத்தம் புதுசு போல் பளபளப்பாக இருக்கும்.
ஏழுமலையான் சிலைக்கு தாடையில் இன்றளவும் ரத்தம் கசிந்து வருவதால் அவரது உருவச் சிலைக்கு பச்சை கற்பூரம் பூசப்படுகிறது. இது ஒரு ரசாயனம் ஆகும். இதை கருங்கல்லில் தடவினால் கருங்கல்லே வெடித்துவிடும். ஆனால் இந்த சிலாதாரண பாறையில் இதை தடவினாலும் பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான் சிலைக்கு ஆண்டுதோறும் பூசுகிறார்கள்.
ஆனாலும் அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. இதையடுத்து பட்டு பீதாம்பரத்தில் பட்டர்கள் ஒற்றி எடுப்பர். அது போல் தினமும் அபிஷேகம் செய்வதற்கு முன்னர் நகைகளை கழற்றும் போது ஆபரணங்கள் எல்லாம் சூடாக இருக்கும். திருப்பதியில் உள்ள சமையல் கட்டு பெரியது.
ஆனாலும் அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுலையானுக்கு வியர்க்கிறது. இதையடுத்து பட்டு பீதாம்பரத்தில் பட்டர்கள் ஒற்றி எடுப்பர். அது போல் தினமும் அபிஷேகம் செய்வதற்கு முன்னர் நகைகளை கழற்றும் போது ஆபரணங்கள் எல்லாம் சூடாக இருக்கும். திருப்பதியில் உள்ள சமையல் கட்டு பெரியது.
இங்கு பொங்கல், தயிர் சாதம், புளிச் சாதம், வடை, அதிரசம், போளி, அப்பம், மௌகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவா கேசரி, பாதாம் ரவா கேசரி, முந்திரி பருப்பு போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இந்த உணவுகளில் தயிர் சாதத்தை தவிர வேறு எந்த உணவும் குலசேகரப்பட்டியைத் தாண்டாது.
ஏழுமலையானுக்கான உடை 21 அடி நீளமும் 6 கிலோ எடையும் கொண்டதாகும். இந்த பட்டு பீதாம்பரத்தை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12 ,500 செலுத்த வேண்டும். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்துவதற்கு 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
திருப்பதியில் உள்ள ஓவியங்கள் எல்லாம் 300 ஆண்டுகள் பழமையானவை. ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. இது தவிர மார்கழி மாத அர்ச்சனைக்கும் வில்வம் உபயோகப்படுத்தப்படுகிறது. சிவராத்திரி அன்று ஷேத்திர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்கிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications