புரட்டாசியில் பத்திரப்பதிவு செய்யலாமா? புரட்டாசி மாதம் வாடகை வீடு போகலாமா? செய்யக்கூடாதது இதுதான்..

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரட்டாசி மாதம் துவங்கி நடந்து வருகிறது. இந்த புரட்டாசியில் அசைவம் சாப்பிடுவதை இந்துக்கள் தவிர்த்து விடுவார்கள். அதுபோல, புரட்டாசி மாதம் செய்யக்கூடாத காரியங்கள் என்னென்ன தெரியுமா? என்னென்ன செய்ய வேண்டும்?

தமிழ் மாதங்களிலேயே புரட்டாசி மாதம் சிறப்புக்குரியது.. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது.. இந்த புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

spirituality purattasi deed registration

சிறப்பு மாதம்: இந்த புரட்டாசி மாதத்தில், அசைவம் தவிர்த்துவிட வேண்டும். அன்னதானங்கள் வழங்க வேண்டும். அதேபோல, என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்..

புரட்டாசியில் புதிய வீடு வாங்குதல், புதிதாக தொழில் வியாபாரம் தொடங்குதல், கிரகப்பிரவேசம் அல்லது புதுமனை புகுவிழா செய்தல் வாடகைக்கு குடிபுகுதல் போன்ற சுபகாரியங்கள் இந்த மாதத்தில் செய்ய மாட்டார்கள். வீடு குடி போகவும் கூடாது. வாடகை வீடாக இருந்தாலும் சரி, சொந்த வீடாக இருந்தாலும் பால் காய்ச்சவும் கூடாது.

பெருமாள்: புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சம் 15 நாட்கள் முன்னோர்களை நினைத்து விரதம் இருப்பார்கள்.. எனவே, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது... எப்போதுமே பெருமாளை நினைத்து விரதம் இருக்கும் நாட்களில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் செய்ய கூடாது என்பார்கள்.. சுப நிகழ்ச்சிகள் செய்வதானால், சித்திரை, வைகாசி, ஆவணி, தை, பங்குனி போன்ற மாதங்களில் சுப நிகழ்ச்சிகள் செய்யலாம். இதனால் தம்பதிக்குள் இணக்கமான போக்கு ஏற்படும்.

புரட்டாசி மாதத்தில் பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாமிசத்தை தொடவே கூடாது.. விரதம் இருந்து வழிபடுவதால், இந்த மாதம் முழுவதுமே கருணையின் வடிவமாகவே திகழ வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள்: புரட்டாசியில் கட்டாயம் பெருமாள் வழிபாடு, நவராத்திரி பூஜைகளை செய்ய வேண்டும். அதேபோல, நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியில், கல்வி கற்க குழந்தைகளை சேர்த்துவிடலாம். புரட்டாசி மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தலாம். காரணம், இந்த நிகழ்ச்சி ஒரு நாள் மட்டும் நடக்க கூடிய நிகழ்ச்சியினால் வளைகாப்பு நடத்தலாம். ஒரு நிலம், மனை வாங்கி பத்திரப் பதிவு செய்ய ஏற்ற மாதமாகும்.

வாஸ்து பூஜை செய்வது, புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு கிருகப்பிரவேசம் செய்து பால்காய்ச்சுவதற்கு புரட்டாசி மாதம் ஏற்றதல்ல.
அதுமட்டுமில்லாமல் புரட்டாசி மாத்தில் வாடகை வீடு மாறுவதும் கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+