சிரிக்கும் புத்தர் சிலைகளை வீட்டில் வைக்கலாமா.. புத்தர் சிலையை வைத்தால் பணம் கொட்டுமா? வாவ் ஸ்பெஷல்
சென்னை: சிரிக்கும் புத்தர் சிலைகளை வீடுகளில் வைக்கும்படி முன்னோர்கள் அறிவுறுத்துகிறார்கள்.. இந்த சிரிக்கும் புத்தர் சிலையின் பின்னணி என்ன? இதை வீடுகளில் வைத்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? இதோ சுருக்கமாக பார்ப்போம்..!!
நம்முடைய வீட்டிலுள்ள பொருட்களை வாஸ்துப்படி சரியான திசையில் வைத்திருப்பதன் மூலம், வீட்டிற்குள் எப்போதுமே நேர்மறை ஆற்றல் மேலோங்கும்.. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அந்தவகையில், கருணை, நல்லொழுக்கம், நல்லெண்ணத்தின் அடையாளமாக திகழும் புத்தர் சிலையை, பலர் தங்கள் வீடுகளில் வைத்திருக்கிறார்கள்.. புத்தரின் சிலையை வீட்டில் வைத்திருப்பதால், வீட்டில் அமைதி, செழிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது..
புத்தர் சிலைகள்: புத்தர் சிலையை பார்க்கும்போது நம்முடைய மனதிலும் நல்லெண்ணமும் கருணையும் ஏற்படும். அமைதி முகம் கொண்ட புத்தரின் சிலை முன்பு தியானம் செய்தால், நம்முடைய மனமும் அமைதிப்பெறும்.
புத்தர் சிலைகளில் பல வகைகள் உள்ளன என்றாலும், குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் புத்தரின் சிலையை (Laughing Budhhda) வைப்பது நல்லது என்கிறார்கள்..
வடகிழக்கு திசை: அதிலும், வீட்டின் கிழக்கு திசையில் வைக்க வேண்டும். கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசை நோக்கி சிலையை வைத்தால் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சிரிக்கும் புத்தர் சிலையை ஹால், டைனிங் ஹால் போன்ற இடங்களில் தென் கிழக்கு திசையில் வைத்தால், எதிர்பாராத அதிர்ஷ்டமும், வருமானமும் உயரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த சிரிக்கும் புத்தருக்கு பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.. புத்தர் என்றால் ஞானம் அடைந்தவர் என்று பொருள். எனவே, கவுதம புத்தருக்கு முன்பே எத்தனையோ புத்தர்கள் வாழ்ந்தனர்.. அதில், ஒருவர்தான் ஹொடாய்.
ஜென் துறவி: இவர் ஒரு ஜென் துறவியாவார்.. ஜப்பானை சேர்ந்தவர்.. கி.பி. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஜென் துறவிகள் பெரும்பாலானோர், வார்த்தைகளை பயன்படுத்தாமல் செயலாலும், முயற்சியாலும் மட்டுமே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள். அதாவது, சிரிப்பது, பார்ப்பது, ஓவியம் வரைவது போன்ற செயல்களும் மக்களுக்கு விழிப்புணர்வை தந்தவர்கள். பணம், உடை எதையுமே இவர்கள் பெரிதாக நினைக்க மாட்டார்கள்.
மனமற்ற நிலையை பெற்றால்தான், மகிழ்ச்சியை பெற முடியும் என்று நம்பிக்கை கொண்டவர்கள். இந்த வழியில் வந்தவர்தான் ஹொடாய் என்ற ஞானி.. இவரும் மக்களிடம் சிரித்தும், மகிழ்வித்தும் விழிப்புணர்வை தந்தவர்... சிரிப்பின் மூலமாக, தன்னுடைய சக்தியை பிறருக்கு அளித்தவர்.. சிரிப்பாலேயே மக்கள் மனதை ஒருமைப்படுத்தியவர்..
தொப்பை சிரிப்பு: தொப்பை குலுங்க குலுங்க சிரித்து சிரித்தே, பிளவுபட்ட மக்கள் மனங்களை ஒன்றிணைத்தவர்.. இவரை பார்த்ததுமே மக்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.. ஹொடாய் நடனமாடினால் அவர்களும் சேர்ந்து நடனமாடினார்கள்.. ஹொடாயின் சிரிப்புதான், மக்களுக்குள்ளேயே புதுவிதமான மாற்றத்தை உண்டுபண்ணியது.
ஒரு இடத்தில் நில்லாமல், சீனா, கொரியா என பல்வேறு நாடுகளுக்கும் தன்னுடைய புன்சிரிப்பை கடத்தியவர் ஹொடாய். அதனாலதான், இவரை 'சிரிக்கும் புத்தர்' என்றும், 'மகிழ்ச்சிப் புத்தர்' என்றும் மக்கள் அன்பால் அழைத்தார்களாம். இவர் எங்கு இருக்கிறாரோ, அங்கெல்லாம் மகிழ்ச்சி பீறிட்டு கிளம்பியது. ஒருவார்த்தைகூட பேசாமல் தன்னுடைய சிரிப்பாலேயே மனித மனங்களை ஒன்றுசேர்த்த துறவி ஹொடாய்.
மரணம்: சுருக்கமாக சொல்லப்போனால், "மரணத்தை பார்த்து சிரித்தால், அந்த மரணத்தையே அழித்துவிடலாம்" என்ற நம்பிக்கையை விதைத்தவர் ஹொடாய்.. அதனால்தான், வீடுகளில் என்றுமே மகிழ்ச்சி பொங்கி இருக்க வேண்டும் என்பதற்காக இவரது சிலையை சிரிக்கும் புத்தர் சிலையாக, வீடுகளில் வைத்திருக்க சொல்கிறார்கள்..!!!
இதற்கிடையே, ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி மனு தக்கல் செய்துள்ள ஜெயம் ரவி, மும்பையில் செட்டிலாக இருப்பதாகவும் ஒரு டாக் ஓடிக் கொண்டிருக்கிறது.. மும்பையில் தனி அலுவலகம் அமைத்துள்ளார் என்றாலும், இந்திப் படங்களிலும் நடிக்க சில நிறுவனங்களுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படங்கள் கமிட் ஆகிவிட்டால், மும்பையிலேயே அவர் செட்டில் ஆனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்கிறார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications