காசு, மகிழ்ச்சி தங்கியிருக்க.. வீட்டில் காலண்டரை இப்படி மாட்டுங்க. பழைய காலண்டரை என்ன செய்ய போறீங்க?
சென்னை: நம்முடைய வீடுகளில் பயன்படுத்தப்படும் காலண்டர்களை எந்த திசையில் மாட்டி வைக்க வேண்டும்? உபயோகப்படுத்தப்பட்ட பழைய காலண்டர்களை என்ன செய்ய வேண்டும்? தெரியுமா?
காலண்டரை எப்படி மாட்டி வைக்க வேண்டும் என்பது குறித்துகூட வாஸ்துவில் தெளிவாகவும், விளக்கமாகவும் சொல்லப்பட்டுள்ளது.. காரணம், காலண்டரை சரியான திசையில் வைப்பதன் மூலம், அந்த வீட்டில் வளம் சேர்க்கப்படுகிறது, தடைகள் நீங்கி வெற்றிகள் பிறக்கின்றன என்று அர்த்தம். அதனால்தான், காலண்டர் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த சொல்கிறார்கள்.

சாமி படம் இருக்கும் காலண்டர்கள் அல்லது இயற்கை எழில்தோற்றம் கொண்ட காலண்டர்கள் என எதுவாக இருந்தாலும், கிழக்கு, வடக்கு திசைகளில் மாட்டி வைக்க வேண்டும். அதாவது காலண்டர் கிழக்கு திசையை நோக்கியோ அல்லது வடக்கு திசையை நோக்கியோ இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.
வடக்கு திசை: வாஸ்துவில், கிழக்கு திசை சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த திசையில் உதிக்கும் சூரியனின் நிறமான இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிற காலண்டரை வைப்பது மிகவும் நல்லது என்கிறார்கள். அதேபோல, வடக்கு திசையில் காலண்டர்களை மாட்டும்போது, வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வருகிறது. இது வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை பராமரிப்பதாக நம்பப்படுகிறது.
மேற்கு திசையில் இருக்கும்படியும் காலண்டரை மாட்டலாமே தவிர, எக்காரணம் கொண்டும் தெற்கு திசையை நோக்கி காலண்டரை மாட்டிவிட கூடாது.. தெற்கு திசை என்பது பித்ருக்கள், துர்சக்திகளுக்கு உரிய திசைகளாக கருதப்படுகிறது.. அதுமட்டுமல்ல, தெற்கு சுவரில் காலண்டரை மாட்டி வைத்தால், ஒரு நபரின் முன்னேற்றத்திற்கான பாதையில் தடைகளை உருவாக்கிவிடும்.. அதேபோல, குடும்ப தலைவரின் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
நினைவாற்றல்: அதனால்தான், இந்த திசையில் மாட்டக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள். பிள்ளைகள் படிக்கும் அறையிலும், கிழக்கு நோக்கு காலண்டரை மாட்டி வைத்தால், அவர்களின் புத்தி கூர்மையும், நினைவாற்றலும் அதிகமாகும்.
வருடம் முடிந்ததுமே அந்த பழைய காலண்டரை கோவிலிலோ அல்லது மரத்தடியிலோ கொண்டு போய் வைத்து விட்டு வந்து விடுவார்கள்.. அதேபோல, அந்த காலண்டர்களில் சாமி படம் உள்ளது என்பதற்காகவே, வீட்டிலேயே வைத்திருப்பார்கள். இது இரண்டுமே தவறானது..
பழைய காலண்டர்களை எப்போதுமே வீட்டில் வைத்திருந்தால் பல்வேறு முட்டுக்கட்டைகளை உருவாக்கிவிடுமாம். பழைய காலண்டரை குப்பையில் போடாமல் ஓடும் நீரில் விட்டு விட வேண்டும்.
கிழிந்த காலண்டர்: அதேபோல, கிழிந்த காலண்டரை பயன்படுத்தக்கூடாது.. கதவுகளுக்கு முன்னாலும், பின்னாலும் காலண்டர்களை மாட்டி வைக்கக்கூடாது. இதுவும், குடும்பத்தில் சிக்கலை தந்துவிடும். பழைய காலண்டர் மேல் புது காலண்டரை மாட்டி வைப்பதும் தடையை தந்துவிடும்... காலண்டரை வீட்டின் வாசலிலும் தொங்கவிடக்கூடாது. காலண்டரில் அகோரமான படங்கள், விலங்குகள், சோகமானவர்கள் படங்கள் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications