வாராஹி அம்மனை யாரெல்லாம் வழிபடலாம்? எந்த நாளில் கும்பிட்டால் விசேஷம்?
சென்னை: வாராஹி அம்மனை எப்போது யாரெல்லாம் வழிபடலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் எந்த நாளில் அவரை வழிபட்டால் பல்வேறு நன்மைகளை தரும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படுபவர் வாராஹி அம்மன். வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சிலர் சொல்கிறார்கள். பன்றியின் முகம், பெண்ணின் உடல் கொண்டவளாக இருக்கிறார் வாராஹி.

இவர் கருணை தெய்வம் என்றால் கோபக்காரி என்பதால் உக்ர தெய்வமாக கருதப்படுகிறார். இவரை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்றால் வீட்டை சுத்தமாக வைத்திருந்து, அவருக்கென பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும்.
தன்னை நம்பிய பக்தர்களுக்கு ஏற்படும் தீமையை அடித்து விரட்டிவிடுவார். ஆங்காங்கே வாராஹிக்கு கோயில்கள் இருந்தாலும் தஞ்சை பெரிய கோவிலிலும் காசியிலும் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.
எந்த கோயிலிலும் முதலில் விநாயகருக்குத்தான் பூஜை செய்வது வழக்கம். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் வாராஹிக்கு முதலில் பூஜை செய்யப்படுகிறது.
வீட்டில் வாராஹியின் படம் அல்லது சிலையை வைக்க விரும்பினால் அதை வடக்கு நோக்கி வைக்க வேண்டும். வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். நைவேத்தியமாக தயிர் சாதம், மாதுளை பழத்தை படைக்கலாம்.
அது போல் கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வாராஹி அம்மனை வழிபடலாம். அது போல் மகரம், கும்ப ராசிக்காரர்களும் வாராஹியை வழிபடலாம். வாராஹியை பஞ்சமி, பவுர்ணமி, அமாவாசை ஆகிய திதிகளில் வணங்கினால், வாராஹி அருள் பூரணமாக கிடைக்கும் என்கிறார்கள்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாள் வாராஹி என்கிறார்கள். தேய்பிறை பஞ்சமி நாளில் வாராஹியை வழிபட்டால் கடன் தீரும். அது போல் வளர்பிறை பஞ்சமியில் வாராஹியை வழிபட்டால் வாழ்வில வளம் பெறலாம் என்கிறார்கள்.
தேய்ப்பிறை பஞ்சமி திதி இருக்கும் நாளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அன்னை வாராஹியை வழிபடலாம். 5 பஞ்சமி அல்லது 5 ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கம் ஏற்றி வாராஹியை வழிபடலாம் என்கிறார்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications