பூஜை அறையில் இந்த பொருள் கட்டாயம் இருக்கணும்!வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்க இதெல்லாம் அவசியம்
சென்னை: இந்து மதத்தின் முக்கிய விஷயமாக பார்க்கப்படுவதும், போற்றப்படுவதும் வீட்டின் பூஜை அறைகள்தான்.. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பூஜை அறைகளில் வாஸ்து சாஸ்திரத்தின்படி, பூஜை அறையில் வைக்கக்கூடாத சில பொருட்கள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
அப்பார்ட்மென்ட் வீடாக இருந்தாலும், தனி வீடாக இருந்தாலும், நம்முடைய வீட்டில் பூஜை அறையை வாஸ்து சாஸ்திரப்படி அமைத்தால்தான், குடும்பத்தில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் தழைக்கும்..

ஈசான்ய மூலை: அந்தவகையில், வீட்டில் பூஜை அறையை ஈசான்ய மூலை என்று சொல்லப்படும் வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும்.. இந்த இரண்டு திசைகளிலும் பிராணவாயு அதிகமாகக் கிடைக்கும் என்று அறிவியல்பூர்வமாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஒருவேளை ஈசான்ய மூலையில் பூஜையறை அமையாமல் போனால், வடமேற்கே பூஜை அறையை அமைக்கலாம் என்கிறார்கள்.. ஆனால் எக்காரணம் கொண்டும், பூஜையறைக்கு பக்கத்திலேயே குளியலறை, கழிவறை இருக்கக்கூடாது.
சுவாமி படங்கள்: கிழக்கு நோக்கி இருக்கும்படி சுவாமி படங்கள் இருப்பதை போன்று அமைக்க வேண்டும். பூஜையறையின் வாசல் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பூஜையறையில் உள்ள ஸ்வாமி படங்கள், வடக்கு திசை அல்லது கிழக்கு திசை நோக்கியே இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
ஈசான்ய மூலையில் பூஜையறை இருக்கும்போது, வீசும் காற்றில் சாம்பிராணி, ஊதுவத்தியின் மணம் வீடு முழுவதும் பரவி, தெய்வகடாட்சம் பிரகாசிக்கும்.
இஷ்ட தெய்வங்கள்: எந்த அளவுக்கு இந்த பூஜையை நாம் எந்த அளவுக்கு பராமரிக்கிறோமோ அந்த அளவுக்கு சுபீட்சம் கிடைக்கும் என்கிறார்கள் பெரியவர்கள். அந்தவகையில், பூஜை அறைக்குள் எந்த இஷ்ட தெய்வத்தையும் வைத்துக்கொள்ளலாம். குலதெய்வங்களின் படங்களையும் வைத்து கொள்ளலாம்.. ஆனால், முன்னோர்களின் படங்கள் இருக்கக்கூடாது என்கிறார்கள்.
அதேபோல, இரும்பு பொருள்களை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது.. காரணம், இரும்பு யமனுக்கு உரியது.. அதுவும் இல்லாமல், இரும்பினால் நேர்மறை சக்திகளை கிரகித்து கொள்ள முடியாது என்பதால், வெள்ளி, தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, மண்ணால் ஆன பூஜைப் பாத்திரங்களை பயன்படுத்தலாம்.
மங்கள பொருட்கள்: அதேபோல, சிறிய கிண்ணத்தில் அரிசி, பருப்பு ஆகிய மங்கள பொருட்களை, சுவாமி படங்களுக்கு முன்பு நிரப்பி வைத்து பூஜை செய்தால் இன்னும் சிறப்பாகும்.. அதிலும் விநாயகரின் பாதத்திற்கு அருகில் எப்போதும் சிறிது அரிசி வைத்திருக்க வேண்டும்... இதனால் வீட்டிற்குள் வறுமை அண்டாதிருக்கும்.
சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜைகளை செய்ய வேண்டும்.. மறுநாள் அந்த தண்ணீரை கூரையில் ஊற்றிவிட வேண்டும்.. இதனால், வீட்டிலிருக்கும் துர்சக்திகள் நம்மை நெருங்காமல் இருக்கும். பஞ்ச பாத்திரத்திலும் தண்ணீர் இருக்க வேண்டும்.. அதில், துளசி இலை, அல்லது ஏதாவது ஒரு பூவினை போட்டு வைக்கவேண்டும்.. பூஜைக்கு புத்தம் புதிய மலர்களையே பயன்படுத்த வேண்டும்.. அதேபோல, வாடிய மலர்களை உடனடியாக நீக்கிவிட வேண்டும்.
மகாலட்சுமி வாசம்: பூஜை அறையில் மகாலட்சுமி வாசம் செய்யப்படுவதாக சொல்லப்படும் பொருட்களில் ஒன்றான கண்ணாடியை வைத்திருக்க வேண்டும்... இதற்கும் பூஜை செய்யும்போது தீப, தூப ஆராதனை காட்ட வேண்டும்.
சாம்பிராணிகள், ஊதுவத்திகளை ஏற்றி வைத்த பிறகு பூஜையை ஆரம்பிக்கலாம்.. ஏற்றிவைக்கப்படும் அகல் விளக்கு, ஊதுவத்திகள், பூஜை செய்யும் நபரின் வலது பக்கமாக இருக்க வேண்டும்.. ஆனால் வெறுமனே விளக்கேற்றி வைத்து பூஜை செய்யாமல் ஏதாவது நைவேத்தியம் படைத்து பூஜை செய்வது சிறப்பு.. பெரியஅளவுக்கு முடியாமற்போனாலும், சிறிது கற்கண்டு வைத்து பூஜை செய்தாலும் போதும்.
பூஜை பொருட்கள்: பூஜைக்குப் பயன்படுத்தும் பொருள்களை பூஜை அறையிலேயே வைக்கவேண்டும்.. பூஜை நடைபெறாத சமயங்களில் அந்த அறையைத் ஸ்கிரீன் போட்டு மறைத்துவிட வேண்டும். பூஜையறையில் தேவையற்ற பொருட்களை போட்டு வைக்கக்கூடாது..
பூஜை அறையை மாலையில் இருட்டாக வைக்கக்கூடாது.. காலையில் சூரியன் உதயமாகும் நேரத்திலும், மாலையில் அஸ்தமிக்கும் வேளையிலும் கண்டிப்பாக, வீட்டுப் பூஜையறையில் நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றன தர்ம சாஸ்திர நூல்கள்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications