கற்பூரம் பரிகாரம்.. கற்பூரத்தை ஏற்ற சிறந்த திசை இதுவா? எந்த நேரத்தில் கற்பூரங்களை ஏற்றலாம்.. டிப்ஸ்
சென்னை: இந்து மத வழிபாட்டில் கற்பூரத்தின் பயன்பாடுகள் அபரிமிதமானது.. கற்பூரத்தின் மகத்துவமும் மிகப்பெரியது.. கடவுள்களுக்கு கற்பூரம் காட்டபடுவதன் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
பொதுவாக கற்பூரங்களில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.. ஆன்டிபயாடிக் நிறைந்த பண்புகள் இந்த கற்பூரங்களில் உள்ளன.. அதனால்தான், சுவாசப் பிரச்சனைகளுக்கும், சருமநோய்களுக்கும், தலைமுடி ஆரோக்கியத்துக்கும் கற்பூரங்கள் பயன்படுத்துவதை பார்க்கிறோம்.

அந்தவகையில், கற்பூரங்கள் பற்றி சாஸ்திரங்கள் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றன.. கற்பூரத்தை எரிப்பது வீட்டின் வளிமண்டலத்தை சுத்தப்படுத்தக்கூடியது..
அர்த்தம் என்ன: கற்பூரத்தின் வாசனையானது, வீட்டை சுற்றிலும் தெய்வீக உணர்வை தோற்றுவிக்கும்.. நேர்மறையான சக்திகள் அதிகரிக்கும். கற்பூரத்தை இறைவனிடம் ஏற்றிவைக்கும்போது, அது முற்றிலும் எரிந்து, அணைந்து, கரைந்துவிடுவதுபோலவே, இறைவனிடத்தில பக்தியில் கரைந்து, ஒன்றுடன் நாமும் கலந்து, இறைவனிடம் சரணாகதி அடைய வேண்டும் என்ற நோக்கத்தை உணர்த்துவதுதான் கற்பூரத்தை ஏற்றுவதின் நோக்கமாகும்.
திருஷ்டியை கழிக்கக்கூடியது இந்த கற்பூரம்.. உதாரணத்துக்கு வேறொருவர் குடியிருந்த வாடகை வீட்டிற்குள் நீங்கள் குடிபுக நேரிடும்போது, கற்பூரத்தை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.. இதனால், பழைய தீய சக்தியை முழுமையாக அகலும் என்று வாஸ்து அறிவுறுத்துகிறது.
வாஸ்து டிப்ஸ்: அதேபோல, கற்பூரம் ஏற்றுவதில் மனமகிழ்ச்சி, குடும்பத்தில் செழிப்பு, அமைதியை கொண்டுவர முடியும்.. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் நீங்க வேண்டுமானாலும், கற்பூரத்தை கொளுத்தலாம். இதனால், மனம் தூய்மை அடைந்து, பிணக்குகள் விலகும்.
இரண்டு கிராம்புகளையும் கற்பூரத்துடன் சேர்த்து ஏற்றி வைத்தால், வீட்டில் கடன்பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.. பண பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.. அதேபோல, சிவப்பு ரோஜாவில், கற்பூரத்தை வைத்து எரித்து அந்த பூவை துர்கா தேவிக்கு அர்ச்சனை செய்துவந்தாலும், பணக்கஷ்டம் விலகி சுபிட்சம் கிடைக்கும்.
எப்போது ஏற்றலாம்: வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்ற வேண்டும், எப்போது பூஜை செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் பல இருக்கின்றன.. எப்போதுமே பிரம்ம முகூர்த்தத்தில் கற்பூரம் ஏற்ற வேண்டும் என்று வேத ஜோதிடர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்..
காலை நேரத்தில் பூஜை செய்யும் பொழுது கற்பூரம் ஏற்றக்கூடாது என்று வாஸ்து ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.. காலையில் வீட்டில் நெய்விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்குத்தான் ஏற்ற வேண்டுமாம்.
தோஷங்கள்: அதேபோல மாலையில் விளக்கேற்றும்போதும், மாலை நேரத்தில் பூஜை செய்யும்போதும் கற்பூரம் ஏற்றலாம்... எப்போதுமே வீட்டின் தென்கிழக்கில், மாலை நேரங்களில் ஏற்றுவது நல்லது.. ஒருவேளை ஜாதகத்தில் தோஷமிருப்பவர்கள், நெய்யுடன் கற்பூரத்தை ஏற்றி வைத்தால், தோஷங்கள் நீங்குமாம். மொத்தத்தில் ஒவ்வொரு முறை விளக்கேற்றும் போதும் கற்பூரம் ஏற்றுவது வீட்டுக்கு நல்லது என்றே அறிவுறுத்துகிறார்கள்.
இரவு நேரத்திலும், தூங்க செல்வதற்கு முன்பு வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் கற்பூரத்தை ஏற்றலாம்...இதனால், தூங்குவதற்கான நிம்மதியான சூழல் உருவாகும்.












Click it and Unblock the Notifications