வெற்றிலை பாக்கு உங்க கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? ஒரு வெற்றிலை போதுமே.. பல பிரச்சனை தீரும்
சென்னை: வெற்றிலை உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது.. அதேசமயம், பூஜைகளிலும், பரிகாரங்களிலும் வெற்றிலையின் முக்கியத்துவம் என்ன? வெற்றிலையை கனவில் கண்டால் என்ன அர்த்தம்?
எந்தவொரு சுபகாரியம் என்றாலும், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் இவைகள் கட்டாயம் இடம்பெற்றுவிடும்.. அர்ச்சனையிலும் இந்த 3 பொருட்கள் கட்டாயம் இடம்பெறும். அந்த அளவுக்கு இந்த மத வழிபாட்டில் வெற்றிலையின் பங்கு தவிர்க்க முடியாததாகி விட்டது.

தாம்பூலம்: வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்வதியும், காம்பில் பார்வதியும் வாசம் செய்வதாக ஐதீகம்... இந்த 3 தேவிகள் இருக்கும் இடங்களிலெல்லாம் முப்பெரும் தேவர்களும் இருப்பார்கள். எனவே, இவர்களின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், வாழ்க்கையிலும் வெற்றி, மங்கலம், செல்வம் ஆகியன நிறைந்து இருக்க வேண்டும் என்பதற்காகவும் வெற்றிலை பாக்கு அர்ச்சனைக்கு வைத்து வழிபடுகிறார்கள்.
அதேபோல, பரிகார செய்வதிலும் வெற்றிலைக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.. எப்போதுமே வீட்டில் மனநிம்மதி குறைந்தாலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குடும்பத்தில் வறுமை பீடித்தாலோ, இதற்கெல்லாம் வெற்றிலை தீர்வை தருகிறது.
பரிகாரம்: வெற்றிலையை வாங்கி, அதை கழுவி சுத்தம் செய்து, வீட்டின் வாசலிலேயே தொங்கவிட்டால், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் பரவும் என்கிறார்கள்.. ஆனால், வெற்றிலையை காய விடக்கூடாது.. தினந்தோறும் புதிய இலையை கட்டி தொங்கவிட வேண்டும்.
அதேபோல, ஒரு தாம்பூல தட்டின்மீது ஒரே ஒரு வெற்றிலையும், அதன்மீது பச்சை கற்பூரத்தையும் வைக்க வேண்டும்.. பச்சை கற்பூரத்தில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டு, இந்த தட்டை அப்படியே பூஜையறையில் வைத்து பச்சை கற்பூரத்தை ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும்போது, உங்களது பிரார்த்தனையை மனமுருகி சொல்லலாம்.
பலன்கள்: அதேபோல, வெற்றிலை வாங்குவது போல் கனவு வந்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் வரப்போகிறது என்று அர்த்தமாம்.. அல்லது இத்தனை நாளும் உங்களை சூழ்ந்து வந்த இன்னல்கள் தீர போகிறது என்று அர்த்தமாம்.. திருமணம் நடைபெறும் நிச்சய தாம்பூலம் வைபவத்தை காண்பது நல்லது. திருமணம் ஆகாதவர்களும் இதனை கனவில் கண்டால் விரைவில் அவர்களுக்குத் திருமணம் நடந்துவிடுமாம்.
அதேபோல, ஏதாவது ஒரு விஷயத்தை செய்யலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கும்போது, உங்கள் கனவில் வெற்றிலை பாக்கு வந்தால், அது பச்சை கொடி காட்டுவதாகவே அர்த்தமாம்.. அந்த செயலை நீங்கள் குழப்பமின்றி செய்யலாம்.. அதில் உங்களுக்கு வெற்றியும் கிடைக்குமாம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications