48 நாள் இதை செய்தால் நடக்கும் அதிசயம்.. விரதம், மருந்துகள் முதல் குங்குமம் வரை "1 மண்டலம் " நன்மைகள்
சென்னை: ஆன்மீகத்தில் 48 நாட்கள் எனப்படும் ஒரு மண்டலம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. 48 நாட்களுக்கு அப்படியென்ன விசேஷம்? விரத முறைகளிலும், மருந்து சாப்பிடும் முறைகளிலும் 48 நாட்கள் வலியுறுத்தப்பட என்ன காரணம்?
எந்த ஒரு செயலும் நன்றாக நடைபெற நவக்கிரகங்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள் ஆகிய சக்திகளின் துணை வேண்டும் என்ற அடிப்படையிலேயே மண்டல வழிபாடு கடைப்பிடிக்கப்படுகின்றன..

சூரியன் முதல் கேது வரையுள்ள 9 கிரகங்கள், மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகள் மற்றும் அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றின் கூட்டுத்தொகையான 48- என்பது ஒரு மண்டலம் ஆகும். வருடத்தின் எந்த நாளாக இருந்தாலும், அந்த நாள் தொடங்கி 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றின் கதிர்வீச்சு பெற்ற அனைத்து நாட்களும் கணக்கில் வந்துவிடுகின்றன.
இதன் அடிப்படையில்தான், தொடர்ச்சியாக 48 நாட்களான, ஒரு மண்டலம் காலத்துக்கு செய்யப்படும் எந்த செயலும், வெற்றிகரமாக நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது..
இயற்கை மருந்து: இதை வைத்துதான், சித்த மருத்துமுறையில் இயற்கை மருந்தை ஒரு மண்டலம் சாப்பிட சொல்கிறார்கள்.. இப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் மருந்து சாப்பிடும்போது, எப்பேர்ப்பட்ட நோயும் நிரந்தரமாக குணமடையும் என்பது ஐதீகம். அதேபோல, ஆன்மிக ரீதியாக தொடர்தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் இறைவழி பாடுகள் அல்லது வேண்டுதல்கள் நிறைவேறுவதாகவும் நம்பிக்கை இருக்கிறது.
48 நாட்கள் விரதம் இருந்தால், கலிதோஷங்கள் ஏற்படாது என்பார்கள்.. அத்துட்ன, நட்சத்திரங்கள், ராசிகள், கிரகங்களால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்றும் நம்பப்படுகிறது. குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் 48 நாட்கள் விரதம் இருக்கலாம்.. முருகப் பெருமானுக்கு 48 நாட்கள் விரதம் இருந்தால் என்ன வேண்டினாலும், என்ன நினைத்தாலும் நிச்சயம் நடக்கும்.
விரத முறைகள்: பெண்களுக்கு இது முடியாது.. எனினும், மாதவிலக்கு ஆன காலங்களில் விரதத்தை நிறுத்தி விட்டு, மீண்டும் பூஜை அறைக்கு செல்லும் நாளில் துவங்கி, மீண்டும் விரதத்தை துவங்கலாம். குழந்தை வரம் வேண்டி இந்த விரதத்தை இருப்பவர்கள் விரதம் இருக்கும் 48 நாட்களும் கண்டிப்பாக தாம்பத்யத்தில் ஈடுபடக் கூடாது என்பார்கள்..
நெற்றியில் பெண்கள் குங்குமம் வைப்பதிலும், 48 நாட்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.. சனாதன தர்மத்தில் சிவப்பு என்பது சக்தியின் நிறமாகவும், கட்டுப்பாடு, அடக்கம் போன்றவற்றின் நிறமாகவும், துர்கா தேவிக்கும், பராசக்திக்கும் உகந்த நிறமாகவும் கருதப்படுகிறது.. எனவே திருமணமான பெண்கள், குங்குமம் வைக்கும்போது, கணவருக்கு எந்த, கெடுதியும் நெருங்கவிடாமல், பார்வதி தேவி பாதுகாப்பாள் என்பது நம்பிக்கையாகும்.
48 நாட்கள்: நெற்றியில் குங்குமம் பெரிதாக யார் வைக்கிறார்களோ அவர்களுக்கு எப்போதுமே நல்லது நடக்கும் என்று ஆன்மீக பெரியவர்களும் சொல்கிறார்கள்.. குறைந்தபட்சம் 48 நாள் நெற்றியில் குங்குமம் வைத்தால் அந்த குடும்பத்தில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும் அனைத்தும் தீர்ந்துவிடுமாம்.. வாழ்க்கையில் வெற்றிகள் கிடைத்து கொண்டே இருக்க வேண்டுமானால், பெண்கள் தினமும் நெற்றியில் குங்குமம் அணிய வேண்டும் என்கிறார்கள்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications