நம்ப முடியாத அதிர்ஷ்டம்.. டிராகன், தங்க மீனின் ஸ்பெஷாலிட்டி.. வாஸ்து மீன் தொட்டி வைக்க பெஸ்ட் திசை
சென்னை: வீடுகளில் மீன் தொட்டியை வைக்க வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் சொல்வது ஏன் தெரியுமா? மீன்களை வீட்டில் வளர்ப்பதால் மருத்துவ நன்மைகள் உள்ளதா? வாஸ்துபடி மீன் தொட்டிகள் தரும் நன்மைகள் என்னென்ன? எந்தெந்த திசையில் மீன் தொட்டிகளை வைக்கலாம்? என்ன வகையான மீன்களை தொட்டிகளில் வளர்க்கலாம்? இதனை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பொதுவாக, மீன்கள் நீந்துவதை பார்த்தாலே பாரமான மனமும் இலகுவடைந்துவிடும்.. சோர்வு, மன அழுத்தம் நீங்கிவிடும்.. அளவுக்கு அதிகமான குழப்பம், இனம்புரியாத மன அழுத்தம் இருந்தால், மீன்கள் நீந்தும் தொட்டியை சிறிது நேரம் உற்று பார்த்தாலே, மனம் இயல்பு நிலைக்கு வந்துவிடுமாம்..அதுமட்டுமல்ல, வீடுகளில் மீன் வளர்ப்பது, இதய துடிப்பை குறைக்க உதவுவாக, மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நரம்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைத்து, ரத்த அழுத்தத்தையும் குறைக்க செய்கிறது.. எனவே, உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள், மீன் தொட்டிகளை தாராளமாக வீடுகளில் வளர்க்கலாம். மீன்கள் நீந்தும் சத்தத்தை கேட்டால், அது மனப்பதட்டத்தை நீக்கி, கவனத்தையும் ஒருமுகப்படுத்துமாம்..

நேர்மறை அதிர்வுகள்
மீன்கள் தொட்டியில் நீந்தும்போது, நேர்மறை அதிர்வுகள் வெளியிடுகிறதாம். எந்நேரமும் தூங்காமல் இருக்கும் மீன்கள், தீயசக்திகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கக்கூடியவை. எனவேதான், மீன் தொட்டிகள் உள்ள இடங்களில் தீய ஆற்றல்கள் எதுவுமே அண்டுவதில்லை.. நேர்மறை ஆற்றலை பரப்பக்கூடிய தன்மை மீன்களுக்கு உண்டு.
வாஸ்துவில் முக்கிய இடத்தை மீன்கள் பிடித்துள்ளன.. மீன் தொட்டி உள்ள வீடுகளில் நிதி நெருக்கடி இருக்காது.. ஆரோக்கிய குறைபாடு இருக்காது.. சதுரமான அல்லது நீளமான மீன் தொட்டியை தேர்ந்தெடுக்கலாம். ஆனால், தொட்டியை அழுக்காக மட்டும் வைத்திருக்கக்கூடாது.. அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
மீன் தொட்டிகள்
கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் மீன் தொட்டிகளை வைக்கலாம். வடகிழக்கு திசையில் வீட்டிற்குள் நுழையும்போது, இடது பக்கத்தில்தான் தொட்டி இருக்கலாம். இதனால் பிள்ளைகளின் படிப்பு, பிசினஸ், போன்றவை சிறந்த வளர்ச்சியில் இருக்கும். வடகிழக்கு திசை அமையாவிட்டால் தென்கிழக்கு பகுதியிலும் மீன் தொட்டிகளை வைக்கலாம்.
வீட்டின் வரவேற்பறையில் தென்மேற்கு மூலையில் மீன் தொட்டியை வைப்பதும் சிறப்பு. எப்போதுமே வீட்டிற்குள் நுழைபவர்களின் கண் பார்வை மீன் தொட்டியில் விழவேண்டும். சமையலறை, படுக்கையறையில் வைக்கக்கூடாது..
பொதுவாக மீன்கள் மங்களரமான மற்றும் ஆடம்பரத்தின் சின்னமாக கருதப்படுகிறது.. அதனால்தான், வீட்டில் ஒரு மீன் தொட்டியை வாங்கி வைக்க சொல்கிறார்கள்.. வீட்டில் மீன்களை வளர்க்கும்போது, வீட்டிலுள்ள நெருக்கடியை மீன்கள் உள்வாங்கிக் கொள்கிறதாம்.. வீட்டில் செழிப்பும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கவும் உதவி செய்வதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கருப்பு மீன் வளர்க்கலாமா
அந்தவகையில், வாஸ்து மீன் என்றாலே தொழில் செய்பவர்கள், விலை அதிகம் என்றாலும் டிராகன் வகையைதான் தேர்ந்தெடுப்பார்கள்.. இந்த ஒருமீன் இருந்தால், பல நன்மையும், அதிர்ஷ்டமும் கொட்டுமாம். வளமை, அதிகாரம், ஆரோக்கியம் அனைத்துமே கிடைக்குமாம்.
அதேபோல தங்க மீன்களும், வாஸ்துவில் பிரதானமாக கருதப்படுகிறது.. இந்த வாஸ்து மீன் அழகு மற்றும் நல்லிணக்கத்தின் வடிவமாகும். எனவே குடும்பத்தின் நல்லிணக்கமும் இதனால் கூடுமாம். இவைகளை தவிர, மலர் கொம்பு , பிளாக்மூர், பட்டாம்பூச்சி கோய், மீன்களும் உண்டு.
லட்சக்கணக்கில் காசு கொடுத்து வாஸ்து மீன்களை வாங்கினாலும், கருப்பு நிற மீன்களும் தொட்டியில் இருக்க வேண்டும்.. கண் திருஷ்டிகள், எதிர்மறை ஆற்றல், மொத்தத்தையும் இழுத்து கொள்ளும் தன்மை இந்த கருப்பு நிற மீனுக்கு உண்டு. கருப்பு மீன் இறந்தாலும், கவலைப்பட தேவையில்லை. உடனடியாக அதை வெளியே எடுத்துவிட்டு, வேறொரு கருப்பு மீனை தொட்டியில் விட வேண்டும்.மீன்கள் வீட்டில் மட்டும் அல்ல பள்ளிகள், அலுவலகங்களிலும் வளர்க்கலாம்.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications