குளியலறை இந்த திசையில் இருக்கா? கடகால் போட்டு எத்தனை மாசத்தில் வீடு கட்டி முடிக்க வேண்டும் தெரியுமா?
சென்னை: வீட்டில் வாஸ்து சாஸ்திரப்படி, என்னென்ன அறைகள் எந்த திசையில் அமைய வேண்டும் தெரியுமா? குறிப்பாக வீட்டு படிக்கெட்டுகள், குளியலறை எந்த திசையில் அமைந்திருக்க வேண்டும் தெரியுமா? வீடு கட்ட துவங்கி கடகால் போட்டுவிட்டால், எத்தனை மாதத்தில் வீட்டை கட்டி முடிக்க வேண்டும்? நிபுணர்கள் சொல்வதென்ன? இவைகளை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சொந்த வீடு என்பது பலருக்குமே கனவாக இருக்கும்.. இதற்காக சிறுக சிறுக சேமித்து, லட்சியத்தை அடைபவர்களே, வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாகவே பூரித்து மகிழ்கிறார்கள்.. ஆனால், வாஸ்து முறைப்படி வீடுகளை கட்டினால், அந்த வீட்டிலுள்ள மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் நீடித்து தழைத்து கிடக்கும் என்பது நம்பிக்கையாகும்.

பாசிட்டிவ் எனர்ஜி
ஒரு வீட்டின் அம்சங்கள் நிறைந்து இருந்தாலே, வீட்டிற்குள் பாசிட்டிவ் ஆற்றல் எளிதாக வந்துவிடும்.. வீட்டில் பூஜையறை, சமையலறை, கழிவறை, படுக்கையறை இந்த 4 அறைகளுமே மிக மிக முக்கியமானவை..
பூஜையறையை எடுத்து கொண்டால், வட கிழக்கு திசையில் இருக்க வேண்டும்.. கடவுள் படங்களை கிழக்கு திசை நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும். படுக்கையறை பெரும்பாலும், தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது நல்லது..
கிழக்கு பகுதி - குளியலறை
கிழக்கு பகுதியில் குளியலறை அமைத்தால் நல்லது.. அதேபோல,வீட்டின் தென் கிழக்கு பகுதியில் சமையலறை வைக்கலாம்.. தென் கிழக்கு பகுதி அக்னி மூலை என்பதால், இது கிச்சனுக்கு ஏற்ற திசையாகும்..சமைப்பவர்கள் கிழக்கு நோக்கி நின்று சமைக்க வேண்டும்.. எக்காரணம் கொண்டும், கழிப்பறைக்கு அருகில் சமையலறை, பூஜையறை அமைந்துவிடக்கூடாது.
கிணறு - திசை
வீட்டிற்கு கிணறு தோண்டுவதாக இருந்தால், வீட்டின் வடக்கு அல்லது வட கிழக்கு பக்கத்தில் தோண்டவேண்டும்.. நடுவீட்டில் கிணறு அமைத்தால், அது குடும்பத்துக்கு மோசமான விளைவுகளை தந்துவிடும்.. எனவே, வடக்கு, வடகிழக்கு திசையில், அதுவும் சூரிய வெளிச்சம் படும்படியான இடத்தில் கிணறு இருப்பது சுபிட்சத்தை தரும்.
வீட்டு படிக்கட்டுகள் மேற்கு அல்லது தெற்கு திசையில் கட்டினால், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் பெருகும்.. ஆனால், வடகிழக்கு அல்லது நடுப்பகுதியில் படிக்கட்டுகள் வரக்கூடாது.
வீட்டை கட்டிப்பார் என்று பழமொழியே உண்டு.. ஆனால், எவ்வளவு காலத்துக்குள் ஒரு வீட்டை கட்டி முடிக்கலாம்?
கடகால் - காலகட்டம்
அளவை பொறுத்து, வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றாலும், வீடு கட்ட துவங்கி கடகால் போட்டுவிட்டால், குறிப்பிட்ட நாட்களுக்குள் வீட்டை கட்டி முடித்துவிட வேண்டும் என்பார்கள்.. அதாவது, கடகால் போட்ட நாளிளிலிருந்து பஞ்சபட்சம் என்று சொல்லப்படும் 75 நாட்கள் முதல் 5 பஞ்சபட்சம் வரை அதாவது 25 பட்சம் கால அளவில், 375 நாட்களுக்குள் வீடு கட்டி முடித்து, கிரகப்பிரவேசமும் செய்துவிட வேண்டுமாம்.
ஒருவேளை வீடு கட்டுவதில் தாமதம் ஏற்பட்டால், மறுபடியும் ஒருமுறை அதற்குரிய பிராயச்சித்த பூஜைகளை செய்துவிட்டுதான், கட்டிட பணிகளை தொடர வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்..
பொதுவாக, கடகால் போட்டு, 3 மாதத்தில் கட்டினால் நல்லது.. மிகப்பெரிய வீடுகளாக இருந்தால், 1 வருடம் எடுத்துக் கொள்ளலாம்.. அதற்கு மேலும் கட்டிடப்பணியை தொடரக்கூடாது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications