திருப்பதி கோவிலில் பக்தர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க புதிய தொழில் நுட்ப வசதி..மார்ச் 1 முதல் அமல்
திருப்பதியில் தனிநபர் அதிக லட்டு டோக்கன்களை பெறுவதைத் தவிர்க்கவும், இலவச தரிசன வளாகத்திலும், பக்தரின் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க வருகிற 1ம்தேதி முதல் சோதனை முறையில் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பொது தரிசனத்தில் பக்தர்கள் 6 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி சென்று வந்தாலே திருப்பம் ஏற்படும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஏராளமான பக்தர்கள் நாள் கணக்கில் கூட காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். சில நிமிடங்கள் மட்டுமே தரிசனம் கிடைத்தாலும் மன திருப்தியுடன் பக்தர்கள் வீடு திரும்புகின்றனர்.
சர்வ தரிசனம், விரைவு தரிசனம், விர்சுவல் தரிசனம், கட்டண சேவைகள் என பலவித சேவைகளில் பக்தர்கள் ஏழுமலையானை கண் குளிர தரிசித்து செல்கின்றனர். இதுநாள் வரை ஆன்லைன், நேரடியாக புக் செய்யும் பக்தர்கள் அடையாள அட்டைகளை காண்பித்து டிக்கெட் புக் செய்து வந்தனர். இனி பக்தரின் முகம் அடையாளம் காணும் தொழில் நுட்ப வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட், லட்டு பிரசாதம், அறை ஒதுக்கீடு, அறைகளை காலி செய்து முன்பணத்தை திரும்ப பெறுதல் போன்றவற்றில் வெளிப்படை தன்மையை அதிகரிக்கப்பட உள்ளது. இதற்காக, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை வருகிற மார்ச் 1ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த உள்ளது.
தனி நபர் அதிக லட்டு டோக்கன்களை பெறுவதை தவிர்க்கவும், இலவச தரிசன கவுன்டரில் அறை ஒதுக்கீடு ஆகியவற்றில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதனால், இடைத்தரகர்கள் முறைகேடு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க முடியும். சோதனை முறையில் கொண்டு வரப்படும் இத்திட்டத்தில் பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் கண்டறியப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications