ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிப்பது ஏன் தெரியுமா? வெற்றி தரும் வெற்றிலையில் இது ரொம்ப முக்கியம்
சென்னை: வெற்றிலை மாலையின் ரகசியம் என்ன தெரியுமா? ஆஞ்சிநேயருக்கு வெற்றி மாலை சாத்தும் வழக்கம் ஏன் ஏற்பட்டது? வெற்றிலை மாலையை சாத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? வெற்றிலை மாலையில் எத்தனை வெற்றிலைகள் வைத்து கட்டப்பட வேண்டும்? மற்ற கடவுள்களைவிட, அனுமனுக்கு மட்டும் வெற்றிலை மாலை சாத்துவது ஏன் தெரியும்? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
வெற்றிலை துர்கா, லட்சுமி, சரஸ்வதி மூன்று தேவிகளின் ரூபமாகவே கருதப்படுகிறது. நுனியில் லட்சுமியும், நடுவில் வாணியும், காம்பில் துர்க்கையும் இடம்பெற்றிருப்பதால்தான் அனைத்து சுபகாரியங்களும் வெற்றிலை இல்லாமல் துவங்குவதில்லை.

அனுமனுக்கு வெற்றிலை மாலைஎனினும் வெற்றிலை மாலையை அனுமனுடன் தொடர்புபடுத்த காரணம் உள்ளது.. இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையை கண்டுபிடிக்க ஆஞ்சநேயர் கிளம்பி சென்றாராம்.. அசோகவனத்தில் பலகட்ட போராட்டம், நீண்ட தேடுதலுக்கு பிறகு சீதையை அசோக வனத்தில் கண்டுபிடித்தார்.
சீதையைக் கண்ட ஆஞ்சநேயர், சோகத்திலிருந்த சீதாபிராட்டியிடம் ராமரின் நாமத்தை பாடியும் ஆடியும் மகிழ்வித்தார்.. ராமர் தந்த மோதிரத்தையு சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர். இதனால் மிகவும் மகிழ்ச்சியுற்ற சீதாதேவி, பணிந்து வணங்கி நிற்கும் ஆஞ்சநேயருக்கு அட்சதை போட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரும்பினார்..
வெற்றிலைக்கொடி
ஆனால் அந்த நேரத்தில் அட்சதை பொருட்கள் தன்னிடம் இல்லாததால், அருகிலிருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து இலைகளை பறித்து, ஆஞ்சநேயர் மீது தூவி ஆசீர்வதித்தாராம்.. பிறகு அந்த வெற்றிலைகளை மாலையாகவும் கட்டி அனுமனுக்கு போட்டு மகிழ்ந்தாராம்.
அப்போது முதல் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுவது வழக்கமானதாக கூறுகிறார்கள். இதன் காரணமாகவே, ஆஞ்சநேயருக்கு ராமநாமத்தை ஜெபித்து வெற்றிலை மாலையை அணிவிக்கும்போது, அளவுகடந்த நன்மை கிடைக்கும் என்பார்கள்.
எந்த வழிபாடாக இருந்தாலும் வெற்றிலை பாக்கு, பூ பழங்கள் என்று வைப்பது வழக்கம்தான். என்றாலும் அனுமனுக்கு படைக்கும் வெற்றிலை கூடுதல் சிறப்பு மிக்கதாகிறது. குறிப்பாக தடைபட்ட காரியங்கள் இனிதே நடக்கும், கடன் தொல்லை நீங்கி, நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கப்பெறும்.
வெற்றிலை மாலை வழிமுறை
ஆனால், ஆஞ்சநேயர் தவிர வேறு எந்த கடவுளுக்கும் வெற்றிலை மாலை சாற்றக்கூடாது என்பார்கள்.. தேவைப்பட்டால் வெற்றிலை-பாக்கு தாம்பூலமாக படைத்து வழிபடலாம். வெற்றிலை அனுமனுக்கு உகந்தது.. காரணம், அதன் பெயரிலேயே வெற்றி இருப்பதால் வெற்றிலை, அனுமானுக்கு சாற்றுவதில்கூட உரிய முறை உள்ளது.. அந்தவகையில், வியாழன், சனி அல்லது அமாவாசை காலை எழுந்து நீராடியபின், 3 வெற்றிலை மத்தியில் ஒரு பாக்கு வைத்து சுருட்டி 108 வெற்றிலையை 54 ஆக வைத்து மாலையாகத் தொகுத்து சாற்ற வேண்டும்.
வெற்றிமாலை தொடுக்கும்போது, நரம்பில்லாத முன்பகுதி வெளியில் தெரியுமாறு மடித்து, வாழை நார் போன்றவற்றை வைத்து, மாலையாக தொடுக்க வேண்டுமாம்..வெற்றிலையை எப்போதுமே தரையில் வைக்கக்கூடாது. இலைகளை வாட விடக்கூடாது.
வெற்றிலை எண்ணிக்கை
வெற்றிலை மாலை சமர்ப்பிக்கும்போது வெற்றிலையின் எண்ணிக்கை 2, 4, 6, 8 என்பதாக இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டுமாம்.. அதேபோல், வெற்றிலையுடன் வைக்கப்படும் பாக்கின் எண்ணிக்கையும் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டுமாம்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், கரூர் மாவட்டம் குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி அதிகமாக நடக்கிறது.. அங்குள்ள வெற்றிலை விவசாயிகள் தங்களுடைய பயிரில் நோய் வராமல் காத்து நன்றாக வெற்றிலையை அறுவடை செய்தால் வெற்றிலை மாலையை காணிக்கையாக செலுத்தி வருவதையும் இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications