பெண்கள் தெரியாமல் செய்யும் தவறு.. மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.. கவனம்!
சென்னை: ஒரு சிலர் வீட்டு விஷேசத்திற்காக வாங்கிய வெற்றிலை, வாழை இலைகளை வாட விடுவார்கள். குப்பையில் போடுவார்கள். அது தவறான செயல் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் தங்களின் வீடுகளில் மறந்து கூட சில தவறுகள் செய்யக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது.
வருமானம் குறைவின்றி வருவதற்கு என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
நிலைவாசற்படியில் யாருமே உட்காரக்கூடாது, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது. அது செல்வ வளத்தை குறைத்து கடனை அதிகரித்து விடும் என சொல்லப்பட்டுள்ளது. அதே போல ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்கவோ வாங்கவோ வேண்டும்.

உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் அதிகரிக்க வேண்டும் என்றால் சில தவறுகளை செய்யக்கூடாது. வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. மகாலட்சுமிக்கு சமமான வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது. இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம். பழைய துணி, உடைந்த பொருட்களை வீட்டிற்குள் குப்பை போல போட்டு வைக்கக்கூடாது.
அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்.
வீட்டில் நறுமணம் வீச வேண்டும். . அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம், நமது வீட்டை நோக்கி வரும். அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும். சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.
பன்னீர், ஜவ்வாது போன்ற பொருட்களை பயன்படுத்தலாம். ஊதுபத்தி ஏற்றி வைக்கலாம். செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது; அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள், துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம். துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது, அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது.
தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறருக்குக் கொடுக்கக் கூடாது.
காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப்படம் இவற்றை பார்க்கவேண்டும். எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும் .
ஒரு சிலர் எதையாவது சொல்லி குறைபட்டுக்கொண்டே இருப்பார். அடுத்தவர்கள் இப்படி இருக்கிறார்களே என்று நினைத்து கண்ணீர் விட்டு அழுவார்கள். பெண்கள் எந்த சூழ்நிலையிலும் எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது. சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.இருகைகளும் கொண்டு தலையை சொரிய கூடாது. எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. நகத்தை கடிக்கவோ, வீட்டிற்குள் கிள்ளியோ போடக்கூடாது. பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது. வளையல் அணியாமல் உணவு பரிமாறக்கூடாது.

தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும். வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும். ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.
பாத்ரூமில் குளிக்கும்போதும், படுக்கை அறையில் தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது. அது தவறான செயல் என சாஸ்திரம் சொல்கிறது. நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.
ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம். அடிக்கடி சுய இன்பத்தில் ஈடுபடுபவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறி விடுவாள் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
தம்பதியரிடையே தாம்பத்ய சுகம் அவசியமானது. அதே நேரத்தில் அளவோடு இருக்க வேண்டும். வித்தியாசமாக செய்கிறேன் என்று இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது சாஸ்திரப்படி அது தவறான செயல். குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கவும் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான் என சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications