Gokulashtami 2025: இன்று கோகுலாஷ்டமி! கிருஷ்ணருக்கு சீடை, முறுக்கு படைக்க உகந்த நேரம் எது?
சென்னை: நாடு முழுவதும் கோகுலாஷ்டமி இன்று கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணருக்கு பிடித்தமான தின்பண்டங்களை வைத்து படைப்பதற்கான உகந்த நேரம் என்ன என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: கிருஷ்ணர் பிறந்த அந்த அற்புதமான நாள் ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் வசு தேவருக்கும் தேவகிக்கும் 8ஆவது குழந்தையாக பிறந்தார். அப்போ ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் வர வேண்டும். இந்த மூன்றும் சேர்ந்து வருவது அபூர்வமான ஒன்று. சில நேரங்களில் ஆவணியில் இல்லாமல் ஆடி மாதத்தில் அஷ்டமி எனும் திதி வந்துவிடும். ஆனால் ரோகிணி நட்சத்திரம் ஆவணி மாதத்தில்தான் வரும். இதுதான் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஒருவரது பிறந்தநாளை நாம் கொண்டாடுவது நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து கொண்டாடப்படக் கூடியது. தெய்வீகமான அந்த அவதார புருஷனாக எல்லோருக்கும் அருள் புரிய பரமாத்வாக அவதாரம் செய்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து ரோகிணி என்று வருகிறதோ அன்று கொண்டாடப்படுவது கிருஷ்ண ஜெயந்தி என்பதாகும்.
அஷ்டமி என்பது கிருஷ்ணரின் திதி, அவருடைய திதியை கணக்கிட்டு அவரது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்றால் கோகுலாஷ்டமி என்று பெயர். தமிழகத்தில் கோயில்களில் அதிகமாக கிருஷ்ண ஜெயந்திதான் கொண்டாடப்படுகிறது.
ஆனால் வட இந்தியாவில் கோகுலாஷ்டமியை விமரிசையாக கொண்டாடுவார்கள். கோகுலாஷ்டமியில் கண்ணனுக்கு விரதமிருந்து கண்ணனுக்கு கால் தடம் போட்டு அவருக்கு பிடித்த பொருட்களை வைத்து எங்க வீட்டுக்கு வா என பலரும் வழிபாடு நடத்துவர். ஒரு சிலர் கிருஷ்ண ஜெயந்தியைத்தான் கொண்டாடுவார்கள். அவரவர் வழக்கப்படி கொண்டாடிக் கொள்ளுங்கள்.
கோகுலாஷ்டமி என்பது ஆகஸ்ட் 16 ஆம் தேதியான இன்று அதிகாலை 1.41 மணி முதல் இரவு 11.13 மணி வரை உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி என்று வருகிறது என்றால் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வருகிறது. கோயில்களில் செப்டம்பர் 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும்.
செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி அஷ்டமி திதியானது காலை 9.16 மணிக்கு தொடங்குகிறது. ரோகிணி நட்சத்திரமானது பிற்பகல் 1.17 மணிக்கு தொடங்குகிறது. ரோகிணி நட்சத்திரம், அஷ்டமி திதியில் வழிபாடு செய்ய நினைத்தால் செப்டம்பர் 14 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11.45 மணி வரை வழிபாடு செய்யலாம்.
செப்டம்பர் 15 ஆம் தேதி பாஞ்சராத்திர ஜெயந்தி என கோயில்களில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 16 ஆம் தேதியும் இந்த கொண்டாட்டம் தொடர்கிறது. கோகுலாஷ்டமி கொண்டாடுவதாக இருந்தால் ஆகஸ்ட் 16ஆம் தேதி அஷ்டமி திதி முழுவதும் இருக்கிறது.
காலை 10.30 மணி முதல் 11.50 மணி வரை வழிபாடு செய்யலாம். மாலை 6 மணிக்கு மேலும் வழிபாடு செய்து கொள்ளலாம். இந்த இரண்டில் எந்த நாளில் வணங்கினாலும் நன்மைதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications