பூஜை அறையில் "இந்த" பொருள் அழுகாமல் இருக்கா? நல்ல அறிகுறி.. அப்ப உங்க வீட்டில் தெய்வ சக்தி இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடுகளில் வறுமையை விரட்டவும், மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் நம்மால் எளிதாக முடியும்.. அதற்கு முன்பு, தீய சக்தி உள்ளதா? தெய்வீக சக்தி வீடுகளில் நிறைந்துள்ளதா? என்பதையும் சில அறிகுறிகளை வைத்து அறிந்து கொள்ளலாம். எப்படி தெரியுமா?

நம்முடைய வீட்டில் தெய்வங்களின் நடமாட்டம் நம்மிடையே இருப்பதை , முன்னோர்கள் கணித்து சொல்வார்கள்.. தெய்வசக்தி உள்ள வீட்டில் பல்லிகள் சத்தம் போடும்.. பல்லிச்சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.. ஒருவேளை தெய்வசக்தி இல்லாவிட்டால், பல்லிகளின் நடமாட்டம் இருந்தாலும்கூட, அவைகள் சத்தம் போடாது..

spirituality good vibrations divine energy

பல்லிகள்: பல்லிகள் இருந்து சத்தம் போட்டால்தான் அது தெய்வ சக்திகளாக கருத முடியும்.. இப்படி சத்தம்போடுவது, தெய்வங்கள் நம்மை ஆசீர்வதிப்பதாக அர்த்தமாம்.. நிலைவாசலில், பூஜையறையில் இப்படியான சத்தம் கேட்கும். இதை வைத்தே கடவுள் நடமாட்டத்தை அறியலாம்.

அதேபோல, வீட்டில் சம்பந்தமேயில்லாமல் பூஜை பொருட்களின் வாசனை கிளம்பும்.. பூக்கள், சந்தனம், ஜவ்வாது, சந்தனம், பன்னீர், குங்குமம், சாம்பிராணி, எலுமிச்சை, வேப்பிலை போன்ற மங்கல பொருட்களின் வாசனை வந்தாலும், வீட்டில் தெய்வ சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. மல்லிப்பூ வாசத்தை வைத்து துர்சக்தி வந்துவிட்டதாக கருதுகிறார்கள்.. மல்லிப்பூ என்றில்லை நறுமணம் எங்கு இருக்கிறதோ, அங்கு தெய்வ சக்தி நடமாடும்.

பூஜையறை: அதேபோல, பூஜையறையில் விளக்கேற்றும்போது சுடரின் நிறத்தை வைத்தும், தெய்வ சக்தியை அறியலாம்.. வெள்ளி நிறத்தில் சுடர் இருந்தாலே தெய்வ சூழல் நிலவுவதாக அர்த்தம். சுடர் வெண்ணிறமாக இல்லாவிட்டாலும், சுடரை சுற்றி வெண்ணிற படலம் இருந்தாலே தெய்வசக்தி உள்ளதாக கருதிக் கொள்ளலாம்.

அதேபோல, பூஜைக்கு பயன்படுத்திய பொருட்கள் அழுகிப்போகாமல் இருந்தால், தெய்வ சக்தி உள்ளதாக பொருள்.. அதுமட்டுமல்ல, சாமி படங்களுக்கு வைக்கும் மஞ்சள்,குங்குமம் ஒரு வாரம் ஆனாலும் பொலிவாக தென்பட்டாலும், அந்த வீட்டில் மகிழ்ச்சியும், வறுமையும் நீங்கி காணப்படும் என்கிறார்கள் பெரியவர்கள்.

வெள்ளிக்கிழமை: ஒருவேளை இந்த அறிகுறிகள் எதுவுமே தென்படாவிட்டால் அல்லது தெய்வசக்தி நடமாட்டம் வீட்டில் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறியவேண்டுமானால், வெள்ளிக்கிழமையன்று, அருகில் இருக்கக்கூடிய அம்மன் கோயிலுக்கு சென்று ஒரு எலுமிச்சம் பழத்தை அம்மனின் பாதத்தில் வைத்து பிறகு, இந்த எலுமிச்சம் பழத்தை வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

எலுமிச்சம்பழம் காய்ந்து விட்டால் வீட்டில் தெய்வ நடமாட்டம் இருக்கிறது என்று அர்த்தம். அழுகி விட்டால் எதிர்மறை ஆற்றல் இருப்பதாக உணர்ந்து கொள்ளலாம்.

அதேபோல பல்லிகள் சத்தமிடுவது மட்டுமல்ல, அது எந்த திசையில் சத்தம் எழுப்புகிறது என்பதும் நமக்கு முக்கியம்.. உதாரணத்துக்கு நாம் ஒரு விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருக்குமபோது பல்லிகள் சத்தம்எழுப்பினால், அவை எந்த திசையில் இருந்து சத்தம் எழுப்புகிறது என்பதை கவனித்து பார்க்க வேண்டும்.. அந்த திசையை வைத்தே அந்த விஷயம் நடக்குமா? நடக்காதா? என்பதை உணர்த்தும் வகையில் இருக்கும். அதுபோல வெளியில் செல்லும்பொழுது பல்லி சத்தம் எழுப்பினால் நாம் செல்லும் காரியம் நல்லபடியாக நடக்கும் என்று அர்த்தமாகும். சில சமயம் இரவு நேரங்களில் கூட பல்லியின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+