இந்த 3 பறவைகளின் படங்களை வீட்டில் மாட்டி வையுங்க.. இதுதான் சரியான திசை.. நடக்கும் அதிசயத்தை பாருங்க
சென்னை: பறவைகளை வீடுகளில் பலரும் வளர்த்து வருகிறார்கள்.. அந்தவகையில், வீடுகளில் பறவைகளின் படங்களையும் வைக்கலாம்.. எந்தெந்த பறவைகளின் போட்டோக்களை, எந்தெந்த திசையில் மாட்டி வைக்கலாம் தெரியுமா?
வழக்கமாக வீடுகளுக்குள் பறவைகள் வந்து செல்வது குறித்து பல்வேறு ஆன்மீக தகவல்கள் குறித்து வைக்கப்பட்டிருக்கின்றன.. நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? எந்தெந்த பறவைகள் வீடுகளுக்குள் வரலாம்? என்பது குறித்து வாஸ்து சாஸ்திரத்திலும் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

பறவைகள்: அந்தவகையில், வீடுகளிலும், வீடுகளுக்கு பக்கத்திலும் தேன்கூடு இருக்க கூடாது.. இதனால், கடன் தொல்லைகளும், வறுமையும் சேர்ந்து கொள்ளுமாம்.. ஆனால், வீட்டில் குளவி கூடு கட்டுவது மிகவும் நல்லது என்கிறார்கள்..
அமாவாசை என்றில்லாமல் எல்லா நாளுமே காகத்திற்கு சாப்பாடு வைத்தால், நாம் அறியாமல் செய்த பாவங்கள்கூட நம்மை விட்டு நீங்கி விடுமாம். புறாக்கள் வீடுகளுக்குள் வந்தால், வீட்டிலுள்ள கஷ்டங்கள் நீங்கிவிடும்.
வறுமை நீங்கும்: அதேபோல, மஹாலக்ஷ்மியின் வாகனமான ஆந்தைகள் வீட்டிற்குள் வந்தால், வறுமை நீங்கி, செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.. மகாவிஷ்ணுவின் வாகனமான கழுகுகள், வீட்டிற்கு வந்தால் மிகவும் அதிர்ஷ்டமாம்.. மயில்கள் வீட்டுக்குள் வருவதும் நல்லதே. அணில், சிட்டுக்குருவிகள் போன்ற பறவைகள் வீட்டிற்குள் வந்தாலும் தெய்வ சக்தி அதிகரிக்கும் என்கிறார்கள்.
அதேபோல, வீட்டை அலங்கரிக்க வைக்கப்படும் போட்டோக்களிலும் பறவைகள் இருப்பது நன்மை தரும் என்கிறார்கள்.. எந்தெந்த பறவைகளின் போட்டோக்களை வீடுகளில் மாட்டி வைத்தால் நல்லது என்பது குறித்தும் வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளது.
மயில்கள்: இதில் முதன்மையானதாக மயிலிறகு உள்ளது.. முருகனின் வாகனமாக மயில் கருதப்படுகின்றன.. மனிதர்கள் நடமாட்டம் இருப்பது தெரிந்தாலே, மயில்கள் அங்கிருந்து உடனடியாக பறந்து சென்றுவிடுமாம்.. அப்படிப்பட்ட மயில், ஒருவரது வீட்டுக்குள் வருகிறது என்பது மிகவும் அபூர்வமாகவும், நன்மைக்குரியதாகவும் பார்க்கப்படுகிறது. மயில்கள் வீடுகளுக்குள் வராத பட்சத்தில், மயிலிறகு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
அதேபோல, நெற்றிகிருஷ்ணரின் மயில் தோகையின் போட்டோக்களை வீட்டில் வைப்பது சிறந்தது என்கிறார்கள். எனவே மயிலிறகுகளை வீட்டின் தெற்கு திசையில் வைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
கிளிகள்: கிளி படங்களையும் வீட்டிற்குள் மாட்டி வைக்கலாம். வீடுகளில் கிளி வளர்ப்பது ராகு, கேது மற்றும் சனியின் தாக்கங்களை குறைக்கும் என்றும், குடும்ப உறுப்பினர்களின் நோய்கள் நீங்கும், குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும், தம்பதியினரின் உறவு மேம்படும் என்றும் நம்பப்படுகிறது. எனவே, பச்சைக் கிளியின் போட்டோக்களையும் வீட்டில் வைத்திருக்கலாம்.
வடக்கு திசை புதனின் பிரியமான திசையாக கருதப்படுவதால், கிளிகளின் போட்டோக்களை, வடக்கு திசையில் வைக்கலாம். இதனால், குழந்தைகளின் நினைவாற்றலும் அதிகரிக்கும் , நிதி சிக்கல்களிலிருந்தும் விடுபடலாம் என்கிறார்கள்.
சிட்டுக்குருவிகள்: சிட்டுக்குருவிகளின் படத்தை வீட்டில் வைப்பதும் நல்ல பலனை தரக்கூடியதே.. இதனால், வாஸ்து தோஷங்கள் எளிதாக நீங்குவதுடன், எதிர்மறையையும் வீட்டிலிருந்து அகற்றுகிறது. இந்த சிட்டுக்குருவி போட்டோக்களை வீட்டின் கிழக்கு திசையில் வைக்கலாம்.
அன்னப்பறவை: வாஸ்து சாஸ்திரத்தில் அன்னப்பறவை மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த அன்னப்பறவையின் போட்டோவை வீட்டில் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.. எனவே, இந்த அன்னப்பறவையின் போட்டோவை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, பண வரவில் உள்ள தடைகளையும் நீக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications