சொத்துக்கள் கோடி கோடியா சேரணுமா? பல சொத்தை மீட்டுதரும் கொம்பு தேங்காய்.. நெல்லிக்காய் சாதம் பரிகாரம்
சென்னை: சொத்துக்கள் வாங்க வேண்டுமா? அல்லது சொத்துக்களில் நிலவி கொண்டிருக்கும் சிக்கல்கள் தீர வேண்டுமா? அனைத்துக்குமே நமக்கு பரிகாரங்கள் பேருதவியாக இருந்து வருகின்றன.. அந்தவகையில், ஒருசில பரிகாரங்களை இங்கே பார்க்கலாம்.
ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு என்பது கனவாகவே இருந்து வருகிறது.. இதில் பலரது கனவுகள் நிறைவேறுகின்றன.. பலரது கனவுகள், வெறும் கனவுகளாகவே அமைந்துவிடுகின்றன..

முருகப்பெருமானை வணங்க வேண்டும்
ஆனால், பொதுவாக சொல்வதென்றால், நான்காம் வீட்டு அதிபதி அல்லது செவ்வாய் மிகவும் பலம் வாய்ந்து இருந்தால், அவர்களுக்கு சொந்த வீடு மனை உண்டு என்பார்கள்.. நான்காம் வீட்டு அதிபதியும் பலமிழந்து அல்லது செவ்வாயும் பலமிழந்து ஒருவருக்கு வீடு அமையுமானால் அவர் பெயரில் இருக்கக்கூடிய வீடு அல்லது மனையில் அவரால் வசிக்கக்கூட முடியாத சூழல் ஏற்படும்.. அல்லது அந்த வீடு நீண்ட நாளைக்கு வராது என்பார்கள்.
எனவே, சொந்த வீடு நிரந்தரமாக அமைய வேண்டுமானாலும் பரிகாரம் தேவையாக இருக்கிறது.. இதற்கு முருகப்பெருமானை தொடர்ந்து வணங்கிவரவேண்டும். நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்கு "பூமிகாரகன்" என்று பெயர் உண்டு.. செவ்வாயினுடைய அதிதேவதை முருகன் என்பதால், சொந்த வீடு மனை வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், முருகப்பெருமானை வணங்கி வரலாம்.
செவ்வாய்க்கிழமை வேண்டுதல்
இதற்கு செவ்வாய்க்கிழமைதோறும், முருகப்பெருமானை செவ்வரளி மாலை சார்த்தி எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, அதனை அக்கம்பக்கத்தினருக்கு வழங்கி வரவேண்டும். இதனால், விரைவில் வீடு, மனை யோகம் கிட்டும். வீடு மட்டுமே என்றில்லை, சொத்துக்கள் சேர வேண்டும் என்றாலும், முருகனை வழிபட்டு வரவேண்டும்.. இதற்கு கொம்பு தேங்காய் பரிகாரம் ஒன்றையும் செய்து வர வேண்டும்.
கொம்பு தேங்காயை ஒரு சிவப்பு துணியில் வைத்து, அதில் கைப்பிடி பச்சரிசியை போட்டு, முடிச்சு போல கட்டி வாசலில் கட்டி தொங்கவிடவேண்டும். வீட்டில் தினமும் விளக்கேற்றும்போது, இந்த தேங்காய் முடிச்சுக்கு ஒரு ஊதுவத்தி காண்பிக்க வேண்டும்... இந்த தேங்காயை வருடம் ஒருமுறை மாற்றிக்கொண்டு வரவேண்டும்.
கொம்பு தேங்காய் பரிகாரம்
இறுதியாக, இந்த கொம்பு தேங்காயை, நிறைந்த வளர்பிறை, வெள்ளிக்கிழமைகளில் வீட்டிற்குள் கொண்டு வந்து விட்டால், உங்கள் குடும்பத்துக்கு தேவையான அத்தனை சொத்து சுகமும் சேர துவங்கிவிடும் என்பது நம்பிக்கையாகும்
அதேபோல, சொத்துக்களில் பிரச்சனை உள்ளவர்களுக்கும் பரிகாரம் உள்ளது.. எனவே, ஜாதகத்தில் 4ம் இடம் சரியாக அமையாவிட்டால் சொத்து பிரச்சனை வரலாம்.. அல்லது நான்கில் சனி மற்றும் செவ்வாய் இருந்தாலும் சொத்து ரீதியான பிரச்சினைகள் வரலாம்.. இதற்கு ஸ்ரீ துர்க்கை அம்மனை வணங்கி வரவேண்டும். காரணம், சொத்து பிரச்சனைகளுக்கு நல்ல பலன்களை வழங்கக்கூடியவர் துர்க்கை அம்மன்..
நெல்லிக்காய் சாதம் பெஸ்ட்
எனவே, துர்க்கையை வழிபட்டு வந்தால், பகைவர்களும் பஸ்பமாகிவிடுவார்களாம்.. அதேபோல, சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அத்துடன் காகத்திற்கு எள்ளும், அன்னமும் கலந்து உணவை வைத்து வருவதால் சொத்து பிரச்சனைகள் விலக தொடங்கும் என்பார்கள்.
அதேபோல, வாரம் ஒரு முறை செவ்வாய், வெள்ளிகளில் நெல்லிக்காயில் செய்த நெல்லிக்காய் சாதம் பிரசாதமாக தயாரித்து கோவிலுக்கு சென்று, அங்குள்ளவர்களும், ஏழை எளியவர்களுக்கும் வழங்கலாம். இதனால், இழந்த சொத்தை மீண்டும் பெறலாம்.












Click it and Unblock the Notifications