தென்காசியில் கோலாகலம்.. 19 வருடத்துக்கு பின் பக்தர்கள் ஹேப்பி.. காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
தென்காசி: தென்காசி கோயிலுக்கு, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிவனடியார்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்துவிட்டார்கள்.. கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு பிறகு, தென்காசி மாவட்டமே இன்று பூரித்து போயிருக்கிறது.. இன்று நடந்த கோலாகலமான விசேஷம்தான் இணையத்தில் வீடியோவாக வைரலாகி கொண்டிருக்கிறது..
வடக்கே காசி தெற்கே தென்காசி என்று அழைக்கப்படும் சிவதலங்களில் ஒன்றாக உள்ள தென்காசி மாவட்ட நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது தென்காசியில் காசி விஸ்வநாதர் உடனுறை உலக அம்மன் திருக்கோயில்.. பிரசித்தி பெற்றதும் பழமை வாய்ந்த இந்த கோயிலானது, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கோயில் பாண்டிய மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, குலசேகர பாண்டியனால் திருப்பணிகள் முடித்து வைக்கப்பட்டது. இந்த கோயிலின் ராஜகோபுரம் மட்டும் 175 அடி உயரத்தில், 9 நிலைகளை கொண்டதாக அமைய பெற்றதாம்.. மாசி மகம், ஐப்பசி உத்திரம் போன்ற முக்கிய நாட்கள், இந்த கோயிலின் சிறப்பு விழா நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சர்ப்ரைஸ் அறிவிப்பு
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிேஷகத்திற்கு ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் 15 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், கூடுதலாக இதனிடையே, ரூ.1.60 கோடி செலவில் ராஜகோபுர பணியும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கடந்த 2024-ல் சட்டசபை கூட்டத்தின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.. அமைச்சரின் இந்த அறிவிப்பானது, பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருந்தது..
காரணம், 2006ஆம் ஆண்டு பிறகு காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கோயிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையாததால் கும்பாபிஷேகம் நடத்த தடை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
17 வருடங்களுக்கு பிறகு மகிழ்ச்சி
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அறிவித்த தேதியில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது. எனவே, 19 வருடங்களுக்கு பிறகு தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பதை பக்தர்கள், பொதுமக்கள் வரவேற்றனர். மகா மண்டபம், பிரகார மண்டபம், கொடிமரம், மாடமதில், ராஜகோபுரம், விமான கோபுரங்கள், சுதை வேலை, பஞ்சவர்ணம் பூசுதல், ஸ்தூபி ஸ்தாபனம், தீர்த்தக்குளம் புனரமைப்பு பணிகள் ஜரூராக நடந்தன.
அதன்படி, கும்பாபிஷேக வைபவம் கடந்த 3ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் சுவாமிஅம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமா்சையாக நடைபெற்று வந்தன.. இந்நிலையில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்துள்ளது..
திரண்டு வந்த பக்தர்கள்
இன்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 5 மணிக்கு விநாயகர், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 7 மணிக்கு மகா பூர்ணாகுதி, திரவ்யாகுதி நடைபெற்றது. 9 மணிக்கு மேல் உலகம்மாள் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இன்று விசேஷ நாள் என்பதால், புறநகர் பகுதி வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. தென்காசி நகரப்பகுதியை சுற்றி தற்காலிகமாக 11 இடங்களில் வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications