தங்கம் வாங்கறீங்களா? கற்றாழை செடியை வீட்டில் வைத்திருக்கிறீங்களா? செல்வம் பெருக இந்த டிப்ஸ் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கற்றாழை செடிகளை வீடுகளில் வளர்த்தால் செல்வம் பெருகும் என்பார்கள்.. கற்றாழை செடியை வீடுகளில் வளர்க்க காரணம் என்ன தெரியுமா? இதற்கும் அறிவியல் காரணம் உண்டு, ஆன்மீக காரணமும் உண்டு.

கற்றாழையை பொறுத்தவரை, பெண்களுக்கான மூலிகை என்று சொல்வார்கள்.. காரணம், கர்ப்பப்பையில் உண்டாகும் நோய்களை நீக்குவதில் கற்றாழைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது..

Health Benefits of Aloe vera and Do you know the Amazing Vastu tips of aloe vera plant in home

இந்த கற்றாழையில் நிறைய சித்த மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.. குறிப்பாக, மாதவிடாய் பிரச்சனைகள் அத்தனையையும் சரிசெய்வதற்கு இந்த கற்றாழையே மிக முக்கியமான மூலப்பொருட்களாகும். இந்த கற்றாழையில் சாறு எடுத்து, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இளம்பெண்களுக்கு தருவார்கள். இதனால், மாதவிடாய் கோளாறுகள் மட்டுமல்லாமல், மார்பகப் புற்றுநோய் வராமலும் தடுக்கப்படுமாம்.

மூலப்பொருட்கள்: அத்துடன், சரும பாதுகாப்புக்கு இந்த கற்றாழை உதவுவதால்தான், ஃபேஸ் கிரீம்கள், சோப்புகள், ஷாம்ப்புகளில், கற்றாழையை மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறார்கள். வைட்டமின் B, C சத்துக்கள் நிறைந்துள்ளன.. எனவே, தினமும், வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸை குடிப்பதால், உடல் எடை குறைகிறது...

பெண்களுக்கு அதிகமாகவே இந்த கற்றாழை பயன்படுவதால்தான், "கன்னி", "குமரி" என்ற பெயர்களில் இந்த கற்றாழையை அழைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த கற்றாழைக்கு தீய சக்திகளை தடுக்கும் குணமும் உண்டு. அதனால்ன், வீடுகளின் முன்பு கற்றாழைகள் தொங்கவிடப்படுகின்றன.

ஆக்சிஜன்: இதற்கு காரணம், ஆக்ஸிஜனை அதிகளவில் பரப்பும் சக்தி, இந்த கற்றாழைக்கு உள்ளது.. மண் எதுவுமே இல்லாமலே, கற்றாழைகள் செழிப்புடன் எப்போதும் காணப்பட காரணமும் இதுதான். குறிப்பாக, காற்றிலிருக்கும் பிராணவாயுவை ஈர்த்துக்கொள்வதால்தான், இந்த செழுமை நீடிக்கிறது.. அறிவியல் காரணங்கள் இவ்வாறு இருக்க, வீடுகளில் கற்றாழை வளர்ப்பதில், வாஸ்துப்படியும் சில காரணம் சொல்லப்படுகிறது.

ஆன்மீக காரணங்களை எடுத்துக்கொண்டால், கற்றாழை இருக்குமிடத்தில் லட்சுமிதேவி வசிப்பதாக சொல்கிறார்கள்.. எனவே, கற்றாழை மங்களகரமான செடியாக கருதப்படுவதால்தான் வீடுகளில் வளர்க்கப்படுகிறது.. குறிப்பாக, மேற்கு திசையே இதற்கு சிறந்தது என்கிறார்கள்.. இதனால், குடும்பத்திலிருக்கும் நிதி சுமைகள் நீங்குவதுடன், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் வரக்கூடும்.. வீட்டிலும் நேர்மறை ஆற்றல் அதிகரித்து காணப்படும்..

கற்றாழைகள்: அதேபோல, வீடுகளில் கற்றாழைகளை வளர்த்தால், காதல் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் தீருகிறதாம்.. அன்பும் பெருகுமாம்.. எனவே, வாஸ்து படி, கற்றாழை செடியை, வடமேற்கு திசையில் நடக்கூடாது.. இதனால், மோசமான பலன்கள் கிடைத்துவிடும். வீட்டின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் கற்றாழை செடியை நடலாம்.

வீடுகளில் தங்க நகைகளை வைப்பதில்கூட இப்படி திசைகள் உண்டு.. குறிப்பாக வாஸ்துப்படி, தங்கத்தை வீட்டின் தென்மேற்கு பகுதியில் வைக்க வேண்டுமாம்.. இதனால், வீட்டில் தங்கம் அதிகரிக்க செய்யும் என்கிறார்கள்.

தங்க நகைகள்: எக்காரணம் கொண்டும் வீட்டின் வடமேற்கு திசையில் தங்கம் வைப்பதை தவிர்க்க வேண்டுமாம். அதேபோல நகைகள் இருக்கும் லாக்கர் வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.. பொதுவாகவே, லாக்கர் இருக்கும் அறையின் சுவரின் நிறமும் மஞ்சள் கலரில் இருக்க வேண்டுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+