Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்களே தலையில் பேன் பார்க்கும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குறிப்பிட்ட வகுப்பினர், வாய், உதடு படாமல் சூடான டீ, காபி, பால் ஆகியவற்றை குடிப்பது ஏன் என்பது தெரியுமா? தலையில் பேன் பார்க்கும் போது இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க. வேறு என்னவெல்லாம் செய்யலாம் , செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: லட்சுமியும் நுனிப்பகுதியும்: எதில் ஒன்றுமே நுனி பகுதி லட்சுமி ஸ்தானமாகும். கை. கால் நுனி விரல் ஆனாலும். இலைகளின் நுனி ஆனாலும் சரி. பழங்களின் நுனி ஆனாலும் சரி. நாக்கின் நுனியும் கூட லட்சுமி ஸ்தானமாகும்.

spirtuality god

நகங்களை ஒட்ட ஒட்ட வெட்டக் கூடாது . குறிப்பாக விரத நாட்கள். வெள்ளி, செவ்வாய், சனி, பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களிலும் சந்தி வேளையான காலை, மாலை வேளையிலும் ராகு, எமகண்ட வேளையிலும் உச்சிகால வேளையிலும் நகம் வெட்டுவதோ, பற்களால் கடிப்பதோ கூடாது.

எப்போது நகம் வெட்டினாலும் மிக சிறிதளவாவது நகம் விட்டு மீதத்தை வேண்டுமானால் வெட்டலாம், வெட்டிய நகத்தை புதைத்தால் நல்லது. நெருப்பில் எக்காரணம் கொண்டும் போடக் கூடாது வெட்டிய நகம் பிணத்திற்கும், ரத்தத்திற்கும் சமம். எனவே நகம் வெட்டிய பின்பு அது தீட்டு பொருளாகும். எனவே நகத்தை வெட்டிய உடன் அப்புறப்படுத்துவதே நல்லது. இல்லையேல் தரித்திரம் குடிகொள்ளும்.

அடுத்து நுனி நாக்கு லட்சுமி குடிகொண்ட இடமாகும். மகா சரஸ்வதியும். மகா லட்சுமியும் ஆட்சி செய்யும் நாக்கில் சுப வார்த்தைகள் எதை பேசினாலும் அதன் பலனை நமக்கும் கொடுப்பார்கள். நாக்கில் மிக சூடான பொருட்கள் சுவைக்கும் போது நுனி நாக்கு சுட்டுவிட்டால் செல்வ செழிப்பு குறைய ஆரம்பிக்கம், அதனால் டீ, காபி, பால் போன்ற சூடான பானங்களை மித சூட்டோடு நுனி நாக்கில் படாமல் குடிப்பது நலம். இன்றைக்கும் சில வகுப்பினர் வாய் உதடு படாமலும். பல் படாமலும் அண்ணாந்து பானகங்களை குடிப்பார்கள்.

இது ஆச்சாரத்திற்கு என அனைவரும் கருதுகின்றனர், விஷயம் அறிந்தவருக்கு இதன் ரகசியம் தெரியும். நுனி பல்லும். நுனி நாக்கும் சூடு பட்டால் அதன் சுய தன்மையை இழந்து துடிக்கும், பின்பு அந்த பாகத்திற்குரிய தேவதை பாதிக்கப்பட்டு சாபம் பெறுவோம். எனவே சூடான உணவுகளை நாக்கு சுட்டுபோகும்படி சுவைக்க வேண்டாம். ஆற வைத்தே சாப்பிடவும். அதுபோல் காய், கிழங்கு, பழம் வகைகள் வெட்டினாலும் முதலில் அடி பகுதியை வெட்டிய பின்னரே மற்ற பகுதியை நறுக்கவும்.

(அடி பகுதி எதிலும் சக்தி பகுதியாகும், அங்கு பலி நிகழ்த்தும் போது (அறுத்தல்) பாதகமில்லை, முனை பகுதியே வளர்ந்து வரும் பகுதி அதன் முனையை கிள்ளினால் வளர்ச்சி தடைபடுவது ஒருபுறம் இருந்தாலும் அதை கிள்ளி நம்முடைய வாழ்க்கையும் தடைபடும் என்பதை அறிக, வாழைப் பழம் கைகளால் பிரித்து சாப்பிட்டாலும் அதன் தோல் உறிக்கும் போது முதலில் அடி பகுதியான காம்பு பகுதியையே முதலில் உறிக்கவும்.

நுனி பகுதி நம் தலை அந்த தலையிலும் லட்சுமி வாசம் செய்வதால் தான் தலையில் யாரும் கொட்டக்கூடாது என்பார்கள். (ஒருவருடைய பாத அணி நம் தலையில் பட்டால் நாம் செல்வந்தர் ஆவோம். அந்த ஒருவர் யார் எனில் ஸ்ரீமன் நாராயணன் ஆவார். அவர் பாதம் பட்டால் லட்சுமி பூரிப்படைவாள், இன்றும் வைணவ ஆலயங்களில் பாத ஆசீர்வாதம் சிரசிற்கு செய்வார்கள். இதில் பல தகவல் இருந்தாலும் இதுவும் அதில் அடங்கிய ரகசியமாகும்)

தலை மேலேயே அடிப்பேன் என்ற வார்த்தையை கூட பயன்படுத்த வேண்டாம் . முடிந்தளவு மனித நிழலில் தலை பாகத்தையும் மிதிக்க வேண்டாம், நிச்சயம் வறுமை வாட்டும். எனவே சுபிட்சமாக வாழ லட்சுமி ஸ்தானத்தை அவமதிக்காதீர்கள். இன்னொரு தகவலையும் அறியுங்கள், தலையில் பேன் இருந்தால் அதை பார்க்கும் போது தலையிலேயே வைத்து குத்தக்கூடாது (சிரசு லட்சுமிக்குரியதால் அது புனிதமான பகுதி அதனால்தான் கங்கை, சூரியன், சிவஸ்தானம் என்றெல்லாம் வர்ணிப்பார்கள்)
பேனை சிரசில் இருந்து நீக்கி பின்பு வெளியில் வைத்து குத்துவார்கள்.

தலையில் சீப்புபடுவதால் சீப்பில் பேன் குத்த கூடாது கவனம். பாவம் தாக்கவும். நீக்கவும். முதலில் தெய்வங்களால் பயன்படுத்தக் கூடியது சிரசுதான், அதனால் தான் 7 1/2 சனியே வந்தாலும் முதலில் சிரசையே பீடிக்கும் . பாவம் போக்க கங்கைக்கு போனாலும் தலையுடன் தான் பாவம் தீர குளிக்க வேண்டும், ஆக சிரசு மிக முக்கியம், சுத்த லட்சுமி ஸ்தானமாகும்.

தலையை அடிக்கடி சொறிவது. தலையில் கை வைத்து உறங்குவது. முறையான தூக்கம் கூட இல்லாமல் போவது, தேவையில்லா கற்பனை. தேவையில்லா கவலை. இவைகள் யாவும் தகாத செயல்களாகும், இதனால் நஷ்டம் நமக்கும் நம் குடும்பத்திற்கும் தான், வறுமையும் வற்றி வெறுப்பு பற்றிக் கொள்ளும், எனவே இதையெல்லாம் முறையாய் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

லட்சுமி கடாட்சத்தோடு வாழுங்கள். இதில் உள்ள முறைகளை ஒரு மாதம் மட்டுமாவது கடைபிடித்து பாருங்கள், நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் நிச்சயம் உயர்வீர்கள், எதை நாம் அடைய விரும்புகிறோமோ அதை பற்றிய சிந்தனை நம் நினைவில் இருந்து நீங்கள் பார்த்துக் கொண்டாலே போதும், அதன் அருகில் நிச்சயம் செல்வோம், ஒரே செயலில் கவனம் செலுத்துவதும் தியானம் தான், அது மந்திரத்தை விட சக்தி வாய்ந்ததாகும்.

ஒரே லட்சியமாக செல்வ சந்தோஷத்தோடு நாங்கள் வாழ வேண்டும், எங்களால் யாருக்கும் துன்பம் ஏற்படகூடாது என நினைத்து இதில் உள்ள முறைகளை கடைபிடியுங்கள், உங்கள் வாழ்க்கை கோபுரமாகும், சந்தோஷம். சுபிட்சம். கடாட்சம். ஐஸ்வர்யம் கொண்டு வாழ்வீர்கள், இறுதி வரை வழிமுறைகளை பின்பற்றவும், கிடைத்தவுடன் விட்டு விடக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+