"திருக்கோவில் செயலி" வீடு தேடி வரும் ஆலய பிரசாதங்கள்..அறநிலையத்துறையின் அஞ்சல் வழி சேவை திட்டம்
சென்னை: பிரபலமான கோவில்களின் பிரசாதங்களை வெளியூர்களில் இருக்கும் பக்தர்கள் தபால் மூலம் பெறும் வகையில் புதிய திட்டத்தை இந்து சமய அறநிலையத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் எங்கிருந்தும் கோவில் பிரசாதங்களை பெற்று கொள்ளலாம். திருச்செந்தூர் கோவில் பிரசாதத்தை காஸ்மீரில் இருப்பவர்கள் இனி வாங்க முடியும்.இன்னும் மூன்று மாதத்தில் உலகில் எந்த நாட்டில் இருந்தும் திருக்கோவில் பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம். கோவில் விழாக்கள் தகவல்களை அறிந்து கொள்ள திருக்கோவில் செயலியும் தொடங்கப்பட்டுள்ளது.
ஆலய தரிசனம்: சாமி தரிசனத்திற்காக ஆன்மீக சுற்றுலா செல்வது பலரது வழக்கம். ஆலய தரிசனத்திற்காகவும் ஆன்மீக பயணங்களுக்காகவும் ஏராளமானோர் பணத்தை உண்டியலில் சேர்த்து வைத்து செலவு செய்கின்றனர். சில காரணங்களால் ஆன்மீக பயணம் தடைபடுவதுண்டு. கொரோனா பரவல் காலத்தில் பலரால் கோவில்களுக்கு செல்ல முடியாமல் போனது. பல விழக்களை ஆன்லைன் மூலம் மட்டுமே தரிசனம் செய்தனர்.
ஆன்மீக பயணம்: இந்த நிலையில் கோவில்களுக்கு வர முடியாமல் போகும் பக்தர்களுக்காக தபால் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருக்கோயில் பிரசாதம் பக்தர்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் தபால் துறையுடன் இணைந்து புதிய திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை தொடங்கி உள்ளது. இதன்மூலம் பக்தர்கள் பிறந்தநாள், திருமண நாள் அல்லது விரும்பும் நாட்களில் தங்களுக்கும், விரும்பும் நபர்களின் பெயரிலும் திருக்கோயில் பிரசாதத்தை அஞ்சல் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

அமைச்சர் சேகர்பாபு: முதற்கட்டமாக 48 முதல் நிலை திருக்கோவில்களில் பிரசாதங்கள் தபால் துறை மூலம் வழங்கப்பட உள்ளது. மேலும் திருக்கோயில் தகவல்களை பக்தர்கள் எளிதாக அறியும் வகையில் திருக்கோயில் செயலி தொடங்கப்பட உள்ளது. இந்த இரண்டு திட்டத்தையும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
48 கோவில்கள்: மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட 48 முதுநிலை திருக்கோயில்களில் பக்தர்களின் விருப்பப்படி அர்ச்சனை செய்து, பிரசாதங்களை அவர்களின் இல்லங்களுக்கே அனுப்பி வைத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை, அஞ்சல் துறையுடன் இணைந்து புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
திருக்கோயில் செயலி திட்டம் : தமிழ்நாட்டின் திருக்கோயில்கள் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு போன்ற பன்முக தகவல்களின் பெட்டகங்களாக திகழ்கின்றன. அத்தகைய திருக்கோயில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை நவீன தொழில்நுட்பத்துடன் அனைவரும் அறிந்து பயன்படுத்தி கொள்ளும் வகையில் "திருக்கோயில்" என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தல புராணம்: இதன்மூலம் திருக்கோயில்கள் குறித்த தலபுராணம், தலவரலாறு, நடை திறந்திருக்கும் நேரம். பூஜைகள், பிரார்த்தனைகள், அதற்கான கட்டண விவரங்கள், முக்கிய திருவிழாக்கள், அனைத்து கோணங்களிலும் திருக்கோயில்களை கண்டுகளிக்கும் மெய்நிகர் காணொலி, திருவிழாக்களின் நேரலை, திருக்கோயில்களை சென்றடைவதற்கான கூகுள் வழிகாட்டி, வழித்தடம், பக்தர்களுக்கான தங்கும் வசதி, சக்கர நாற்காலி வசதி, கழிப்பறை, குளியல் அறை, பொருட்கள் வைப்பறை போன்ற பல்வேறு வசதிகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும்.

நன்கொடை: அதேபோல, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் திருக்கோயிலுக்கு செல்லுகையில் மின்ஊர்தி, சாய் தளத்தில் நாற்காலி வைத்து அழைத்து செல்வதற்கு தரப்பட்டுள்ள தொலைபேசி எண் போன்ற கட்டணமற்ற சேவைகளையும் இந்த செயலின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
அன்னதானம் திருப்பணி உள்ளிட்ட எவ்வகை நன்கொடைக்கும் இந்த செயலி மூலம் கொடை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் வழி பிரசாத சேவை திட்டம்: இந்தச் செயலியைத் தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, 'அஞ்சல் வழி பிரசாத சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எங்கிருந்தும் கோவில் பிரசாதங்களை பெற்று கொள்ளலாம். இன்னும் மூன்று மாதத்தில் உலகில் எந்த நாட்டில் இருந்தும் திருக்கோவில் பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம். திருச்செந்தூர் கோவில் பிரசாதத்தை காஸ்மீரில் இருப்பவர்கள் இனி வாங்க முடியும்.
கோவில் பிரசாதம்: எந்தெந்த ஊர்களில் எந்தெந்த கோவிலில் எந்தெந்த உணவு சிறப்போ அதுவே பிரசாதமாக அனுப்பி வைக்கப்படும். கூடுதலாக பிரசாத கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. கூடுதலாக கோவில்களில் தரிசன கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் முறைகேடு குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்போம்.
எளிமையான தரிசனம்: உச்சநீதிமன்றமே அறங்காவலர் நியமனம் குறித்த இந்து சமய அறநிலையத்துறையில் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் முதல் கட்டமாக 48 முதல் நிலை கோயில்களில் நடைபாதைகளும் வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும். அடுத்த மூன்று மாதத்தில் 48 முதுநிலை கோவில்களை மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் மாற்ற உள்ளோம்' என்று தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications