சாம்பல் புதனுடன் தொடங்கிய கிறிஸ்தவர்களின் புனித தவக்காலம்...மார்ச் 29ல் புனித வெள்ளி, 31ல் ஈஸ்டர்
சென்னை: இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாட, தங்களைத் தயாராக்கும் வகையில் சாம்பல் புதனுடன் இன்றைய தினம் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியுள்ளது. மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் மார்ச் 31ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
கிறிஸ்தவர்கள் கடவுளாக வழிபடும் ஏசு கிறிஸ்து மனிதர்களை பாவங்களில் இருந்து மீட்பதற்காக பாடுகள் பட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்தார். இதை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து, வறியவர்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். இந்த நாட்களை அவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு தவக்காலம் சாம்பல் புதனுடன் நாளை தொடங்குகிறது. இதனையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். மனிதன் மண்ணாக இருக்கிறான், மண்ணுக்குத் திரும்புவான் என்பதன் அடையாளமாக சாம்பல் பூசுதல் நடைபெறும்.
தவக்காலமான இந்த 40 நாட்களில், தான தர்மம் செய்ய, இறை வேண்டலில் ஈடுபட, நோன்பிருக்க கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த 40 நாட்களில் முடிந்தவர்கள் ஒரு வேலை நோன்பு இருந்து, அசைவ உணவுகளைத் தவிர்த்து, ஏழைகளுக்கு உதவ அழைக்கப்படுகின்றனர். முடியாதவர்கள் சாம்பல் புதன், புனித வெள்ளி அன்று அசைவ உணவு தவிர்த்து, ஒருவேளை நோன்பு இருக்கவேண்டும்.
கிறிஸ்துவத்தில் 40 என்பது மிக முக்கியமான எண்ணாகப் பார்க்கப்படுகிறது. எனவே, தங்களைத் தாங்களே அன்பு செய்ய, தங்களை நேசிப்பது போல பிறரை நேசிப்பது எப்படி என்று உணர்ந்துகொள்ள இந்த 40 நாட்கள் தவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, இந்த நாட்களில் அடுத்தவர் மீது உள்ள அன்பை தர்மம் செய்வதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும். கடவுளின் அன்பைப் பெற இறை வேண்டல் செய்ய வேண்டும். நம் உடலை அன்பு செய்ய நோன்பிருக்க வேண்டும்.
நோன்பிருக்கும் போது அது யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இயேசு சொல்கிறார். நோன்பிருக்கிறேன் என்பதற்காக பழைய ஆடையை உடுத்துவது, முகத்தை வாட்டமாக வைத்துக்கொள்வது போன்றவற்றைச் செய்யக் கூடாது. வழக்கம் போல எந்த வித்தியாசத்தையும் வெளிப்படுத்தாமல் நோன்பிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 40 நாட்கள் தவக்காலம் கடந்த புதன் கிழமை சாம்பல் புதனுடன் இன்றைய தினம் தொடங்கி உள்ளது.
சாம்பல் புதன் தினத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் நோன்பு கடைபிடிப்பார்கள். இந்த நோன்பு ஏசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளிக்கு அடுத்த சனிக்கிழமை வரை கடைபிடிக்கப்படும். ஏசு சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் அதாவது புனித வெள்ளிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையில் உயிர்த்தெழுவார். அந்த நாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகையாகவும், ஏசுவின் உயிர்ப்பு பெருவிழாவாகவும் கொண்டாடப்படும்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி இன்று காலை நடந்தது. பேராலய அதிபர் இருதயராஜ் சிறப்பு கூட்டு திருப்பலி நடத்தினார். பேராலயத்தில் கூடியிருந்த கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது. இந்த திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த பூண்டி மாதா பேராலயத்தில் இன்று காலை 6.15 மணிக்கு பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள பேராலயம், தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது. வரும் 16ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை 6 வெள்ளிக்கிழமைகளிலும் தேவாலயங்களில் கிறிஸ்து இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மார்ச் 24ம் தேதி குருத்து ஞாயிறு தினத்தையொட்டி குருத்தோலைகளை கைகளில் ஏந்தி செல்லும் பவனி மற்றும் சிறப்பு திருப்பலி, மார்ச் 28ம் தேதி பாதம் கழுவும் சடங்கு நடைபெறும். மார்ச் 29ம் தேதி இயேசு உயிர்நீத்த புனித வெள்ளி நிகழ்ச்சியை முன்னிட்டு தேவாலயங்களில் புனித சிலுவைப்பாதை மற்றும் திருச்சிலுவை ஆராதனை மற்றும் திருவிருந்து, 30ம்தேதி பாஸ்கா திருவிழிப்பு திருப்பலி நடக்கும். 31ம் தேதி இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் பண்டிகை, சிறப்பு ஆடம்பர பாடல் திருப்பலியுடன்
கொண்டாடப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications