திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான அடுத்த நாளே திருமலையில் குறைந்த கூட்டம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்ததால் சுவாமியை விரைந்து தரிசனம் செய்தனர்.

நேற்று முதல் வைகுண்ட ஏகாதசிக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில் கடந்த 8ஆம் தேதி திருப்பதியில் டோக்கன் கொடுக்கும் இடத்தில், கூட்டநெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 6 பேர் பலியாகிவிட்டனர்.

திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். தற்போது புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையிலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசிக்கிறார்கள்.

tirupati spirtuality tirumala

பெருமாள் கோயில்களில் முக்கியமானது மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த விழா திருப்பதியில் 10 ஆம் தேதி முதல் 19 ஆம் வரை நடைபெறும்.

இந்த 10 நாட்களும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் கடந்த டிசம்பர் மாதமே ரிலீஸ் செய்யப்பட்டு புக் செய்யப்பட்டுவிட்டது. இலவச தரிசனத்திற்கான டோக்கன்களை வழங்க திருப்பதியில் 8 இடங்களை தேவஸ்தானம் தேர்வு செய்து அங்கு பக்தர்கள் வரிசையில் நின்று பெற்றுக் கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

9ஆம் தேதி காலை 5 மணிக்கு டோக்கன்கள் வழங்கப்படும் என சொல்லப்பட்டதால் 8ஆம் தேதி இரவே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அப்போது போலீஸார் அவர்களை அதிகாலையில் வருமாறு அறிவுறுத்தியும் அவர்கள் அங்கேயே காத்திருந்தனர்.

அப்போது ஏதோ ஒரு கேட் திறக்கப்பட்டதும், காத்திருந்த பக்தர்கள் முந்தியடித்துக் கொண்டு வந்ததில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 6 பேர் பலியாகவிட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே திருப்பதியில் கூட்டம் குறைந்துவிட்டது.

அந்த வகையில் ஜனவரி 9-ஆம் தேதியான நேற்று மொத்தம் 40,265 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 18,578 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 4.01 கோடியாகும். சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க எத்தனை மணி நேரம் ஆனது என்பது குறித்து குறிப்பிடவில்லை.

ரூ 300 சிறப்பு தரிசனத்திற்கு 3-4 மணி நேரத்திற்கு மேல் ஆனது. நடைபாதையாக வந்த பக்தர்கள் 8-10 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர். மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் அவர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர்.

திருப்பதிக்கு மாதந்தோறும் 24 ஆம் தேதி (இந்த தேதி மாறுதலுக்குள்பட்டது, இதற்கான அறிவிப்பு மாதந்தோறும் 21 ஆம் தேதி வரும்), அதாவது 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்குகின்றன. அதில் ஒரு அக்கவுன்ட்டில் 6 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம். அது போல் எக்ஸ்ட்ரா லட்டு வேண்டுமானாலும் தனியே பணம் செலுத்திக் கொள்ளலாம்.

குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக கொண்டு டிக்கெட் புக் செய்ய வேண்டும். அறைகளை புக் செய்ய அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு புக்கிங் ஸ்லாட் திறக்கப்படும். அதில் புக் செய்துக் கொள்ளலாம். ரூ 300 தரிசனத்திற்கும் அறை புக்கிங்கிற்கும் ஹை ஸ்பீடு இன்டர்நெட் இருந்தால்தான் புக் செய்ய முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+