உங்கள் வீட்டில் கெட்ட சக்திகள் நடமாட்டமா? செய்வினை இருப்பதை கண்டறிய ஒரு லெமன் போதுமே!
சென்னை: செய்வினை வைத்துவிட்டார்கள் என்பதை வீட்டிலேயே கண்டுபிடிக்கலாம். அது போல் அந்த செய்வினையிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
செய்வினை, பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்டவை பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. இவற்றின் மூலம் துஷ்ட சக்திகளை பிறர் மீது ஏவிவிட்டு அதனால் குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு தொல்லைகள் கொடுப்பதுதான் இந்த தவறான நடைமுறை.

இதில் சிலருக்கு நம்பிக்கை இருக்கும், சிலருக்கு இருக்காது! இவை எல்லாம் எதிரிகளை குறுக்கு வழியில் தோல்வியடையச் செய்ய நினைப்பதாகும்.
அந்த வகையில் செய்வினைகளால் நமக்கு துன்பங்கள் ஏற்படுகிறதா என்பதை வீட்டிலேயே கண்டுபிடித்துவிடலாம். ஒரு வேளை செய்வினை செய்திருப்பது உறுதி என்றால் அதை எளிய பூஜைகள் மூலம் அவற்றிலிருந்து விடபடலாம்.
செய்வினை பாதிப்பு இருந்தால் செய்யும் தொழில், வியாபாரம் ஆகியவற்றில் காரணமே இல்லாமல் திடீர் சரிவு ஏற்படும். உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படும். வீட்டில் ஏதாவது ஒரு மருத்துவச் செலவு வந்துக் கொண்டே இருக்கும். மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வீட்டில் பெரியவர்கள் நோய் வாய்ப்படுவர்.
அது போல் வீட்டில் வைத்திருக்கும் செடிகள் கருகிவிடும். விளக்கு அவ்வப்போது அணையும். வீட்டில் ஒரு பய உணர்வு இருக்கும். நாய் வைத்திருந்தால் எப்போதும் குரைத்துக் கொண்டே இருக்கும். பறவைகள் இறக்கும். மீன்களும் உயிரிழப்புக்குள்ளாகும்.
இப்படியெல்லாம் ஏற்பட்டால் நீங்கள் செய்வினை பாதிப்பால் அவதியடைந்துள்ளீர்கள் என அர்த்தம். இதற்கு என்ன செய்யலாம் என்றால், ஒரு மண் பானையில் துளசி இலைகளை போட்டு வையுங்கள். உங்கள் வீட்டில் தீய சக்திகள் இருந்தால் உடனடியாக அந்த இலை வாடிவிடும்.
ஒரு வேளை இலைகள் வாடவில்லை என்றால் உங்கள் வீட்டில் தீயசக்தி ஏதும் இல்லை என்று அர்த்தம். ஒரு எலுமிச்சை மாலையை உங்கள் கைகளால் கோர்த்து வீட்டருகே இருக்கும் காளி கோயிலில் சாத்தி விட்டு அதிலிருந்து ஒரு எலுமிச்சையை வாங்கி வந்து வீட்டில் எங்காவது வைங்கள். சில நாட்கள் கழித்து பார்க்கும் போது அந்த பழம் அழுகி இருந்தால் உங்கள் வீட்டில் தீயசக்தி இருக்கிறது என அர்த்தம்.
ஒரு வேளை பழம் காய்ந்திருந்தால் வீட்டில் தீயசக்தி இல்லை என்று அர்த்தம். உங்களுக்கு செய்வினை செய்திருப்பதிலிருந்து விலக எலுமிச்சை பழத்தை எடுத்து உங்களின் குலதெய்வத்தை நினைத்து உங்கள் தலையை சுற்றி பின்புறமாக வீசிவிட வேண்டும். பிறகு குளத்தில் நீராடுங்கள்.
தேய்பிறை செவ்வாய்க்கிழமையில் பகல் 12 மணி முதல் 1.30 மணிக்குள் காளி தேவியை நினைத்து பூஜை செய்யலாம். செய்வினையை நீக்கும் பரிகாரங்களை செய்யும் போது சம்பந்தப்பட்டவரை தவிர வேறு யாரும் இருத்தல் கூடாது. அதிலும் குழந்தைகள், கன்னி பெண்கள், இருக்கவே கூடாது.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
பித்ருக்களின் ஆசியைப் பெற வேண்டுமா? சனி அமாவாசையில் தவறவிடக் கூடாத தர்ப்பண முறைகள்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications