Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபரிமலைக்கு போகும் தண்ணீர்.. பிஸ்கட் பாக்கெட்டுகள்.. அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சபரிமலைக்கு 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள் மற்றும் 10 லட்சம் தண்ணீர் பாட்டில்களை விரைவாக அனுப்ப இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்

சபரிமலையில் மண்டல பூஜை வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. கார்த்திகை முடிந்து மார்கழி மாதம் தொடங்க உள்ள நிலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை தலையில் இருமுடி சுமந்து கொண்டு 10 மணி நேரம் வரைக்கும் சாமி தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.

HRCE will send 10 lakh liters of water and 10 lakh packets of biscuits to Sabarimala says Sekar Babu

திருப்பதி மாடல் க்யூ என்று ஒன்றை அறிமுகம் செய்ததே பல மணி நேர காத்திருப்புக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பதியில் பல வசதிகள் உள்ளன. பாத்ரூம் வசதிகள், உணவுகள் பல உள்ளன. ஆனால் சபரிமலையில் குடிநீர் இல்லை, கழிவறை இல்லை, குழந்தைகள், வயதானவர்கள் என பலரும் பல மணி நேரம் காத்திருந்து தவித்து போயினர்.

பல மாநிலங்களில் இருந்தும் விரதம் இருந்து வருகின்றனர். பொறுமையாகவும் நிதானமாகவும் ஐயப்பனை தரிசனம் செய்ய வந்தால் நெரிசல் இன்றி தரிசனம் செய்யலாம் என்று கூறப்பட்டாலும் ஆன்லைன் முன்பதிவு, நேரடியாகவும் வந்து உடனடியாகவும் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யவும் வசதி உள்ளதால் தினசரியும் வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கேரளா மாநில அரசையும், திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகத்தையும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று கேரளா அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கேரளா மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சபரிமலைக்கு 20 லட்சம் பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி, புளியந்தோப்பு ஆகிய பகுதியில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 3500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய போது இதனை தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு பயணிக்கும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறையுடன் பேசி கூடுதல் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஒரு செயல் அலுவலர் மற்றும் ஒரு கண்காணிப்பாளர் சபரிமலையில் நிரந்தரமாக தங்கி பணியாற்றி வருகின்றனர். தமிழக பக்தர்களுக்கு உதவி செய்ய அவர்கள் தயாராக உள்ளனர்.

சபரிமலைக்கு 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள் மற்றும் 10 லட்சம் தண்ணீர் பாட்டில்களை விரைவாக அனுப்ப இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களுக்கு எந்தவிதசிரமமும் இல்லாமல் 6 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+