வீட்டில் புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் படம் வைத்திருக்கலாமா? அதிசயத்தை ஏற்படுத்தும் ஒரு பொருள்!
சென்னை: வீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்பது போன்ற கிருஷ்ணர் படத்தை வைக்கலாமா, வைக்கக் கூடாதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் ஒரே ஒரு பொருளை உங்கள் வீட்டில் வைத்துவிட்டு பின்னர் அதன் அதிசயத்தை பாருங்கள்.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் குரலோவியம் எனும் ஐடியில் கூறியிருப்பதாவது: உங்க வீட்ல இந்த ஒரு பொருளை மட்டும் வையுங்க... அப்புறம் பாருங்க அதிசயத்தை!!

வீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்பது ஏன் நல்லது மற்றும் புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா போன்றவற்றிற்கான பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
புல்லாங்குழல் ஓர் இனிமையான இசைக்கருவி. அதிலும் இதிலிருந்து வெளிவரும் இசை, மனதில் உள்ள கஷ்டங்களை மறையச் செய்துவிடும். அதோடு இந்த இசைக் கருவியைப் பார்த்ததுமே நம் நினைவிற்கு வருபவர் கிருஷ்ண பகவான் தான். அவர் தான் எப்போதும் புல்லாங்குழலை கையில் வைத்திருப்பார்.
இத்தகைய புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பது நல்லதா கெட்டதா என்று பலரது மனதிலும் கேள்வி எழும். அத்தகையவர்களுக்கு இக்கட்டுரையின் மூலம் ஓர் நல்ல விடை கிடைக்கும்.
சரி, இப்போது புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால் என்ன நடக்கும் என்று காண்போம்.
நன்மை #1 புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் வீட்டை விட்டு ஓடிவிடும். இதற்கு அந்த புல்லாங்குழல் மூங்கில் கொண்டு செய்யப்படுவது தான் காரணம்.
நன்மை #2 புல்லாங்குழலை ஒருவர் தங்கள் வீட்டில் வைத்திருந்தால், அது குடும்ப ஒற்றுமையை வலிமையாக்கும் மற்றும் வீட்டில் அமைதியான சூழல் உருவாகும் என நம்பப்படுகிறது.
நன்மை #3 கிருஷ்ண பகவானின் கையில் இந்த இசைக்கருவி இருப்பதால், இதை ஒரு புனிதமான பொருளாகவே இந்து மதம் கருதுகிறது.
நன்மை #4 முக்கியமாக வீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்போரிடம், அன்பும், காதலும் அதிகரிக்கும்.
புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா? இந்த கேள்வி பலரது மனதிலும் உண்டு. இதற்கு புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வீட்டில் வைத்தால், வீட்டில் உள்ள செல்வம் அனைத்தையும் கிருஷ்ணர் ஊதி விடுவார் என்ற நம்பிக்கை தான் காரணம்.
ஆனால் அது ஒரு மூடநம்பிக்கை. கிருஷ்ணரின் ஒரு இணைபிரியா அம்சம் தான் புல்லாங்குழல். அது தான் அவரின் அழகும் கூட. எனவே எவ்வித அச்சமுமின்றி, புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வழிபடலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications