கெத்செமனே தோட்டத்தில் இயேசுவின் ஜெபம்... அவருடைய வியர்வை எப்படி ரத்தமாய் மாறியது?
சென்னை: இயேசு தாம் காட்டி கொடுப்பதற்கு முன், கெத்செமனே என்னப்பட்ட இடத்தில், தன்னுடைய சீஷர்களை கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், மிகவும் வியாகுலப்படவும், திகிலடையவும் தொடங்கினர் என்பதை (லூக்கா, மாற்கு) அதிகாரத்திலும், மற்றும் லூக்கா 22: 44 ல் "அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார், அவருடைய வியர்வை ரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது" என்று சொல்லப்பட்டு இருக்கிறது, அப்படி என்ன ஜெபம் செய்தார், வியர்வை ரத்தமாய் மாறுவதற்கு? அதற்கு என்ன காரணம் என்ன என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
இயேசு என்ன ஜெபம் செய்தார்: கெத்செமனே தோட்டத்திலே கடைசி நாள் தாம் காட்டி கொடுக்கப்பட்ட அன்று இரவிலே, கடைசியாக இயேசு மூன்று முறை ஜெபித்தார். "இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கும் படி செய்யும், ஆனாலும் எனது சித்தத்தின் படி அல்ல, பிதாவே உமது சித்தத்தின் படி எனக்கு ஆகக்கடவது என்று சொல்லி ஜெபித்தார்". அது என்ன பாத்திரம்?, பாவம் நிறைக்கப்பட்ட ஒரு பாத்திரம். ஆதாவது சர்வலோகத்தின் (நம் எல்லோருடைய) பாவத்தையெல்லாம் இந்த பாத்திரத்தில் இருக்கிறதை இயேசு கண்டார். இயேசு தாம் சிலுவையில் படப்போகிற பாடுகளையோ, அல்லது மரணத்தை சந்திக்கபோவதை குறித்து அவர் பயப்படவுமில்லை. சர்வலோகத்தின் பாவத்தை அவர் சுமக்கப்போகிறபடியினாலே துக்கமடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினர், அது மரணத்திற்கு ஏதுவான துக்கம் அல்ல, ஏன்னெனில் "பிதாவானர் பாவத்தை பாரத சுத்த கண்ணர்" என்றும் எழுத்திருக்கிறபடியே, சர்வலோகத்தின் பாவம் தன் தலைமேல் வந்தபோது, பிதாவுக்கும், (தனக்கும்) குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பிரிவு உண்டாகப்போகிறதை, நினைத்து மிகவும் திகிலடைய தொடங்கினர், என்பதே உண்மை.

வியர்வை ரத்தமாக மாறியதற்கு காரணம்: உயர் ரத்த அழுத்தம், பயம், மனஅழுத்தம் போன்ற காரணிகளால் ரத்த வியர்வை ஏற்பட வாய்ப்புள்ளது, அறிவியல் ரீதியாக இப்படி மனிதனுக்கு சம்பவிப்பது என்பது அரிதான ஒன்றாகும். ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக வியர்வை ஏற்பட்டால், அவர் உடம்பில் நீர் இழப்பு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது, ஆனால் ரத்த வியர்வை ஏற்படும்போது, அதைவிட அதிகமான பாதிப்பு ஏற்படுகிறது. வியர்வை சுரப்பிகளுக்கு ஊட்டமளிக்கும் ரத்தநாளங்கள் சிதைந்து, அவை ரத்தம் வெளியேறுவதற்கு காரணமாய் இருக்கின்றது. அதீத பயம் மற்றும் மன அழுத்தமே மிக முக்கிய காரணம். இவை இயேசுவுக்கு ஏற்பட காரணம், தனக்கும், பிதாவுக்கும் ஏற்படப்போகிற பிரிவினையை நினைத்து, தன்னுடைய ஆத்துமாவிலே உண்டான மகா பெரிய அழுத்தத்தின் காரணத்தினால், சரீரத்தில் ஏற்பட்ட வியர்வை ரத்தத்தின் பெருந்துளிகளாய்த் வந்தது. இயேசு சிலுவையில் அறையபடுவதற்குமுன், கெத்செமனே தோட்டத்தில் ஜெபிக்கும்போது ரத்த வியர்வை சிந்தியாக லூக்கா அதிகரித்தால் கூறப்பட்டுள்ளது. இயேசு பாவம் செய்யாமல் இருந்தும், பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை மனுகுலத்திற்காக ஏற்றுக்கொண்டார்.
இயேசுவுக்கு மரணம் பயமா, ஏன் வியாகுலம், எதற்கு இந்த திகில்: இயேசு கெத்செமனே தோட்டத்தில் தூக்கமடையவும், மிகவும் வியாகுலப்படவும், திகிலடையவும் தொடங்கினர் என்று சொல்லப்பட்டுள்ளதே, அப்படியென்றால் இயேசுவுக்கு மரணம் பயம் தொற்றிக்கொண்டதோ?, "என் ஆத்துமா மரத்திற்கு எதுவாக துக்கம் கொண்டுயிருக்கிறது என்று இயேசு சொன்னாரே". மரண பயம் இருந்து இருந்தால் எப்படி மரணத்தை ஜெயிக்க முடியும்? அப்படி அல்ல, (யோவான் 18: 4) வசனத்தில், இயேசுவை பிடிப்பதற்காக எதிராளிகள் வந்தபோதும், தனக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்திருந்தும், அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், நீங்கள் தேடும் நசரேனாகிய இயேசு நான் தான் என்று சொல்லி, தன்னை அவர்களிடம் ஒப்புக்கொடுத்தார். பின்பு அவருக்கு ஏன் துக்கம், வியாகுலம், திகில் உண்டானது, அதற்கு அவருடைய வாழ்நாளில் ஒரு நாள் கூட மனஅழுத்தம் நிறைந்தவராகவோ, துக்கம் நிறைந்தவராகவோ இருக்கவில்லை, அப்படி இருக்க ஒரே காரணம் மனிதகுலத்தின் கீழ்படியாமையையும், பாவமும், அவர் மேல் சுமத்தப்பட்டு, பிதாவின் கோபாக்கினை என்ற பாத்திரம் அவர் மேல் வந்ததும், பிதா அவருடைய முகத்தை ஒரு க்ஷண பொழுது மறைத்தார், அப்பொழுது இயேசு சிலுவையில் "பிதாவே பிதாவே என்னை ஏன் கைவிட்டீர்" என்று கூறினார். மனிதனுடைய பாவத்தின் நிமித்தம் அவர் கைவிடப்பட்டார், நம் மேல் வரவேண்டிய கோபாக்கினையின் மரண தண்டனையும் அவர் ஏற்றுக்கொண்டார். தன்னுடைய நீதியையும் மனிதன் மேலும், நம்முடைய பாவத்தை தன் மீதும் சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டியானார். நம்மை காப்பாற்ற அவர் தன்னையே தந்தார் என்றெண்ணி அவருக்காக வாழ்வது மாபெரும் பாக்கியம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications