தொழுவத்தில் ஆடுகள்.. கொட்டகையில் மாடுகள்.. கூண்டில் கிளிகள்.. பண்ணையில் கோழிகள்.. பெஸ்ட் திசை இதுவே
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிலவகை விலங்குகள், பறவைகளை மனிதர்கள் தங்கள் பிரியத்துக்காக, பாதுகாப்புக்காக, வாழ்வாதாரத்துக்காக என பல காரணங்களுக்காக வீடுகளிலேயே வளர்த்து வருகிறார்கள்.. ஆனால், இதற்கும் வாஸ்து சாஸ்திரத்திலும் நிறைய விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. அதை சுருக்கமாக பார்ப்போம்.
தமிழகத்தில் அவ்வப்போது மழை பொய்த்து போய்விடுவதால், பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளை நம்பி இருக்கிறார்கள்.. இந்த கால்நடைகளை சரியான முறையில் பேணி பாதுகாக்கப்பட உள்ளது. அந்தவகையில், ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்றவைகள், வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படுகின்றன.

மாடுகள்: மாடுகளை எடுத்து கொண்டால், இது வெறும் கால்நடையாக கருதப்படாமல் வீட்டிற்கு செல்வ வளத்தை தரும் இறைவனின் அம்சமாகவே கருதப்படுகிறது.. இதற்கென பிரத்யேக பூஜைகளும் செய்யப்படுகின்றன.. பசுக்கள் எந்த தீய சக்தியையும் வீட்டிற்குள் நுழைய விடாது... செல்வத்தின் அதிபதி மகாலட்சுமியின் அம்சமாக பசு போற்றி வணங்கப்படுகிறது. பசுவை வளர்ப்பதன் மூலம் நம்முடைய ஆரோக்கியம் அதிகரிக்கும் வீட்டில் செல்வ வளம் பெருகும்.
மாடுகள் வளர்ப்பவர்கள், தங்களது வீட்டின் வடக்கு, மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு ஆகிய பகுதிகளில் மாட்டு தொழுவங்கள் அமைக்க வேண்டும். இதில் மாடுகளை கட்டும்போது கிழக்கு, மேற்கு, வடக்கு பார்த்து கட்ட வேண்டும்.. இதனால், மாடுகள் பல்கி பெருகுவதோடு, மிகுந்த பால் தரக்கூடும் - குடும்பத்தில் பணவரவு அதிகமாகும்.
இறைச்சி: இறைச்சிக்காக அல்லது பால் தேவைகளுக்காக ஆடுகள் வளர்ப்பவர்கள், தங்களின் வீடுகளில் தென்கிழக்கு, வடமேற்கு பகுதியில் ஆடுகொட்டிலை அமைக்கலாம். இதனால், ஆடுகள் ஆரோக்கியமாக வளரும்.
கோழிகள் வளர்ப்பவர்கள் இதுபோலவே, வடமேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் கோழிக்கூண்டு அமைக்கலாம்.. இதனால் கோழிகள் அதிக முட்டைகளை இடும்.. நோய்வாய்ப்படாமலும் இருக்கும். வாத்து, வான்கோழி, கின்னிக்கோழி, காடை, முயல் வளர்ப்பு போன்றவற்றுக்கும் இவையே பொருந்தும்.
எதிர்மறை ஆற்றல்: வீட்டின் எதிர்மறை ஆற்றலை விரட்டி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் சக்தி நாய்களுக்கு உண்டு. நமக்கு நடக்க போகும் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கும் தன்மை நாய்களுக்கு உள்ளது.. நாய்களை வளர்ப்பதன் மூலம் மன அழுத்தம் நம்மை விட்டு நீங்கும். நாய் வளர்ப்பது வீட்டின் நேர்மறை ஆற்றலையும் அதிகப்படுத்தும்.
நாய் வளர்ப்பவர்கள், தங்கள் வீட்டின் வடமேற்கு மற்றும் தென்கிழக்கு மூலையில் நாய் வசிப்பதற்கான இடத்தை தேர்வு செய்யலாம். இதனால், நாய்கள் சுறுசுறுப்புத்தன்மையுடன் இருக்கும்.. எக்காரணம் கொண்டும், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் நாய்க்கூண்டை அமைக்கக்கூடாது.
மீன் தொட்டிகள்: மீன் தொட்டிகளை வரவேற்பறை அல்லது ஹால் பகுதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வைக்கலாம். இதனால் மீன் தொட்டிக்கு நல்ல வெளிச்சமும், காற்றோட்டமும் கிடைக்கும். மொத்தத்தில், ஈசானியம் என்ற வடகிழக்கில் வளர்ப்பு பிராணிகளை வைத்து பராமரிக்க கூடாது. மொத்தத்தில், ஈசானியம் என்ற வடகிழக்கிலும் வளர்ப்பு பிராணிகளை வைத்து கால்நடைகளை பராமரிக்கக்கூடாது.
லவ்பேர்ட்ஸ், கிளிகள் வளர்ப்பவர்கள், கிளிகளை வடக்கு திசையில் கூண்டு வைத்து வளர்க்க வேண்டும்... காதல் பறவைகள் கூண்டுகளை வடகிழக்கு அல்லது கிழக்கு திசையிலோ வடமேற்கு திசையிலோ வைத்து வளர்க்கலாம்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications