இந்த பறவை உங்க வீட்டுக்கு வந்திருக்கா? ரொம்ப நல்லதாமே.. வறுமையை போக்கும் மயிலிறகு பரிகாரம்.. சூப்பர்
சென்னை: வீட்டிற்குள் எந்தெந்த பறவைகள் வந்தால் நல்லது தெரியுமா? மயில்கள் வீட்டிற்குள் வருவது நல்லதா? மயிலிறகுகள் தோஷத்தை போக்க பயன்படுத்தலாமா? வாஸ்து தோஷத்தில் எந்த அளவுக்கு மயிலிறகுகள் உதவுகின்றன?
விலங்குகள், பூச்சிகள், பறவைகள் குறித்தெல்லாம்கூட, சாஸ்திரங்களில் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளன.. அதிலும், பறவைகளின் வருகையை வைத்துக்கூட அந்த வீட்டின் அதிர்ஷ்டமும், அபாயமும் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது.

காகங்கள்: உதாரணத்துக்கு சனீஸ்வர பகவானின் வாகனமாக கருதப்படும் காகம், நம்முடைய வீட்டிற்கு வந்தால் மிகவும் நல்லது என்பார்கள்.. சமாதான பறவையான புறாக்கள் வீடுகளுக்குள் வந்தால், வீட்டில் நிலவும் கஷ்டங்கள் மொத்தமாக நீங்கிவிடுமாம்.
அதுபோலவே, மஹாலக்ஷ்மியின் வாகனமான ஆந்தைகள் வீட்டிற்குள் வந்தால், வறுமை நீங்கி, செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.. மகாவிஷ்ணுவின் வாகனமான கழுகுகள், வீட்டிற்கு வந்தால் மிகவும் அதிர்ஷ்டம் என்பார்கள்.
முருகனின் வாகனம்: இந்தவரிசையில் மயில்களும் மிக முக்கியமான பறவையாகும்.. முருகனின் வாகனமாக மயில் கருதப்படுகிறது.. மயில்கள் எப்போதுமே தனித்து வாழக்கூடியவை.. மனித நடமாட்டம் உள்ள இடத்தில் மயில்கள் அவ்வளவாக வராது.. மனிதர்கள் நடமாட்டம் இருப்பது தெரிந்தாலே, மயில்கள் அங்கிருந்து உடனடியாக பறந்து சென்றுவிடுமாம்.. அப்படிப்பட்ட மயில், ஒருவரது வீட்டுக்குள் வருகிறது என்பது மிகவும் அபூர்வமாகவும், நன்மைக்குரியதாகவும் பார்க்கப்படுகிறது.
அதேபோல, பயணத்தின்போது உயரமான இடத்திலோ அல்லது சாலை ஓரமாகவோ மயிலை பார்ப்பது நல்ல சகுனம் என்பார்கள்.. ஆனால் அதன் அகவல் சத்தத்தை கேட்பது நல்ல சகுனம் கிடையாது.. அதனால், வெளியே செல்லும்போது மயிலின் சத்தத்தை கேட்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமாம்.
ஆபத்து - அறிகுறி: அதேபோல, மயில்கள் வீட்டுக்குள் வந்தால். உங்களுக்கு வரப்போகும் பெரிய ஆபத்திலிருந்து முருகன் உங்களை காப்பாற்றி உள்ளார் என்பதே அர்த்தமாம்.
மயிலிறகுகளும், எப்போதுமே, திருஷ்டியையும், தோஷத்தையும் போக்கக்கூடிய பொருளாக திகழ்ந்து வருகிறது. அதனால்தான், எதிர்மறை சக்திகளை விரட்டியடித்து, வாஸ்து தோஷத்தை போக்க, வீட்டின் வாசலின் மேல்பகுதியில், மயில் இறகினை பலரும் ஒட்டிவைத்திருப்பார்கள். நீங்கள் வெளியே செல்லும்போது ஒவ்வொரு முறையும் இந்த மயிலிறகை பார்த்து விட்டு செல்வது நல்ல பலனை தரும்..
அதேபோல, 3 மயில் இறகுகளை, ஒரு கருப்பு நிற கயிற்றினால் கட்டி, பாக்கு நீரில் போட வேண்டும். இந்த தண்ணீரை தெளித்தவாறு "ஓம் சனீஸ்வராய நமஹ" என்று தினமும் 21 முறை உச்சரித்து வந்தால், சனி தோஷம் நீங்கும் என்பார்கள். அதேபோல, 8 மயிலிறகையும், ஒரு வெள்ளை கயிற்றில் கட்டி பூஜை அறையில் வைத்து "ஓம் சோமாய நமஹ" என்ற மந்திரத்தை உச்சத்து வந்தால், வீட்டிலுள்ள அனைத்து தோஷமும் நீங்குமாம்.
வறுமை நீங்கும்: எல்லா இடங்களிலும் மயிலிறகை வைக்கக் கூடாது. அவற்றிற்கு என சில திசைகளும் இடங்களும் உண்டு.. நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியிலும், ஒரு மயிலிறகை போட்டு வைக்கலாம்.. இதனால், வறுமை நீங்கி செல்வம் சேரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. படுக்கை அறையிலும், மயிலிறகை வைத்திருந்தால், தம்பதிக்குள் அன்னிநோன்யமும், புரிதலும் அதிகரிக்கும் என்பார்கள்.
மயிலிறகை பாக்கெட்டில் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.. அலுவலகத்தில் நாம் அமரும் இடத்திலும் வைத்து கொள்ளலாம். குழந்தைகள், தங்களது புத்தகத்தில் மயிலிறகுகளை வைப்பதை விட, ஸ்டடி ரூமில் வைத்து தினமும் மயிலிறகை வணங்கிவிட்டு படிக்க தொடங்கினால் புத்திகூர்மை ஏற்படும். ஆனால், நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால், ஒற்றைப்படையில் மயிலிறகுகளை வைப்பது சிறப்பது..












Click it and Unblock the Notifications