கிச்சனுக்குள் செருப்பு காலுடன் போறீங்களா? கோயிலில் செருப்பு திருடு போவது நல்லதா? இதை பண்ணிடாதீங்க
சென்னை: நாம் அணியும் செருப்புகளுக்கும் வாஸ்து உள்ளது.. செருப்புகளை எப்படி அணிவது? எங்கெல்லாம் அணிய வேண்டும்? அணிய கூடாது என்பது பற்றியெல்லாம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, செருப்பு குறித்த கனவு பலன்களும் சொல்லப்பட்டுள்ளன. அவைகளை சுருக்கமாக பார்ப்போம்.
செருப்புக்கும், சனிக்கும் தொடர்பு உண்டு என்பதால், அது நம்முடைய வாழ்வில் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம்.. எனவேதான், வீட்டில், செருப்பை கழட்டி சரியான திசையில் வைத்திருந்தாலே, பொருளாதார பிரச்சனை, குடும்ப பிரச்சனை, நிம்மதியின்மை போன்றவைகளை தவிர்க்கலாம் என்கிறார்கள்..

செருப்புக்கு உரிய திசை: நாம் வெளியில் சென்று விட்டு திரும்பும்போது கழற்றி வைக்கும் செருப்பு, நேராக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, தலைகீழாக இருக்க கூடாது. செருப்புகளை வாசலில் நேராக அடுக்கி வைக்க வேண்டுமே தவிர, கலைத்தோ சிதறியோ கிடக்கும்படி வைக்கக் கூடாது... சரியான முறையில் அடுக்கி வைக்க வேண்டும்.
குறிப்பாக, மேற்கு திசையில் செருப்பை அடுக்கி வைக்க வேண்டும். பயன்படாத செருப்புகள், அறுந்துபோன செருப்புகளை உடனடியாக தூக்கி எறிய வேண்டும். முன்பு வாங்கி இப்போது சிறிய அளவிலான புதிய செருப்புகளே என்றாலும், பயன்படுத்தாதபோது அவைகளை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
தலைவாசல்: வீட்டின் தலைவாசலில் செருப்பை போட்டுக்கொண்டு நின்றால், அது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை கொண்டுவந்துவிடும்.. அதேபோல, சமையலறையில் லட்சமியின் அம்சமாக கருதப்படும், கல் உப்பு, பருப்பு, அரிசி போன்றவற்றை வீட்டில் செருப்பை அணிந்துக்கொண்டு தொடக்கூடாது. சமைக்கும்போதும் செருப்பை போட்டுக்கொண்டு சமைக்கக்கூடாது, செருப்பை அணிந்து கொண்டு சாப்பிடக்கூடாது.
எப்போதுமே சரியான அளவிலான செருப்புகளை அணிய வேண்டும்.. காரணம் தவறான சைஸ் செருப்புகூட, வருமானத்தில் தடையை உண்டுபண்ணிவிடும் என்கிறது ஜோதிடம்.
சனீஸ்வர பகவான்: கோயில்களை பொறுத்தவரை, நவகிரகங்களில் சனீஸ்வர பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். அவரின் தாக்கம் இருக்கும் இடமாக கால் சொல்லப்படுகிறது.. எனவே, அந்த காலில் நாம் அணியக்கூடிய செருப்பும் சனிபகவானின் தாக்கம் பெற்றதாக இருக்கிறது. எனவே, செருப்பை நீங்கள் பிறருக்கு தானமாக தந்தால், சனீஸ்வர பகவானின் அருளும் ஆசியும் கிடைக்கும்..
அதேபோல, நீங்கள் கோயிலுக்குள் சென்றுவிட்டு, திரும்பி வந்து பார்க்கும்போது, உங்களது செருப்பு திருடு போய்விட்டால் கவலைப்பட தேவையில்லை.. கோயிலில் செருப்பு திருடு போனால், சனீஸ்வர பகவானால் ஏற்படவிருக்கும் அனைத்து இன்னல்களும் தீரும் என்று அர்த்தமாம். அது நல்ல முன்னேற்றத்துக்கான அறிகுறி என்று அர்த்தமாம். அதுவும் சனிக்கிழமைகளில் செருப்பு திருடுபோனால், இன்னும் நல்லதாம்.
செருப்பு காணாமல் போனது போல் கனவு கண்டால், இதுவரை நீடித்து வந்த உங்கள் கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும் என்று அர்த்தமாம். செருப்பை தேடுவது போல கனவு கண்டால் உங்களின் நிதிநிலைமை அதிகரிக்க போவதாக அர்த்தமாம்..
செருப்பு நிறம்: வெள்ளை நிறத்திலான செருப்புகள் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.. சிகப்பு, மஞ்சள் நிற செருப்புகளை அணிவதால் முன்னேற்றமும் வெற்றியும் ஏற்படுத்தும்.. பச்சை, பிரவுன் நிற செருப்புகள் மகிழ்ச்சி, உற்சாகத்தை தரக்கூடியது. ஆனால் எக்காரணம் கொண்டும், எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும், கருப்பு, அடர் நீலநிறத்தில் செருப்பை தவிர்க்கலாம்.. இது முன்னேற்றத்துக்கு தடையை உண்டுபண்ணிவிடும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications