கோயில் அருகே வீடு கட்டலாமா? எந்த கோயில் அருகே எப்படி வீடு கட்ட வேண்டும்?
சென்னை: கோயில்களுக்கு அருகில் வீடு கட்டலாமா கட்டக் கூடாதா என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். எந்த கோயிலுக்கு அருகே எத்தனை அடி தூரத்தில் வீடு கட்டினால் நன்றாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக அந்த காலத்தில் வீடுகள் கோயில்களுக்கு அருகில் இருக்கும். அங்கு அந்த கோயிலில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் வசிப்பர். தற்போது கால போக்கில் அவை எல்லாம் மாறி விற்பனை செய்யப்படுகிறது.

அங்கு பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீட்டை கட்டி விடுவார்கள். மேலும் சில கோயில்களுக்கு பக்கத்தில் அந்த கோயில்களுக்கு சொந்தமான வீடுகள் குத்தகைக்கு விடப்பட்டிருக்கும். அங்கேயே காலம் காலமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
வீடு வாடகைக்கு, குத்தகைக்கு அல்லது கட்டுவதற்கு பார்க்கும் போது கூட கோயிலுக்கு அருகே இருக்கிறது என்றால் அதற்கு தனி மதிப்பு. மக்களும் கோயிலுக்கு அருகே இருக்கிறது என்பதால் அந்த வீட்டிற்கு குடித்தனம் போக நினைப்பார்கள். அப்படிப்பட்ட சூழலில் கோயிலுக்கு அருகே வீட்டை கட்டலாமா என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: கோயில்களுக்கு அருகில் வீடு கட்டலாமா ? சாஸ்திர ரீதியாக வீடு கட்டும்பொழுது கோயில்களின் அருகில் வீடு கட்டினால் கூட கெடுதி ஏற்படுவதில்லை.
ஆனால் சிவாலயங்கள் அருகில் வீடு கட்டினால் அந்த கோபுரத்தின் நிழல் வீடு மீது படக்கூடாது. அது மட்டுமல்ல விநாயகர் கோயிலுக்கு வலப்பக்கம் வீடு அமைப்பது நல்லதல்ல. சிவாலயத்திற்கு 100 அடி தூரம் கடந்தும் வைஷ்ணவ ஆலயத்திற்கு 20 அடி தூரம் கடந்தும் அம்மன் கோயிலுக்கு 120 ஆடி தூரம் கடந்தும்
ஆஞ்சநேயர் கோயிலுக்கு 10 அடி தூரம் கடந்தும் வீடுகள் கட்ட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications