கழுத்தை நெரிக்கும் கடன்.. இந்த ஒரு பொருள் போதும்..தானமாக கொடுத்தால் செல்வம் வீடு தேடி வரும்
சென்னை: உலகத்தில் உள்ள மனிதர்கள் பலருமே ஏதாவது ஒரு விசயத்திற்காக கடன் வாங்கியிருப்பார்கள். கடனை தீர்க்க எந்த வழியும் தெரியாமல் தடுமாறுவார்கள். கடன் மேல் கடன் பட்டு கலங்கிப்போய் நிற்பார்கள். குடும்பத்தலைவர் பட்ட கடன் அந்த குடும்பத்தையே தடுமாற வைக்கும். கடன் பிரச்சினை தீர சில ஆன்மீக பரிகாரங்கள் உள்ளன. எந்த பரிகாரத்தை உங்களால் எளிதாக செய்ய முடியுமானால் நம்பிக்கையுடன் செய்யுங்கள் கை மேல் பலன் கிடைக்கும்.
கடன் பிரச்சினை தீர நாம் செய்ய வேண்டியது எல்லாமே எளிமையான பரிகாரம்தான். முதலில் சிறுபருப்பு எனப்படும் பாசி பருப்பை வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் இரவில் உறங்க செல்வதற்கு முன்பாக ஒரு சிறிய கிண்ணத்தில் 1 கைப்பிடி பாசிப்பருப்பு, 1 கைப்பிடி வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீரை ஊற்றி ஊற வைத்து விடுங்கள்.

மறுநாள் காலை நன்றாக ஊறி இருக்கும் அந்த பாசி பருப்பை கொண்டு போய் அப்படியே பசு மாட்டிற்கு உங்கள் கையால் கொடுக்க வேண்டும். அப்போது கடனெல்லாம் தீர்ந்து போக வேண்டும் என்று அந்த கோமாதாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள். பசுவின் ஆசிர்வாதம் மனப்பூர்வமாக உங்களுக்கு கிடைக்கும். உங்கள் கையால் பாசிப்பருப்பை எவ்வளவு பசு மாட்டிற்கு கொடுக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு செல்வ செழிப்பு உங்களுக்கு கூடிக்கொண்டே செல்லும்.
அதே போல ஒரு கைப்பிடி பச்சரிசியை இரவு ஊற வைத்து காலையில் சர்க்கரை, வாழைப்பழம் கலந்து பசுவிற்கு கொடுக்கலாம். இதன் மூலம் நமக்கு வருமானம் அதிகரிப்பதற்கான வழி கிடைக்கும். கடனை எல்லாம் எளிதில் திருப்பி கொடுத்துவிடுவீர்கள். இது ஒரு சுலபமான பரிகாரம்தான் முயற்சி செய்து பாருங்கள்.
பாசிப்பருப்பை வாங்கி தானமாக கொடுக்கலாம். புதன்கிழமை அன்று பாசிப்பருப்பு வாங்கி கோவிலில் குருக்களுக்கு தானம் கொடுக்கலாம். ஆதரவற்றவர்கள் வாழும் ஆசிரமங்களுக்கு தானம் கொடுக்கலாம். ஏழை குடும்பத்திற்கு ஒரு கிலோ பாசிப்பருப்பு வாங்கி தானம் கொடுக்கலாம். அதை அவர்கள் சமைத்து சாப்பிட்டால் உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டம் தீரும்.
பாசிப்பருப்பை வாங்கி உங்களால் எந்த அளவுக்கு தானம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தானம் செய்து வாருங்கள். பண கஷ்டங்கள் எல்லாம் குறையும். வீட்டில் இருக்கும் மன கஷ்டங்கள் எல்லாம் தீரும். சந்தோஷம் நிறைவாக இருக்கும். கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.
கோவிலில் பிரதோஷ நேரத்தில் பாசிப்பருப்பு பாயாசம் செய்து ஏழைகளுக்கு சாப்பிட கொடுப்பது ரொம்ப ரொம்ப விசேஷம். பாசிப்பருப்பு பாயாசம் உங்கள் கையாலேயே செய்து கொண்டு போய் ஆசிரமத்தில் அன்னதானம் செய்யுங்கள். அதே போல கடைகளில் விற்கும் வறுத்த பாசிப்பருப்பை வாங்கி காக்கை குருவிகளுக்கு சாப்பிட கொடுப்பது ரொம்ப நல்லது.

குல தெய்வ வழிபாடு என்பது கடன் தீர்க்க மிக மிக சிறந்த பரிகாரமாக பார்க்கப்படுகிறது. குலதெய்வம் தெரிந்தவர்கள் வீட்டின் பூஜை அறையில் இந்த பரிகாரத்தை செய்யலாம். பவுர்ணமி நாளில் குலதெய்வத்தின் படத்தை அலங்கரித்து அம்மனுக்கு இஷ்டமான படையல்களை படைத்து பின்னர் தூப, தீப, ஆரத்தி காண்பித்து மனமார கடன் தீர பிரார்த்தனை செய்யலாம். இதனை ஒன்பது பௌர்ணமிகள் செய்து பாருங்கள். நிச்சயமாக கடன் தீருவதற்கான வழியை குல தெய்வம் காட்டும்.
பெருமாள் கோவிலுக்கு சென்று சனி மற்றும் புதன் கிழமைகளில் சக்கரத்தாழ்வார் சன்னிதியில், துளசி மாலை சாற்றி, 12 முறை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும், கடன் பிரச்சினை தீர்வதற்கு மனமுருக பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து 12 வாரங்கள் செய்தாலே கடன் தீருவதற்கான வழி பிறக்கும்.
ருணத்தை போக்குபவர் நரசிம்மர். செவ்வாய்கிழமை, ஞாயிறுக்கிழமை பிரதோஷ நேரமான மாலை நேரத்தில் நரசிம்மர் கோவிலுக்கு போய் மஞ்சளும் தேனும் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம். கடன் சுமை அதிகமாக இருக்கும் பொழுது, நாம் சனிக்கிழமையில் சனி ஹோரையில் ஆஞ்சநேயரை அல்லது விநாயகரை வணங்க வேண்டும். இவர்கள் இருவரையும் வணங்கி வரும் பொழுது நம்முடைய கடன் சுமை குறையும். பெரிய கோவில்களுக்கு செல்லும் போது அங்குள்ள யானையிடம் ஆசி பெறுவது நல்லது. இதன் மூலம் கண் திருஷ்டி நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். கடன்பட்டவர்கள் திருப்பி தரும் போது குளிகை நேரத்தில் கடனை திருப்பி தர விரைவில் கடன் அடைபடும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications