Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்யாண உற்சவம்..ஆர்ஜித பிரம்மோற்சவம்..திருமலை ஏழுமலையான் கோவில் டிக்கெட் இன்று வெளியீடு

மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்கள் இன்று மாலை 4 மணிக்கு தேவஸ்தானத்தின் இணையத்தில் வெளியிடப்பட உள்ளன.

Subscribe to Oneindia Tamil

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்கள் இன்று மாலை 4 மணிக்கு தேவஸ்தானத்தின் இணையத்தில் வெளியிடப்பட உள்ளன. குறிப்பிட்ட நேரத்தில், நாளில் பக்தர்கள் இதன் மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

திருப்பதி ஏழுமலையானை ரூ.300 சிறப்பு தரிசனம், சர்வ தரிசனம், விஐபி பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடை தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

Kalyana Utsavam Arjitha Brahmotsavam Thirumalai Eyumalayan Temple Ticket Released Today

இதில், கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை போன்றவற்றில் பங்கேற்று சுவாமியை தரிசிக்கவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதன்படி மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்கள் இன்று மாலை 4 மணிக்கு தேவஸ்தானத்தின் இணையத்தில் வெளியிடப்பட உள்ளன. குறிப்பிட்ட நேரத்தில், நாளில் பக்தர்கள் இதன் மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதேபோல, மீதமுள்ள மேலும் சில ஆர்ஜித சேவை டிக்கெட்களை, அதிர்ஷ்ட சுழற்சி மூலம் பக்தர்கள் இன்று காலை 10 மணி முதல் 24ஆம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். இதில் டிக்கெட் கிடைத்த பக்தர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்தி, தங்களது அதிர்ஷ்ட சுழற்சி டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளம் மூலமாகவோ அல்லது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் TTDEVESTHANAM என்ற மொபைல் செயலி மூலமாகவோ பக்தர்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரியும் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். அதிகாலையில்"கௌசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும். சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து "நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும். விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு. திருப்பதி மலையிலுள்ள ஆகாய கங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும். முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை. மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும். சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும். இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.

சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும். பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதை தரிசிக்க ஒரு நபருக்கு கட்டணம் ரூ.220. இதற்கும் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும். இதற்காக உள்ள "கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி" விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது. முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர். மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு. மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும். அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும். மூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் இதே நைவேத்தியம் படைக்கப்படும். இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது. ஆனால், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் செருப்புலு மற்றும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும்.

Kalyana Utsavam Arjitha Brahmotsavam Thirumalai Eyumalayan Temple Ticket Released Today

கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது. இதை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம். காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும். நமது பெயர், குலம், கோத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே சொல்லிவிட்டால் நமது பெயரில் அர்ச்சனை செய்வார்கள். இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள். சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு "அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர். இதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங்களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும். காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.

கல்யாண உற்சவ சேவை உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும். கல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும். திருமண உற்சவத்திற்கு கட்டணம் ரூ.1000. இரண்டுபேர் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆர்ஜித பிரம்மோற்சவம் ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் வசந்தோற்சவ மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும். மலையப்பசுவாமி தமது உபய நாச்சியார்களுடன் சேஷ, கருட மற்றும் அனுமன் வாகனங்களில் எழுந்தருளி கற்பூர தீபாராதனை ஏற்பது 'ஆர்ஜித பிரம்மோற்சவம்' ஆகும்.

Kalyana Utsavam Arjitha Brahmotsavam Thirumalai Eyumalayan Temple Ticket Released Today

மாலை 4 மணிக்கு கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை "டோலாத்ஸவம் என்பர். அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும். ஆயிரம் ரூபாய் செலுத்தி ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். அவர்களுக்கு 5 லட்டு, ஒரு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத்துணி தரப்படும். மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நிறைவடையும்.

ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 4.50 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் ஆயிரம் தீபங்கள் செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும். திருமலை வேங்கடவன் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கொலு மண்டபத்தில் ஆயிரம் தீபங்களுக்கு மத்தியில் இருக்கும் ஊஞ்சலில் கோடி சூர்ய பிரகாசம் உடையவராக தரிசனம் தருவது 'சகஸ்ர தீப அலங்கார சேவை' எனப்படும். இதற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் உண்டு. 5 பேர் பங்கேற்கலாம். அவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும். திருமணமானவர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்பது சிறப்பானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+