திருப்பதி ஏழுமலையான் திருக்கல்யாண வைபவத்தை கண் குளிர பார்க்க வேண்டுமா? காலை 10 மணிக்கு ரெடியாகுங்க!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானின் கல்யாண உற்சவம் டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிடுகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ 1000. ஒரு டிக்கெட்டில் இருவர் கலந்து கொள்ளலாம்.
சுவாமி திருக்கல்யாண வைபவம் நடக்கும். இதில் தம்பதியாக கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். அடுத்த ஆண்டு 2025, ஜனவரி மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் முன்பதிவு கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. பிற தரிசன டிக்கெட்டுகளும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகளை பெற அக்டோபர் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம்.

இவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களின் பெயர்கள் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது. அவர்கள் 23 ஆம் தேதி பகல் 12 மணிக்குள் பணம் செலுத்தினால் போதும். அவர்களுக்கான ஆர்ஜித சேவை உறுதியாகும். அது போல் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகளும் வெளியாகிறது.
அது போல் மெய் நிகர் சேவை டிக்கெட்டுகள் 22 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் ஆன்லைனில் வெளியாகிறது. அங்கப்பிரதட்சிண டோக்கன்கள் வரும் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அது போல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும். அது போல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், தீராத நோய் கொண்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் அதே நாளில் மாலை 3 மணிக்கு வெளியாகும்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக ஏழுமலையானை தரிசிக்க ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும். அது போல் தரிசன டிக்கெட் புக் செய்வதற்களுக்கான அறைகள் ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். செல்போனில் TTD எனும் செயலி மூலமும் புக் செய்யலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications