கனவில் வரும் வானவில்... யோகமா? சோகமா?.. முழு நிலவு கனவு வருதா பலனை செக் பண்ணுங்க!
சென்னை: கனவில் வானவில் வந்தால் நம்முடைய மனம் மகிழ்ச்சியாக இருக்கும் காரணம் அது தரப்போகும் நல்ல பலன்கள்தான். முழு நிலவு சிலருக்கு கனவில் வரும். நீல வானமும் மேகக்கூட்டங்களும் கூட கனவில் வரும். இப்படி கனவில் வரும் சம்பவங்களினால் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நம்முடைய ஆசைதான் கனவாக வெளிப்படும் என்று சொல்வார்கள். ஆழ்மனதில் உள்ள எண்ணங்களே கனவுகளாக வெளிப்படும் என்று அறிவியலாளர்கள் கூறுவார்கள். ஆனால் நாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள் கனவு சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆற்றுநீர், கடல் அலை போன்றவற்றை நீங்கள் கைகளால் பிடிப்பது போல கனவு வந்தால் உங்களுக்கு செல்வம் சேர போகிறது என்று அர்த்தம். குளத்தில் அதிகமான தண்ணீர் இருப்பது போல கனவு வந்தால், பெரிய இடத்தில் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று அர்த்தம். வறண்ட குளத்தை கனவில் கண்டால், புதிது புதிதாக செலவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.
கலங்கல் இல்லாத சுத்தமான நீர் ஊற்றைக் கனவில் கண்டால், வாழ்க்கையில் எவ்வித துன்பமும் ஏற்படாது. கலங்கிய சுத்தமற்ற நீர் ஊற்றை கனவில் கண்டால் கஷ்டங்கள் ஏற்படும் என்று குறிக்கும். கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதுபோல கனவு வந்தால், மனதில் நினைத்த செயல்கள் நினைத்தபடியே முடியும் என்று அர்த்தம்.

தண்ணீரில் தத்தளிப்பது போல கனவு வந்தால், புதிதாக உருவான நட்பால் கஷ்டங்கள் ஏற்படும் என்று அர்த்தம். தண்ணீரில் மூழ்குவது போல கனவு வந்தால், உங்களின் குழந்தைகளால் சந்தோஷம் ஏற்பட போகிறது என்று அர்த்தம். மரங்களுக்கும், செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சுவது போல கனவு கண்டால் உங்களுக்கு நன்மைகள் செய்ய பல பேர் வருவார்கள் என்று அர்த்தம்.
நிலவை கனவில் கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும் என்று அர்த்தம். நிலவை மேக கூட்டம் மூடுவது போல கனவு கண்டால் புதிய பிரச்சனைகள் வரப்போவதை உணர்த்துகிறது. வானில் நிலவு பிரகாசமாக இருப்பது போல கனவு கண்டால் செய்யும் தொழிலில் லாபம் அதிகம் உண்டாகும் என்று அர்த்தம். நீல நிற வானம் கனவில் வந்தால் நல்ல பலன்கள் ஏற்படும் என்று அர்த்தம். செக்கச் சிவந்த வானத்தை கனவில் கண்டால் நல்லதல்ல.

மேகக்கூட்டம் கனவில் வந்தால் நீங்கள் சோதனையான காலகட்டத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம். வானவில் கனவில் வந்தால் வாழ்க்கையில் நல்ல பலன்கள் ஏற்படும் என்று அர்த்தம். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.
இடியுடன் மழை பெய்வதைப் போல கனவு கண்டால், சொந்தங்கள் விரோதிகள் ஆவார்கள்.
நட்சத்திரங்கள் வானில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் நோக்கி இடம்பெயர்ந்து செல்வது போல கனவு கண்டால் ஏதோ பிரச்சனைகள் வரப்போவதை உணர்த்துகிறது. நட்சத்திர கூட்டத்தை கனவில் கண்டால் பதவி உயர்வு உண்டாகும் என்று அர்த்தம். வானில் நட்சத்திரத்தை கனவில் கண்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று அர்த்தம். நல்ல கனவுகள் கண்டால் கண் விழித்து எழுந்து விடுவது நல்லது. அதே நேரத்தில் தீய பலன்களை தரக்கூடிய கனவை கண்டால் கண்களை திறந்து இறைவனை வணங்கி விட்டு மீண்டும் உறங்கி விடுவது நல்லது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications