திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. முருகனின் கந்த சஷ்டி விரதம் இருப்போர் என்ன செய்யணும்? கந்தசஷ்டி 2024
சென்னை: கந்தசஷ்டியின் 6ம் நாளான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது.. இந்த தினத்தின் சிறப்புகள் என்னென்ன? சூரசம்ஹாரம் நம்முடைய உடலுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுவது ஏன் தெரியுமா? முருக பக்தர்கள் நாளைய தினம் என்னென்ன செய்ய வேண்டும்?
ஐப்பசி அமாவாசை முடிந்து, பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் திருச்செந்தூரின் தேவ சேனாதிபதி முருகனுக்கும் சூரனுக்கும் இடையே நிகழ்ந்த போரில் சூரனை சம்ஹாரம் செய்து அபாரமாக வெற்றியும் பெற்றார் முருகன்.. இந்த வெற்றியை போற்றும் விதமாகவே, வருடந்தோறும் 6 நாட்கள் மக்கள் சஷ்டி விரதம் அனுசரித்து கந்த சஷ்டி விழாவை கொண்டாடுகிறார்கள்.

கந்த சஷ்டி: தீபாவளி முடிந்து வரும் மறைமதியையடுத்து, 6 நாட்கள் கொண்டாடப்படுவதே கந்த சஷ்டி விழாவாகும். இதற்காக கடைப்பிடிக்கப்படும் சஷ்டி விரதத்தின் பலன்கள் ஏராளம்.. ஆண்டுக்கு 6 நாட்கள் தேர்வு செய்து இந்த விரதத்தை முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்..
கந்தனுக்கு உகந்த சஷ்டி விரதம் இருந்தால் அந்த முருகனே கருப்பையில் பிள்ளையாய் வளர்வான் என்பதையே, சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.. இந்த ஐப்பசி மாதம் வளர்பிறையில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சஷ்டி விரதம்: சஷ்டி விரதம் மேற்கொண்டால், துன்பங்கள் நீங்கும், வேலைவாய்ப்பு பெருகும் கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை சஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு கவலைகள் தீரும் திருமண பாக்கியம் கைகூடும். பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். சூரபத்மனை வதம் செய்த விழா திருச்செந்தூரில் நாளை கொண்டாடப்படுகிறது.
சஷ்டி விரதம் மேற்கொள்வதால், செரிமான சக்தி ஓய்வெடுக்கும்... நோய் எதிர்ப்பு சக்திகள் பெருகும்.. அந்தவகையில், செரிமான சக்தி தான் பார்வதி. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தான் முருகப்பெருமான். உடம்பில் தோன்றும் நோய்தான் அரக்கன்... வெளியில் நடக்கும் அதே போர் உங்கள் உடலிலும் நடக்கிறது.. எனவே, 6 நாட்கள் விரதம் இருந்ததன் பலனாக நோய் என்ற அரக்கனை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் அழிக்கலாம்.
அரக்கன்: எப்படி தன்னுடைய தாயிடமிருந்து சக்தியை பெற்று முருகன் சூரசம்ஹாரம் செய்கிறாரோ, அதுபோலவே, உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி தன்னுடைய தாயான செரிமான சக்தியிடமிருந்து சக்தியை பெற்று நோய்களை வதம் செய்கிறது... வெளியில் முருகனுக்கும், அரக்கனுக்கும் நடக்கும் அதே போர்தான், உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க்கும் நடக்கிறது. இறுதியில் தோற்பது யாராக இருக்கும் என்பதை அனைவருமே அறிவார்கள்.
எனவே, நாளைய தினம் மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.. கந்தசஷ்டியின் முதல் நாள் துவங்கி விரதம் இருப்பவர்கள், எந்த வகையில் விரதம் இருந்தாலும் சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு யார் பிரசாதம் கொடுத்தாலும் அதை சாப்பிடலாம்.. எனினும், நாளை மறுநாள் 8ம் தேதி திருக்கல்யாணம் நிறைவடைந்த பிறகு, அன்றைய மாலைக்கு பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
விரதம் நிறைவு: ஆனால், நாளை ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பவர்கள சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு குளித்து விட்டு, முருகனுக்கு பூஜை செய்து வழிபட்டு, தானம் அளித்த பிறகு, முருகனுக்கு படைத்த நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்...
நாளைய தினம் ஷட்கோண கோலத்தில் 6 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.. அதாவது, "ச,ர,வ,ண,ப,வ" என்ற 6 எழுத்திலும் தீபம் வைத்து வழிபட வேண்டும்.. கந்தனின் படத்திற்கு பூக்களால் அலங்கரித்து வழிபட வேண்டும். நாளை மாலை 4.30 மணிக்கு பிறகே சூரசம்ஹாரம் நடக்கிறது.. எனவே, மீண்டும் ஒருமுறை சூரசம்ஹாரம் முடிந்ததும் குளிக்க வேண்டும்.. அதற்கு பிறகு மீண்டும் 6 தீபங்களையும் ஏற்றி, பூஜிக்க வேண்டும். மீண்டும் சுவாமிக்கு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications