Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனும், தினை மாவும் ரெடியா? நாளை சஷ்டி விரதம் 5ம் நாள்! வேண்டுதலை தரும் கந்தசஷ்டியின் "வேல்" விசேஷம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கந்தசஷ்டி விரதத்தின் 5வது நாளான நாளைய தினம், முருகனை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா? 5ம் நாள் விரதத்தின் விசேஷ சிறப்புகள் என்னென்ன? இந்த பூஜையை செய்வதன் மூலம் என்னென்ன பலன்களை பெற முடியும்? சுருக்கமாக பார்க்கலாம்.

கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் குளிர்ந்த தண்ணீரில் தினமும் 2 நேரம் குளித்து, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூ வைத்து, தீபம் ஏற்றி, கற்பூரம் காட்ட வேண்டும். சஷ்டியில் 7 நாட்களும் அருகிலுள்ள முருகப்பெருமான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தை கேட்பதும் அவசியம்.

spirituality kandha sashti viratham skandha sashti vratham 2024

உபவாசம்: 7 நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், சூரசம்ஹாரம் அன்று மட்டும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இரவு தரையில் கம்பளம் விரித்து தான் தூங்க வேண்டும். சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் கந்தசஷ்டி கவசம் படிக்கலாம் அல்லது ஓம் சரவண பவ மந்திரத்தையும், முருகா என்ற திருநாமத்தையும் நாள்தோறும் உச்சரித்தபடியே இருக்க வேண்டும். ஆனால், சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் எக்காரணம் கொண்டும் அசைவ உணவு சாப்பிடக்கூடாது... யாரையும் திட்டவோ, கோபமாக பேசவோ கூடாது.

அந்தவகையில், கந்தசஷ்டி விரதத்தின் 4வது நாள் இன்று நவம்பர் 5ம் தேதி போற்றப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் ஷட்கோண தீபம் ஏற்றி வழிபடுபவர்கள் தீபங்களை ஏற்றி வழிபட்டு வருகின்றனர்..

தீப வழிபாடு: விரதத்தில் ஈடுபடுவோர், ஷட்கோண கோலத்தின் மத்தியில் "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை எழுதி, அதைச்சுற்றிலும் உள்ள 6 நட்சத்திரங்களில் "சரவண பவ" என்று எழுதி, முதல் நாளில் "ச" என்ற எழுத்தின் மீதும், 2வது நாளில் "ர" என்ற எழுத்தின் மீதும் தீபம் ஏற்றிய நிலையில், நேற்று 3வது நாளில் "வ" என்ற எழுத்தையும், இன்று 4வது நாளில் சரவணபவ எழுத்துக்களில் "ண" என்ற எழுத்தின் மீது தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறார்கள்.

இந்த கந்த சஷ்டி விழாவின் 5ம் நாள் நாளை 6ம்தேதி வருகிறது.. சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகப் பெருமான், அன்னை பராசக்தியிடம் இருந்து சக்தியை பெறுவதே இந்த 5ம் நாளின் சிறப்பாகும்.

வாழைப்பழம்: நாளை 5வது நாளில், ஷட்கோண கோலத்தில் "ப" என்ற எழுத்தில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்... நாளையும் காலை, மாலை இரு வேளையும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். என்னென்ன பழங்கள் கிடைக்கிறதோ அவைகளை நைவேத்தியமாக வைத்து வழிபடலாம்.. பழங்களே வாங்க முடியாமல் போனாலும், 2 வாழைப் பழங்களை வைத்து வழிபடலாம்.

நாளை வேலுக்குரிய தினம்.. எனவே, வேல் வழிபாடு செய்வது அவசியம்.. பூஜையின்போது, வேல் இருந்தால், தண்ணீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தத்தில் அபிஷேகம் செய்யலாம்.. அல்லது முருகனின் படத்தில் இருக்கும் வேலுக்கு சந்தனம், குங்குமம் வைக்கலாம். வேல் விருத்தம் படிக்கலாம்.

வழிபாடுகள்: தேன், திணை மாவு, பழங்கள் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.. பிறகு முருகன் கோவிலுக்கு கொண்டு சென்று பிரசாதமாக வழங்கலாம். இந்த வேல் வழிபாடு செய்யும்போது, பகைமையை வெல்ல முடியும்.. உங்களுக்கான தடைகளையும் உடைதெறிய முடியும்.. இந்த நாளில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வழிபட்டுவிட்டு, மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் தானத்தை செய்து விட வேண்டும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+